Published: 04 செப் 2017
பல்வேறு மதங்களில் தங்கத்திற்கு உள்ள தொடர்பு
தங்கத்தின் நிதி சார்ந்த, சமூக மற்றும் உணர்வுபூர்வமான மதிப்புகளுடன் உலகெங்கும் உள்ள மதங்கள் தங்கத்தை தெய்வீகத்துடனும் தூய்மையுடனும் காண்கின்றன.
நன்னடத்தையின் குறியீடாக உலகளாவிய மத அடையாளம்மதம் சார்ந்த புத்தகங்களில் உள்ள பாடங்கள் தங்கம் சுய தூய்மைக்கான உணர்வை ஊட்டுவதாக நமக்குத் தெரிவிக்கின்றன. இந்த முறையானது சுய மேன்மைக்கான தேடலை உள்ளடக்கியுள்ளது. இதில் நன்னடத்தைகள் சரியான விகிதத்தில் கலந்துள்ளன. ஆன்மிகத்தின் கேடுகளான பேராசை, வெறுப்பு மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து ஒருவர் விடுபடும்போது அவர் தங்கத்தைக் கண்டறிந்தவர் ஆவார். அன்பு மற்றும் இரக்கத்தை உணர்த்த இது பயன்படுகிறது.
நெருப்பு, கடிய உலோகங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மீள்தன்மை கொண்டுள்ளதால் என்றும் நீடிக்கக்கூடியது என்ற மதிப்பு தங்கத்திற்கு உண்டு. எனவே இதற்கு இறைத்தன்மையுடன் தொடர்பு உண்டு.
உலகளாவிய அளவில், தங்கத்தின் பளபளப்பு சூரிய ஒளியின் பிரகாசத்துடன் ஒப்பிடப்படுகிறது. தங்க கடாக்ஷம் உயிர்ப்புத்தன்மை, தெளிவு மற்றும் அறிவுடனான ஆரோக்கியமான வாழ்க்கையை உணர்த்துகிறது.
கிறித்தவம்பத்து கட்டளைகள் (Ten Commandments) வைக்கப்பட்டிருந்த பேழையின் மூடி முற்றிலும் தங்கத்தால் ஆனது. கடவுளின் கட்டளையின் படி அதில் இரண்டு தங்கக் கோணங்கள் உள்ளன. இதற்கிடையில் கடவுள் தோன்றி அவரது பக்தர்களுடன் தொடர்பு கொள்வார். அவர்களது ஆன்மாவிற்கு ஆறுதல் அளிப்பார்.
அது மட்டுமல்ல, குழந்தை ஏசுவை முதன் முதலாக பார்த்த போது குழந்தை ஏசுவிற்கு (மேகி) தங்கத்தையே பரிசாக அளித்தது.
தேவாலயங்களில் உள்ள பிம்பங்களும் தரைதளங்களும் தங்க நிறத்தை பிரதிபலிக்கின்றன. இவை பக்தர்கள் மீது கடவுளின் இறைத்தன்மையையும் பிரம்மாண்டத்தையும் வாரிவழங்கும். ஒரு நாளின் பிரகாசத்தை உணர்த்த தங்கத்துடன் வெண்மையை பய்னபடுத்துமாறு 12ஆவது நூற்றாண்டில் போப்பாண்டவரால் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பிராயச்சித்தம் (பரிகாரம்) போன்ற மற்ற குணங்களை உணர்த்த மற்ற ஐந்து நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கருநீலம், சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை இந்த நிறங்களாகும்.
சுவாரஸ்யமாக talent எனப்படுவது தங்கத்தை எடையிட பயன்படும் அலகாகும். ஒரு டேலன்ட் எனப்படுவது 34.3 கிலோ கிராமாகும். தற்போதுள்ள விலையான கிராமுக்கு ரூ.3,200 என்ற விகிதத்தை வைத்து பார்த்தால், ஒரு டேலன்டானது ரூ.10,97,600க்கு (இது 11 இலட்சத்திற்கு இணையானது) சமமானதாக இருக்கும்.
தொடர்புடையது: தங்கத்தின் மீதான இந்தியாவின் காதலை விளக்கும் 6 எளிய வரைபடங்கள்
பைபிளில் தங்கம் குறித்த பல்வேறு பார்வைகள் உள்ளன.
