Published: 27 செப் 2017
அம்பேத்கரும், தங்கத்தின் தரநிலையும்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் இந்தியப் பொருளாதார நிபுணர் ஜூலை மாதத்தின் ஒரு கோடை நாளில் நியூயார்க் நகரில் கால் பதித்தார். அவரது பெயர் பாபா சாஹேப் ராம்ஜி அம்பேத்கர்.
இந்திய அரசியலமைப்பின் தந்தையாகவும், தலித் தலைவராகவும் அறியப்பட்ட அம்பேத்கர், தங்கத்தின் தரநிலை தொடர்பாக பிரபலமான வழக்கறிஞராகவும் இருந்தார். 20ஆம் நூற்றாண்டில் பொருளாதாரத்தின் கருத்தியலையும், நடைமுறையும் மற்றும் அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளையும் தனது யோசனைகளில் மூலம் மாற்றியமைத்த ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் என்னும் பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர் பரிந்துரைத்தபடி, தங்கப் பரிமாற்றத்திற்கான தரநிலையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எதிராக, தங்கத்தின் தரநிலையை மேம்படுத்தும் வகையில் அவரது நிலைப்பாடு இருந்தது.
லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பாபா சாஹேப்பால் சமர்ப்பிக்கப்பட்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையானது, பின்னர் 1923ஆம் ஆண்டில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வெள்ளியின் தரநிலையின்படி பின்பற்றப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இந்திய அரசாங்கம் போராடிக்கொண்டிருந்தபொழுது, ரூபாயை நிர்வகிப்பதைப் பற்றி அது பேசியது. அந்த நேரத்தில், தங்கத்தின் தரநிலை மற்றும் தங்கப் பரிமாற்ற தரநிலை ஆகியவற்றின் ஒப்பீட்டளவிலான நன்மைகள் குறித்து பொருளாதார வல்லுனர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரவலான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மதிப்பை நீக்கியதிலும், இந்திய நாணயத்தை நிலைநாட்டவும் பல ஆண்டுகளாக காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்தினார். தங்கத்திற்கான தரநிலையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அவர் நம்பினார்.
தங்கப் பரிமாற்ற தரநிலைகளை இந்தியா போன்ற வளரும் நாடு பின்பற்றக்கூடாது என்றும், இது பணவீக்கத்தையும் விலை உயர்வையும் அதிகரிக்கக்கூடும் என்றும் புத்தகம் வாதிடுகிறது. இந்த காரணத்திற்காக, பரிமாற்ற விகிதம் நிலைத்தன்மைக்கு மாறாக, விலை நிலைத்தன்மை மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ரூபாயின் பிரச்சினை என்ற இந்த புத்தகமானது, இந்திய ரிசர்வ் வங்கி குறித்த கருத்தாய்வு ஏற்படவும், இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தப்படவும் வழிவகுத்தது.