Published: 04 செப் 2017
பூமியைத் தங்கத்தால் மூட முடியுமா?
முழு கிரகத்தையும் தங்கத்தினால் மூடுதல் என்பது, அநேகமாக அளவுக்கதிகமான செல்வங்களைக் கொண்டிருந்த பண்டைய தன்னலக்குழுவின் ஆசையைப் போல் தெரிகிறது. எனினும், இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை தகடாக்க முடியும் என்பதால், மிகவும் மெல்லிய தகடுகளாக அதை பரப்ப முடியும்.
ஆகையால், நம்முடைய ஊகங்களை சிறிது நேரத்திற்கு ஒதுக்கி வைத்து, உண்மையில் இது சாத்தியமா என்று பார்க்க சில உண்மையான எண்களை விரைவாக ஆராயலாம்.
இதைக் கணக்கிடுவதற்கு பின்வரும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்:
1. பூமி கிரகத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது ?தங்கம் எங்கிருந்து வருகிறது என்பதையும், அது ஏன் பூமியில் இருக்கிறது என்பதையும் விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. பூமியில் உள்ள அனைத்து தங்கங்களும் நமது கிரகத்தின் ஆரம்ப நாட்களில் விண்வெளியில் இருந்து வந்த மிகப்பெரிய விண்கற்களின் மூலம் வந்தது என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர், அதே போல் பூமி கிரகம் உருவானது முதலே தங்கம் பூமியில் இருப்பதாக மற்றவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் நமது பயிற்சிக்கான நோக்கத்திற்கு, தங்கத்தின் தோற்றம் என்பது நமக்கு முக்கியம் அல்ல, மாறாக எவ்வளவு தங்கம் நம்மிடம் உள்ளது என்பதே முக்கியமாகும். மணி மெட்டல் எக்சேஞ்ச்1 என்ற பத்திரிக்கையில் உள்ள ஒரு கட்டுரையின்படி, 1493-2016 ஆண்டுகளில் உலகில் மொத்தம் 173,000 மெட்ரிக் டன்கள் அளவு தங்கமானது சுரங்கத்தில் இருந்து தோண்டப்பட்டுள்ளது. 173,000 மெட்ரிக் டன்களில், 91 சதவிகிதம் தங்கமானது கடந்த 66 ஆண்டுகளில் தோண்டப்பட்டுள்ளது.
2. பூமியின் மேற்பரப்பின் அளவு என்ன?பூமி கிரகம் என்பது பால்வீதி வெண்வெளித் திரளில் 5வது மிகப்பெரிய கிரகமாகும், மேலும் நமது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் கிரகத்தின் அளவில் 10% குறைவாக உள்ளது. இது 6,371 கிமீ ஆரம் கொண்டது மற்றும் நாசாவின் புவியியல் உண்மைகள் தாளின்படி, 510.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் மொத்த பரப்பளவு கொண்டுள்ளது.
3. எவ்வளவு தடிமன் கொண்ட தங்கப் படலத்தின் மூலம் நீங்கள் பூமியை போர்த்த முடியும்?மேலேயுள்ள தரவுகள் மற்றும் சில (ஒப்பீட்டளவில்) எளிமையான கணிதத்தைப் பயன்படுத்தி, தங்கப் படலத்தால் பூமியை முழுவதுமாக மூடுவதற்கு மெல்லிய தங்கத்தை எவ்வாறு மடிக்க வேண்டும் என்பதை இப்போது முயற்சி செய்து பார்க்கலாம். கடந்த 500 ஆண்டுகளில் வெட்டப்பட்ட அனைத்து தங்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், வெறும் 0.01757 நானோமீட்டர் தடிமன் என்ற எண்ணிக்கை வருகிறது, இது சராசரியான மனித முடியின் தடிமனில் 1%-க்கும் குறைவாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி என்ற அமைப்பானது தங்கம் என்பது 180 நானோமீட்டர்கள் மெல்லிய தடிமனில் மட்டுமே இருக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது.
எனவே, தங்கத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை விஞ்ஞானம் உருவாக்கும் வரை இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.