Published: 20 பிப் 2018
உங்களை மலைக்கச் செய்யும் இந்தியாவிலுள்ள 4 தங்கக் கோயில்கள்
தங்கமானது உலகில் மிகுந்த பேரார்வத்துடன் வாங்கப்படும் உலோகமாகும். வெவ்வேறு சகாப்தங்களில் மனித இனத்தின் கலாசாரம் மற்றும் நாகரிகம் வித்தியாசமாக இருந்திருக்கின்றன, அதில் இந்த மஞ்சள் உலோகத்தை மெச்சிக் கொள்ளாமல் மரியாதை செலுத்தாமல் இருக்க முடியாது. இது கட்டடக் கலையில் பயன்படுத்தப்பட்டால் வெப்பத்தைப் பிரதிபலித்து மின் கட்டணம் மற்றும் கார்பன் கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவற்றைக் குறைக்கிறது. அநேகமாக, அதன் வெப்ப கதிரியக்கத்தைப் பிரதிபலிக்கும் இயல்பினால் தங்கம் நமது பண்டைய பொறியியல் வல்லுநர்கள் மற்றும் கட்டிடக் கலை வல்லுநர்களின் தனிப்பட்ட விருப்பமாக இதை ஆக்கியிருக்கலாம்! இந்தியா தங்கத்தின் பயன்பாட்டில் கட்டடக் கலை மற்றும் கோயில்களில் சில சிறந்த பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது. கோயில்களின் தங்க மேற்பூச்சு அதன் சுற்றுப்புறங்களை கோடை காலங்களில் குளிர்ச்சியாகவும் மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நமது புராதன கோயில்கள் சிலற்றின் கட்டடக் கலை அற்புதங்களைப் பற்றி பார்த்து உள்ளார்ந்த நுண்ணறிவைப் பெறலாம் வாருங்கள்:
-
பத்மநாப ஸ்வாமி கோயில், திருவனந்தபுரம், கேரளா
இந்தக் கோயில் கேரள மற்றும் திராவிட பாணி கட்டடக் கலையின் மிகச்சிறந்த கலவை ஆகும். இங்குள்ள ஒற்றைக் கல் மண்டபம் ஒற்றை கிரானைட் பலகையில் கட்டுமானிக்கப்பட்டது. அது 2.5 அடி தடிமனும் மற்றும் 20 அடி சதுர அடி பரப்பளவும் கொண்டது. அதன் கிரானைட் தூண்கள், தங்கத்தால் மூடப்பட்டுள்ளன. மேற்கு நடைவழிக்கு அருகில் த்வஜ ஸ்தம்பம் இருக்கிறது. ஒரு எண்பது அடி உயரமான தூண் அருகாமையிலுள்ள காட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. சாஸ்திரங்களின் படி தேக்கு மரம் (இந்த தூணில் பயன்படுத்தப்பட்டது) போக்குவரத்துகளின் போது தரையை தொடக்கூடாது. இந்தத் தூண் முழுமையாக தங்க மென்தகடுகளால் மூடப்பட்டு்ள்ளது. இந்த கோயிலின் ஏழடுக்கு கோபுரம் திராவிட கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகும். இந்த 35 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தின் 7 தங்க விமானங்கள், ஏழு உலகங்களைக் குறிப்பிடுகின்றன.
-
தங்கக் கோயில், அமிர்தசரஸ்
1577 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தங்கக் கோயில் இந்து மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலை பாணியின் மனம் கவரும் கலவையாகும். தாஜ்மஹாலில் காணப்படுவது போல இதன் அடிப்புறமானது நேர்த்தியான சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் விலங்குகள் மற்றும் மலர்களின் உருவங்கள் (பைட்ரா ட்யூரா வேலைப்பாடு) அலங்கரிக்கப்பட்டுள்ளன. உச்சியில் 750 கிலோகிராம் தூய தங்கத்தால் மூடப்பட்ட கோபுர கலசத்துடன் விரிவாக செதுக்கப்பட்ட தங்கப் பலகைகள் இணைக்கப்பட்டு, இங்கு ஜொலிக்கும் இரண்டாவது நிலை எழுகிறது,
-
வேலூர் தங்கக் கோயில், தமிழ்நாடு
இந்தக் கோயிலின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களில் ஒன்று இங்குள்ள மஹாலக்ஷ்மி அல்லது லக்ஷ்மி நாராயணி கோயிலாகும். அதில் அர்த்த மண்டபம் மற்றும் விமானத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தூய தங்கத்தால் மேற்பூச்சு பூசப்பட்டுள்ளது. 100 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்துள்ள இந்தக் கோயில் நூற்றுக்கணக்கான திறமையான தங்க அலங்கார வேலைப்பாட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகளுடைய சிற்பங்களைக் கொண்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் தங்கத் தட்டுக்கள் மற்றும் தகடுகளால் மூடப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானச் செலவு சுமார் 300 கோடியாகும் (65 மில்லியன் அமெரிக்க டாலர்). இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு 1500 கிலோகிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி
கட்டப்பட்ட இந்த புகழ்பெற்ற கோயிலும் தங்கக் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலை 1780 ஆம் ஆண்டு மராத்திய அரச பரம்பரையைச் சார்ந்த மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கர் கட்டினார். இந்தக் கோயிலின் இரண்டு கோபுரங்கள் பஞ்சாப் கேசரி மஹராஜா ரஞ்ஜித் சிங்கால் கொடையளிக்கப்பட்ட தங்கத்தால் மூடப்பட்டுள்ளது. மூன்றாவது கோபுரம் உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தங்கத்தால் மூடப்பட்டுள்ளது.
இந்தக் கோயில்கள், பண்டைய இந்தியக் கட்டடக் கலையானது மிகச்சிறந்த கட்டடக் கலை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு என்பதை நிரூபிக்கின்றன.