Published: 25 நவ 2024

நகாஷி நகைகளின் தங்க வரலாற்றைப் பற்றி அறியலாம் வாங்க

நகாஷி நகைகளின் வரலாறு

தமிழ்நாட்டின் நுணுக்கமான கைவேலைப்பாடு செய்யும் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ஒன்று மற்றும் இக்கலை பல தலைசிறந்த படைப்புகளை நமக்குத் தந்துள்ளது. அத்தகைய கலைப் படைப்புகளில் ஒன்று கோயம்புத்தூர் நகாஷி நகைகள் ஆகும், இது இந்த மாநிலத்தின் கலாச்சாரத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நகாஷி நகைகளின் தங்க வரலாறு தலைமுறை தலைமுறையாக செழிப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக திகழும் அதன் ஆழமான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நாகாஷி நகைகள் கடவுளை அலங்கரிக்க வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய நகைகளான டெம்பிள் ஜுவல்லரியில் இருந்து பிறந்தவை. பல ஆண்டுகளாக, நகைகளை உருவாக்கும் விதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களால் இந்த இரு வடிவங்களும் ஒன்றோடொன்று கலந்து தற்போது இருக்கும் நவீன கால டெம்பிள் ஜுவல்லரியாக மாறியுள்ளது.

நகாஷி நகைகளின் தங்க வரலாறு மற்றும் அதை உருவாக்கும் தெய்வீகமான மற்றும் நுட்பமான செயல்முறை பற்றி அறியலாம் வாங்க. கைவினை கலைஞர்களான விஸ்வகர்மா சமூகத்திற்கான ஆன்மீக முக்கியத்துவத்தையும் இந்த நகைகளில் வெளிப்படும் பல நேர்த்தியான வடிவங்களையும் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

கோயம்புத்தூர் நகாஷி ஜூவல்லரியின் தங்க வரலாறு

இந்தியாவின் பல பகுதிகளில், தங்கம் எப்போதும் செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. நாகாஷி நகைகளில் தங்கத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை வடிவமைப்பதில் சமுத்திர மந்தன் போன்ற புராணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நகைகள் செய்யும் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வளமான கைவினைத்திறனின் நீண்ட பாரம்பரியத்துடன், ஆரம்பத்தில் நகாஷி நகைகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டன. 22 காரட் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் தமிழ்நாட்டின் கோவில்களின் கோபுரங்கள் (நுழைவு கோபுரங்கள்) மற்றும் மண்டபங்கள் (சடங்குகள் நடக்கும் புனிதமான பகுதிகள்) ஆகியவற்றின் வடிவங்களால் உந்தப்பட்டு டிஸைன் செய்யப்பட்டன.

தெய்வங்களுக்கு நேர்த்தியான கோயில் நகைகளை உருவாக்கும் பாரம்பரியம் 9 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தில் தொடங்கியது. கலை மற்றும் கட்டிடக்கலையின் ஆதரவிற்காக புகழ்பெற்ற இந்த காலகட்டத்தின் கோயில் நகைகளில் பல இந்து தெய்வங்கள் காணப்படும். இந்த பாரம்பரியம் விஜயநகர் பேரரசின் கீழ் தொடர்ந்து பின்னதாக நகாஷி நகைகள் உருவாவதற்கு வழிவகுத்தது.

இன்று, விஸ்வகர்மா சமூகம் இந்த கலைப்படைப்பின் பாதுகாவலராக உள்ளது, மேலும் பெரும்பாலானவர்கள் இதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் ஒரு வழிபாட்டுச் சடங்காகவே கருதுகின்றனர். நவீன காலப் பெண்கள் செல்வம் மற்றும் செழிப்புக்கான ஆசீர்வாதங்களைப் பெற நகாஷி நகைகளை வாங்குகிறார்கள். பழங்கால திருமண கோயில் நகைகள் முக்கிய நாட்கள் மற்றும் சடங்குகளில் பல பெண்களின் தோற்றத்தை அலங்கரிக்கின்றன.

 

நகாஷி நகைகளில் உள்ள வடிவங்கள்: இயற்கை மற்றும் தெய்வங்களால் உந்தப்பட்ட டிஸைன்கள்

டெம்பிள் ஜுவல்லரி நகைகளின் ஒரு வகையான நகாஷி நகைகள், கோயில் சுவர்களில் காணப்படும் செழுமையான கலைப்படைப்பிலிருந்து உந்தப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்து புராணங்களில் இருந்து துணுக்குகளைக் காண்பிக்கும், இது பெரும்பாலும் லக்ஷ்மி, முருகர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணு போன்ற கடவுள்களின் உருவங்களைக் கொண்டிருக்கும். கடந்த பல ஆண்டுகளாக நகாஷி நகைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன, இதன் விளைவாக முகலாய காலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் இயற்கை வடிவங்களையும் இந்த நகைகளில் சேர்க்கத் தொடங்கினர்.

