Published: 22 அக் 2018
நான் ஹால்மார்க் முத்திரை இடப்படாத தங்கத்தை வாங்கினால் என்னவாகும்?
ஹால்மார்க் முத்திரையிடுவது இந்தியாவில் தன்னார்வ திட்டமாக இருந்தால், ஹால்மார்க் நகைகளை வாங்குவது ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது? ஏனென்றால் இந்த ஹால்மார்க் தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது மேலும் அது பிஸ் (இந்திய தர நிர்ணய அமைப்பு) ஆல் அமைக்கப்பட்ட தர நிலைகளை பினபற்றுகிறது என்பதை உறுதி செய்கிறது.
ஹால்மார்க் தங்க நகைகளை மட்டுமே வாங்குவது ஏன் முக்கியமானது என்பதைப் பற்றி இன்னமும் நீங்கள் நிச்சயமில்லாமல் இருந்தால், நீங்கள் அப்படி வாங்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
தங்கம் வாங்கும்போது
பல வியாபாரிகள் தூய்மை மற்றும் தரம் பற்றி அவர்களின் வார்த்தையை மட்டும் நம்பி ஹால் மார்க் முத்திரையிடப்படாத தங்க நகைகளை வாங்குமாறு வற்புறுத்துவார்கள். அவர்கள் தள்ளுபடியை கூட வழங்குவார்கள். இருந்தாலும், நீங்கள் ஒரு முக்கியமான முதலீட்டை செய்யும்போது நீங்கள் எதற்றும் வாய்ப்பளிக்க விரும்ப மாட்டீர்கள்.
அத்தகைய ஒரு ‘பேரத்திற்கு’ நீங்கள் ஒப்புக்கொண்டு வாங்கினால், அந்த தங்க நகையின் தூய்மை பற்றி ஒருபோதும் உங்களுக்கு நிச்சமாக தெரியாது. உண்மையில், நீங்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ற பொருளை பெறவில்லை என்பதற்கு ஒப்பாகும். ஒரு ஹால்மார்க் என்பது உங்கள் தங்க நகையைப் பற்றிய மிக நுணுக்கமான விவரங்களை வழங்குகிறது, இதில் பிஸ் தங்க தரநிலை முத்திரை, தூய்மை தர வரிசை, மதிப்பீட்டு குறியீடு மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை மற்றும் நகைக்கடை அல்லது உற்பத்தியாளரின் முத்திரை ஆகியவையும் அடங்கும்.
இது தொடர்பாக: ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே ஏன் வாங்க வேண்டும்?
மேலும், ஒரு தங்க நகையைத் தயாரிக்கும்போது ஒரு பெரிய வடிவத்தை உருவாக்க சிறிய தங்கத் துண்டுகள் பற்றவைக்கப்பட்டு இணைக்கப்படும் அல்லது ஒட்டப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சிறிய தங்கத் துண்டுகள் பெரும்பாலும் இதர உலோகங்களுடன் உலோகக் கலப்பு செய்யப்படுகிறது, இது இறுதியாக உங்களுக்கு விற்கப்படும் தங்க நகையின் தூய்மையை குறைக்கிறது. நீங்கள் ஹால்மார்க் முத்திரையிடப்படாத நகையை வாங்கினால் இறுதியில் நீங்கள் பெறும் தங்க நகையின் தூய்மைக்கான உத்திரவாதத்திற்கு வழி இல்லை.
தங்கத்தை விற்கும்போது அல்லது மறுசுழற்சி செய்யும்போதும
நீங்கள் ஹால்மார்க் முத்திரை இடப்படாத தங்க நகைகளை விற்க விரும்பினால் அதற்கான நியாயமான விலையை பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஏனென்றால் ஹால்மார்க் முத்திரை இடப்படாத தங்கத்தின் கேரட் மதிப்பளவை சரிபார்க்க முடியாது. மேலும் கேரட் மதிப்பளவு குறித்த உங்கள் கூற்றோ அல்லது நகைக்கடையின் சுய சான்றிதழோ கூட போதுமானதாக இருக்காது.
மேலும், நீங்கள் விற்பதற்கு முன்பாக உங்கள் தங்க நகையின் கேரட் மதிப்பளவை தெரிந்துக் கொள்ள விரும்பினால் ஸ்பெக்ட்ரோ மீட்டரை வைத்திருக்கும் ஒரு கடைக்கு எடுத்து செல்ல வேண்டும். அவர் கட்டணம் வசூலித்து இந்த சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் தங்க நகைகளின் தூய்மையை பரிசோதித்துச் சொல்வார்கள். ஆனால் மீண்டும், உங்களிடம் மதிப்புடைய ஆதாரம் இல்லையென்றால், நீங்கள் நகைக் கடைக்காரரின் வார்த்தைகளை தான் நம்ப வேண்டும். எனவே, ஹால்மார்க் நகைகளை வாங்குவதை வலியுறுத்துவதே எப்பொழுதும் சிறந்ததாகும், இதனால் அதை விற்கும்போது நீங்கள் அத்தகைய பிரச்சனைகயை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.
இது தொடர்பாக: தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஹால்மார்க் தர முத்திரையானது நீங்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பின்னர் அதை விற்கும் போதோ மறுசுழற்சி செய்யும் போதோ நீங்கள் நியாயமான விலையை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது. ஹால்மார்க் முத்திரையில்லாத தங்க நகைகளை வாங்கும் வாயப்பு கிடைக்கும்போது, ஹால்மார்க் முத்திரை உள்ளவற்றையே தேடுவது புத்திசாலித்தனமாகும்.