Published: 09 ஆக 2017
உங்கள் சருமத்ததிற்கு தங்கம் அளிக்கும் நன்மைகள்
எகிப்திய அரசி க்ளியோபட்ரா ஒரு தங்க முகமூடியை அணிந்து கொண்டு தூங்கினார் என்று உங்களுக்குத் தெரியுமா? தங்கம் சருமத்திற்கு உகந்தது என்று பண்டைய எகிப்தியர்களும் ரோமானியர்களும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் மட்டுமல்ல,. உங்களது சருமத்திற்கு தங்கம் எவ்வாறு பலன் அளிக்கிறது என்று தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
-
விரைவிலேயே வயதாவதைத் தடுக்கிறது
உடலில் உருவாகும் கொலாஜன் என்ற புரோட்டின் சருமத்தின் நெகிழ்தன்மையை பராமரிக்க உதவுகிறது. வயதாக ஆக கொலாஜனின் அளவு குறையத் தொடங்கும். தங்கம் உங்களது கொலாஜன் அளவை நிலையாக வைத்திருக்க உதவும். உங்களது தோலை ஸ்திரமாக வைத்திருக்கவும் உதவும். இதனால் வயதாவதால் தளர்ந்துபோகும் தோல் உங்களுக்கு இருக்காது.
-
உங்களது தோல் சுருக்கங்களை நீக்குகிறது
உங்களது தோலில் உள்ள அடிப்படை செல்களை சுறுசுறுப்பாக்க தங்கம் உதவுகிறது. இதனால் அதன் நெகிழ்வுதன்மை அதிகரிக்கும். இதனால் தோல் சுருக்கங்கள், புள்ளிகள், கரைகள், கோடுகள் ஆகியவை குறைந்த உங்கள் தோல் தெளிவாகும்.
-
தோல் தொற்றுநோயைக் குறைக்கிறது
எரிச்சலுக்கு எதிரான பாக்டீரியாவிற்கு எதிரான குணங்கள் தங்கத்திற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இது ஆன்ட்டி ஆக்சிடன்டாக பணிபுரிகிறது. தோல் செல்களுக்கு ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்கிறது. கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் இதர தோல் ஒவ்வாமைகளைக் குறைக்க இது உதவுகிறது.
-
சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது
கொடுமையான மாசு நிறைந்த சூரிய ஒளி தொடர்ந்து பட்டால் மெலானின் உற்பத்தி அதிகரிக்கும். மெலானின் என்ற நிறமி தோலை கறுப்பாகக் காண்பிக்கும். மெலானின் உற்பத்தியாகும் அளவை குறைக்க தங்கம் உதவுகிறது. இதனால் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. சலூன்களில் தங்க ஃபேசியல்கள் பயன்படுகின்றன. இதனால் சருமத்திற்கு ஈரப்பதமும் வெண்மையும் கிடைத்து கெட்டிப்படும். இதனால் இயற்கையான பொலிவு கிடைக்கும்.
தங்கம் என்பது உங்களது நகைப்பெட்டிக்கானது மட்டுமல்ல, அடுத்த முறை உங்களது சரும பாதுகாப்பு பெட்டியில் நீங்கள் சேர்க்கவிருக்கும் பொருட்களில் முக்கியமான ஒன்றாகும்.