Published: 05 டிச 2018
இந்தியத் திருமணங்களில் தங்கத்தின் மகிமை
உலகிலேயே தங்கத்திற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், தங்க நாணயங்கள் அல்லது கட்டிகளாக அல்லாமல், நகைகள் வடிவில் தங்கத்தை வாங்குவதற்கே இந்தியர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயமே ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியக் கலாச்சாரத்தில் தங்கம் ஒரு முக்கியப் பங்காற்றுகின்ற அதேநேரத்தில், தங்க நகைகள் பல நூற்றாண்டுகளாகவே ஆபரணத்தின் முதன்மை வடிவமாக இருந்து வருகிறது.
ஒரு தனிமனதருடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கிய மைல்கல்லுமே தங்கம் வாங்குவதுதான் என்பதை ஒருவர் நிச்சயம் உணர்ந்திருக்கலாம். பெரும்பாலான பருவமாற்ற நிலைகளோடும் சில முக்கியத்துவம் வாய்ந்த அல்லது பிறவகை சடங்குகள் தங்கத்துடனே சம்பந்தப்பட்டிருக்கின்றன, இவற்றில் திருமணங்கள் பிரதான உதாரணமாகும்.
உலகம் முழுவதிலும் உள்ள பல கலாச்சாரங்களும் தங்கம் என்பது சூரியனைக் குறிப்பிடுவதாக நம்புகின்றன. இந்தியாவில், இது சுபகாரியம் மற்றும் புனிதம் என்பதாவும் கருதப்படுகிறது, அதனால்தான் இது திருமணங்களுடன், பொருளாகவும் குறியீட்டுரீதியாகவும் சடங்கு சம்பிரதாயங்களின் பிரிக்க முடியாத பாகமாக அமைந்திருக்கிறது.
திருமணங்களில் தங்கத்திற்கு உள்ள குறியீட்டுரீதியான உறவு குறித்து பார்க்கலாம்.
இந்திய எழுத்தாளரும் புராணீகவியலாளருமான தேவ்தத் பட்நாயக், இந்த முறையில் திருமணங்களின்போது இந்திய மணமகளால் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்களில் உள்ள தங்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளார். சோலாஷ்ரிங்கர் எனும் கருத்தின்படி, ஒரு மணமகள் மங்களகரமானவராக இருக்க அவர் 16 வகையான தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆபரணமாகிய மங்கள்சூத்ரா, ஒரு பெண்ணின் திருமணத் தகுதியை குறிப்பிடுகிறது, அத்துடன் இந்த ஆபரணமானது தங்கத்தாலான ஒரு குண்டலம் அல்லது சின்னஞ்சிறு காப்புகளுடன் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். காப்புகள் தம்பதியினரில் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் ஊட்டச்சத்தை – இது தம்பதியினரில் இருவருக்குமான திருமணத்தின் பரஸ்பர நோக்கமாக கருதப்படுகிறது – குறிக்கின்றன. இது மணமகளுக்கும் மணமகனுக்கும் அவர்களுடைய குடும்பத்தினரால் பரிசளிக்கப்படுகிறது, அத்துடன் அவர்களுடைய இணைவு மிகுந்த வலிமையானதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமாகும் என்பதையும், அவை தங்கத்தைப் போல் தூய்மையானதும் நெகிழ்வானதும் என்பதையும் நினைவுறுத்துவதாகவும் விளங்குகிறது.
புதிய பயணத்திற்கான தொடக்கமாகவும், ஒரு சொத்தாகவும் மங்களகரமான நிலையின் குறியீடாகவே புதிதாக திருமணமானவர்களுக்கும் தங்கம் பொதுவாக பரிசளிக்கப்படுகிறது
நிறையத் திருமணச் சடங்குகளில் தங்கம் அதனுடைய மங்களகரமான தன்மைக்காக கட்டாயமானதாக கருதப்படுகிறது.
நடைமுறை நோக்கத்தில் இருந்து பார்த்தாலும்கூட, கையிலிருக்கும் பணத்தைப் போன்றே தங்கமும் அதற்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக, தங்க நகைகள் வாங்குவது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் தங்கம் ஏன் பெரிய பங்கு வகிக்கிறது என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. திருமணத்திற்கான பொருள் வாங்குவதே எல்லாவற்றைக் காட்டிலும் பெரியதும் மகத்தானதுமாக இருக்கும் நிலையில், ஒருவருடைய வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் தங்கம் வாங்கப்படுகிறது.