- ஈடன் தோட்டத்தில் உள்ள ஆற்றினால் செழிப்படையும் தி பிஷான் (The Pishon) , ஹவில்லா(Havilah) என்ற தங்கத்தால் ஆன நிலத்தை சூழ்ந்திருக்கும். ஹவில்லாவில் உள்ள தங்கமானது அதன் தரத்திற்குப் பெயர் போனது
- கடவுளின் மகுடத்தை சுற்றியுள்ள 24 பெரியவர்களும் தங்க கிரீடத்தை அணிந்திருப்பார்கள். தங்க கிண்ணங்களில் தெய்வீகத்தின் சாராம்சத்தை அளிப்பவர் இவர். கடவுளின் துறவிகளுக்கான வழிபாடுகள் தங்கக் கிண்ணங்களில் உள்ளன. இந்த 24 பெரியவர்களும் கடவுளின் கிரீடத்தை சுற்றி அமர்ந்திருப்பவர்கள். இவர்கள் தங்கக் கிரீடம் அணிந்திருப்பவர்கள்.
- மேலும் ஐந்து தங்க நிலங்களும் உண்டு. அவையாவன– ஓஃபிர் (Ophir), பர்வைம் (Parvaim), ஷீபா (Sheba), தார்ஷிஷ் (Tarshish) மற்றும் உபாஸ் ( Uphaz).
- தங்கத்திற்கென பயன்படும் பல்வேறு ஹீப்ரு வார்த்தைகள் உள்ளன. தங்கத்திற்கென பல்வேறு ஹீப்ரு வார்த்தைகள் உள்ளன. இதில் முதலாவதாக பயன்படுத்தப்படட வார்த்தை ஜஹாப் (Zâhâb ). மின்னுவது அல்லது மினுமினுப்பது என்ற பொருளிலிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது. இரண்டாவது வார்த்தையான பாஜ், சுத்தமான தங்கத்தைக் குறிக்க பயன்படுகிறது. ஆன்மிக தூய்மை மற்றும் மேன்மையை இது உணர்த்துகிறது.
பைபிளில் மட்டுமல்ல, ரிவெலேஷன் என்ற தீர்க்கதரிசி புத்தகத்திலும் பல்வேறு இடங்களில் தங்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் ஏழு தங்க விளக்கு ஸ்தம்பங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஜான்னின் பார்வையில் ஏசுநாதர் தங்க ஒட்டியானம் அணிந்து வந்ததாகக், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்(book's prophecies) கூறப்பட்டுள்ளது
இந்த மதம்உலகின் மிகவும் பழமையான மதங்களுள் ஒன்றான இந்து மதம், தங்கத்தை அறிவு, கற்றல், தியானம், மன வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கும் சுத்தமான உலோகமாக உணர்த்துகின்றன.
இந்து பாரம்பரியங்களிலும் மத சடங்குகளிலும் தங்கத்தின் பங்கு அரசியல் காரணங்களின் அடிப்படையிலானது. எடுத்துக்காட்டாக, அணிபவரின் ஆற்றலுக்கும் ஒளிவட்டத்திற்கு நேர்மறையான விளைவை தங்கம் அளிப்பதாக நம்பப்படுகிறது. மங்கல் சூத்ராவில் (மங்கல அணிகலன்) உள்ள தங்கக் கம்பி எதிர்மறை அலைகளை விரட்ட பயன்படுகிறது.
இந்துக்களின் செல்வக் கடவுளான இலக்ஷமி அம்மன், தனது இடது கையின் கீழ்புறத்திலிருந்து தங்க நாணயங்களை கொட்டுவதுபோல் காண்பிக்கப்படும். இந்த தங்க நாணயங்கள் ஆன்மீக மற்றும் பொருள் வளமையைக் குறிக்கும். தங்கபாத்திரங்களிலிருந்து தண்ணீர் அளிக்கும் நான்கு யானைகளும் செல்வம், கடமை, காரியம், ஆசை, அறிவுடன் கூடிய மோட்சம், தூய்மை, கொடை ஆகியவற்றை பிரதிபலிப்பவை. தர்ம தேவனான எமன் ஒரு நெருப்புக் கண்ணாடியையும் தங்க அளவு கோலையும் வைத்திருப்பதாகக் காண்பிக்கப்படுவார். இந்த உலகிலிருந்து நீங்கி மறு உலகிற்கு செய்யும் ஆன்மாக்களை அளக்க இந்த தங்க அளவுகோல் உதவும் என்று நம்பப்படுகிறது.