நகாஷி நகைகளில் காலம் காலமாக பயன்படுத்தப்படும் இந்த குறியீடுகள் வெறும் அலங்காரத்திற்காக செதுக்கப்படுபவை அல்ல. அவை தமிழ்நாட்டின் வளமான வரலாற்றின் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கோயம்புத்தூர் டெம்பிள் ஜுவல்லரிகளில் நீங்கள் கவனிக்கக்கூடிய சில பொதுவான வடிவங்கள் பின்வருமாறு-

  • லட்சுமி தேவியின் சித்தரிப்புகள் - செல்வம் மற்றும் செழிப்புடன் இவற்றிற்கு இருக்கும் நெருங்கிய தொடர்பைக் கருத்தில் கொண்டு, லட்சுமி தேவியால் ஈர்க்கப்பட்ட உருவங்கள் நகாஷி நகைகளில் பெரும்பாலும் காணப்படும் ஒன்றாக உள்ளது.
  • சிவன் மற்றும் பார்வதிக்கு தொடர்புடைய சித்தரிப்புகள் - இந்த சித்தரிப்புகள் சக்தி மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்துகின்றன, இது பிரபஞ்சத்தின் தெய்வீக சமநிலையை குறிக்கிறது.
  • மலர் உருவங்கள் - டெம்பிள் ஜுவல்லரியில் முகலாயர்களின் பங்களிப்பு இந்த நகைகளில் இயற்கை அழகை சேர்க்க இவற்றின் இன்றியமையாத பகுதியாக மலர் உருவங்களைச் சேர்க்க வழிவகுத்தது.
  • கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் சித்தரிப்புகள் - கடவுள் கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை டெம்பிள் ஜுவல்லரியில் காணலாம், இவை நேர்த்தியையும் கருணையையும் குறிக்கும் வகையில் இந்த நகை வடிவமைப்புகளில் அடிக்கடி சேர்க்கப்படுகின்றன.
  • விலங்குகளின் சித்தரிப்புகள் - மயில்கள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகளின் உருவங்களும் நகாஷி நகைகளில் பொதுவானவை மேலும் இவை அழகு மற்றும் சக்தியைக் குறிக்கின்றன.

 

நகாஷி நகைகளை உருவாக்கும் செயல்முறை

விஸ்வகர்மா சமூகத்தில் உள்ள கைவினை கலைஞர்களின் தலைமுறைகள் வழியாக கடத்தப்பட்ட நகாஷி நகைகளை உருவாக்குவது கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக செயல்முறையாகும். இந்தக் கோயில் நகைகளை உருவாக்குவதை ஒரு வழிபாட்டுச் செயலாகவே கைவினை கலைஞர்கள் கருதுகின்றனர். இந்த நகைகளின் ஒவ்வொரு பகுதியும் பயபக்தியுடன் உருவாக்கப்படுவதோடு, நுணுக்கமான படிப்படியான செயல்முறையும் பின்பற்றப்படுகிறது -

  • கருத்தாக்கம் மற்றும் வரைதல் - நகாஷி நகைகளின் டிஸைன்களுக்கான உத்வேகம் பொதுவாக பண்டைய கோயில் சுவர்களில் இருந்து வருகிறது. டெம்பிள் ஜுவல்லரி செட்டின் டிஸைனை திட்டமிடத் தொடங்க கைவினை கலைஞர்கள் கடவுள் மற்றும் தெய்வங்களின் கதைகளின் அடிப்படையில் விரிவான டிஸைன் கான்செப்டுகளை உருவாக்குகின்றனர்.

drawing jewellery

  • எம்பாஸிங் செய்தல் - ஒரு காகிதத்தில் டிஸைன் வரையப்பட்ட பின், அது ஒரு தங்கத் தாளிற்கு மாற்றப்பட்டு, புடமிடுதல் மூலம் இம்ப்ரின்ட் செய்யப்படுகிறது. இது இந்த ஜுவல்லரி செட் டிஸைனின் அடிப்படை அமைப்பை உருவாக்குகிறது.

embossing jewellery

  • விவரங்களைச் சேர்த்தல் - இது இந்த செயல்பாட்டில் மிகவும் நுணுக்கமான படிகளில் ஒன்றாகும் மற்றும் கலைஞர்கள் இந்த படியை ஒரு வழிபாடாகவே கருதுகின்றனர். இந்த கட்டத்தில், பொறிக்கப்பட்ட டிஸைனை ஒரு சுத்தியலை கொண்டு துல்லியமாக பதிக்கின்றனர் கலைஞர்கள்.

detailing

  • சால்டரிங் - இந்த கட்டத்தில், பல மணிநேர உழைப்புக்குப் பிறகு, ஒவ்வொரு டிஸைஸ் பீஸும் தயாரான பின்னர், இவை அனைத்தையும் ஒன்றாக சால்டரிங் செய்வதன் மூலம் இறுதி நகை வடிவம் உருவாக்கப்படுகிறது.

soldering

  • பாலிஷிங்- இறுதியாக, கலைஞர்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட நகாஷி நகைகளில் உள்ள தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களின் பிரகாசத்தை அதிகப்படுத்த அவற்றை பாலிஷ் செய்கின்றனர்.

polishing

 

நகாஷி நகைகளின் பாரம்பரியத்தைத் தழுவுதல்

Nakashi necklace

மத வழிபாடு மற்றும் கைவினைத்திறன் போன்ற வளமான பாரம்பரியத்துடன், நாகாஷி நகைகள் பாரம்பரிய கோயில் நகைகளின் அழகிற்கு ஒரு சான்றாகும். நகாஷி நகைகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் வரலாறு கலைத்திறனின் பதிவாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் உருவகமாகவும் உள்ளது.

மிக முக்கிய நிகழ்ச்சிகளில் அணியும் ஸ்டேட்மென்ட் பீஸ்கள் முதல் ஃப்யூஷன் தோற்றத்தை உருவாக்கும் விரிவான அலங்காரங்கள் வரை என, நகாஷி நகைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண்ணின் அலமாரிகளிலும் இடம் பெறுகின்றன. தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட பழங்கால நகைப் பெட்டிகளாக இருந்தாலும் சரி அல்லது மணப்பெண்கள் அணியும் நவீன கால டிஸைன்களாக இருந்தாலும் சரி, இந்த நகை வடிவமைப்புகளின் ஆன்மீக முக்கியத்துவம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது.