Published: 12 செப் 2017
ஜவேரி பஜார் – தங்கத்தை விரும்புபவர்களுக்கான சொர்க்கம்
"சோனே கி சிடியா" (தங்கப் பறவை) என பெரும்பாலும் குறிப்பிடப்படும் இந்தியா, அதன் நேர்த்தியான மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களுடன் கூடிய தங்க ஆபரணங்களுக்காகப் புகழ்பெற்றது ஆகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள "விருப்பமான- தங்க" நகைகள் சந்தைக்கு வாங்குபவர்கள் வருவதைக் காணலாம். இந்தியாவில் உள்ள அனைத்து நகை சந்தைகளிலும், செல்வச் செழிப்பு மிக்க நகரான மும்பையை சேர்ந்த ஜவேரி பஜார் ஆனது நகை வாங்குபவர்களுக்கான சொர்க்கமாகக் கருதப்படுகிறது.
"ஜவேரி" என்ற வார்த்தைக்கு "நகை" என்று அர்த்தமாகும், மற்றும் "பஜார்" என்ற வார்த்தைக்கு சந்தை என்று அர்த்தமாகும். இந்த 150 ஆண்டுகள் பழமையான நகை சந்தையானது புலேஷ்வரில் அமைந்துள்ளது, இது க்ராஃபோர்டு சந்தை மற்றும் மும்பையில் உள்ள மும்பாதேவி பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது. ஜவேரி பஜார் என்பது 7,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கடைகள் நிறைந்த பரந்த சந்தை ஆகும்; இந்தக் கடைகளில் சில 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை ஆகும். இந்தக் கடைகளில் சிறியது என்பது 150 சதுர அடி அளவுக்கு சிறியதாக இருக்கலாம், எனினும், பெரும்பாலான கடைகளில் அவற்றின் வருவாய் கோடிக்கணக்கை கடந்து இருக்கும். குறுகிய சந்துகளின் காரணமாக கடைகளைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும்; ஒரு குறிப்பிட்ட கடைக்கு செல்வது என்பது வாங்குவோரிடம் அதற்கான முகவரி இருந்தால் கூட, அது ஒரு கடினமான பணியாகும். இந்தக் கடைகளை அவற்றின் எண் மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும்.
ஜவேரி பஜார் என்பது நகைக் கடைகளுக்கான மிகப்பெரிய மையமாக உள்ளது. சில கடைகள் நகைகள் மற்றும் இரத்தினக்கற்களை மறுவிற்பனை செய்கின்றன.
நகைக் கடைகள் தவிர, ஜவேரி பஜாரின் மற்றொரு முக்கியமான அடையாளமாக தரம்காந்தா உள்ளது. இது தங்கத்தின் தூய்மையை அடையாளம் காண்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்க, சுமார் 70-80 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு பழைய கடை ஆகும். இந்தக் கடையில், ஒரு உயர்ந்த மெத்தையின் மீது பொற்கொல்லர் அமர்ந்து, கொண்டு வரப்படும் பொருட்களின் தூய்மையை சரிபார்க்கும் தனது ஊழியர்களைக் கண்காணிக்கிறார், ஹால்மார்க் செய்யப்படாத நகைகளை பரிசோதனை செய்வதில் அவர்கள் பிரபலமாக உள்ளனர். சிறிய கட்டணமாக ரூ.150-200 வசூலித்து தங்கத்தின் தூய்மை குறித்து அவர்கள் அளிக்கும் சான்றிதழே இறுதியானதாகும், அது இந்தியாவில் உள்ள அனைத்து நகைக்கடைக்காரர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அக்ஷய திரிதியை, தந்தெராஸ் மற்றும் குடிபத்வா போன்ற திருவிழா நேரங்களில் தரம்காந்தா பெரும்பாலும் கூட்டங்களால் நிரம்பிவழியும்.
ஜவேரி பஜார் என்பது இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் ஒரு "கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய" இடமாகும். தங்கம் வாங்குவதற்காக மும்பைக்கு வருகை தர விரும்புபவர்களை அங்கே செல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.