பக்தர்கள் மத்தியில் கடவுளின் சக்தியையும் ஞானத்தையும் பிரதிபலிக்க தங்க ஒளிவட்டங்களுடனும் தங்க உடையுடனும் கோவில்களில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சீக்கியம், பௌத்தம், ஜூடாயிசம், இஸ்லாம் என அனைத்து மதங்களும் தேவர்களின் இருப்பிலும் நம்பிக்கையிலும் உள்ள புனிதத்தன்மைக்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பை கூறியுள்ளன.
சீக்கிய மதம்இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள அழகிய பொற்கோவில் சீக்கியர்களுக்கு தங்கத்துடன் உள்ள தொடர்பை விளக்கும். சாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து இவற்றை தாண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொற்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 1830ஆம் ஆண்டு மகாராஜா இரஞ்சித் சிங், ஹர்மீந்தர் சாகிப்பில் உள்ள குருதுவாராவை 162 கிலோ தங்கத்தால் இழைத்தார். இதன் அப்போதைய மதிப்பு ரூ.65 இலட்சம் . இது கட்டப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இவ்வாறு தங்கம் இழைக்கப்பட்டது. இன்று இந்த கோவில் 500 கிலோ தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது: பொற்கோவில் பற்றிய 7 விந்தைக்குரிய தகவல்கள்
புத்த மதத்தில், சூரியன், நெருப்பு ஆகியவற்றை குறிப்பது தங்கம். இந்து மதத்தில் சூரியக் கடவுளை சூர்யா என்று அழைப்பார்கள்.
ஜூடாயிசத்தில் தங்கம் இறை ஒளியின் குறியீடாகும். இறை ஒளி கடவுளின் பெருமை.
இஸ்லாமில் தங்கத்துடன் பச்சை நிறம் இணைந்தால், அது சொர்க்கத்தைக் குறிக்கும்.
மரியாதையின் குறியீடு தங்கம். இறைவனுக்கான அர்ப்பணிப்பின் குறியீடு தங்கம். அதன் இயற்பியல் காரணிகளான மினுமினுப்பு, வலிமை, நெகிழ்வுதன்மை, அரிய தன்மை ஆகியவற்றால் இந்த வர்ணனை கிடைக்கிறது. எனவே வழிபடக்கூடிய விக்கிரகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை. தங்க நகையால் அலங்கரிக்கப்படுகின்றன. சுவர்கள் மற்றும் வழிபாட்டு தளங்களின் மேல் ஓடுகள் பிரம்மாண்டமான தங்க வேலைகளால் நிறைவுற்றன. மத புத்தகங்கள் மற்றும் கதைகள் தங்கத்தைப் பற்றி பறை சாற்றுகின்றன. கடவுளும் அம்மன்களும் தங்க பாத்திரங்களைப் பயன்படுத்தினர், தங்க மகுடங்கள் அணிந்திருந்தனர், தங்க தட்டில் உண்டு தங்கப் படுக்கையில் படுத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள, மத ரீதியான, கலாச்சார ரீதியான, பழக்க வழக்கங்களில் தங்கம் இடம்பெற்றுள்ளது. திருமணம், பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற சிறப்பு தினங்களில் தங்கம் மிகவும் புனிதமான வாங்குபொருளாகக் கருதப்படுகிறது. தெய்வங்களுக்கு தங்கம் அளிப்பது கடவுளைக் கவர செய்யப்படும் சைகை. அவரது ஆசிர்வாதத்திற்கு செலுத்தப்படும் நன்றி. தீபாவளி, ஓணம், பொங்கல், துர்கா பூஜை, தாந்தேராஸ், தசரா மற்றும் அறுவடைத் திருநாள் கொண்டாட்டங்கள் தங்கத்தின் வழிபாடும் தங்கத்தை வாங்குவதும் இல்லை என்றால் நிறைவு பெறாது.
எனவே தங்கம் உலகெங்கும் எல்லா மதங்களிலும் மிகவும் விலைமதிப்பு பெற்ற புனிதமான தொடர்பைப் பெற்றுள்ளது.