Published: 20 பிப் 2018
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு பயத்தை வெற்றிகொள்ளுதல்
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில், உலகெங்கிலுமிருந்து வந்துள்ள 80000 ரசிகர்களுக்கு முன்னால், இந்தியாவின் முதல் தங்கப் பதக்க வெற்றியாளர், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா இந்தியக் கொடியை உற்சாகமாக அசைத்தார். சிறிய எண்ணிக்கையிலான இந்திய ரசிகர்களைக் கொண்ட கூட்டம், தங்கள் விளையாட்டு வீரர்களை மரக்கானா ஸ்டேடியத்தில் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது, விளையாட்டில் கதாநாயகனான அபினவ், ரசிகர்களை மேலும் பெருமைப்படுத்தினார். அவர் மீண்டும் வெற்றிபெறுவார் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பெருமளவு ஊடகங்கள் கிரிக்கெட், கால்பந்தாட்டத்தின் வளர்ச்சி, மல்யுத்த கிராமங்கள் மற்றும் குத்துச்சண்டை நகரங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய சாதனைகளை மறந்துவிடுவது எளிதானது. அதற்கான காரணத்தின் ஒரு பகுதி விளையாட்டிலேயே இருக்கலாம், தனிப்பட்ட வாழ்க்கையை வாழும் அந்த மனிதரிடமே மற்றொரு பகுதி இருக்கலாம். விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும் தொடர்ச்சியாகப் பயிற்சி செய்வதைத் தவிர என்னிடம் வேறு திறமைகள் இல்லை என கடந்தகாலத்தில் அவர் கூறியிருக்கிறார்.
இளம் மேதையாக, 18 வயதில் அவர் அர்ஜுனா விருதையும், 19 வயதில் ராஜீவ் காந்தி கேல் ரத்தனா விருதையும் வென்றிருக்கிறார். ஆனால், பீஜிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் ரைஃபில் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் தான் அவருடைய பெயரை வரலாற்றில் பொறித்தார். 1980ல் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றதற்குப் பிறகு இதுதான் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம். தனிநபர் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வலிமிகுந்த காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இந்திய ஒலிம்பிக் சம்மேளன செயலாளராக இருந்த முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான ஜெனரல் ரந்தீர் சிங் அப்போது கூறியதாவது, "என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு ஒருபோதும் பிரார்த்தனை செய்ததில்லை. இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் அவர்கள் இருவரும் சமப்புள்ளிகளில் இருந்தனர், அதன் பிறகு அவர் 10.8 புள்ளிகளைப் பெற்றார். அதைவிடச் சிறப்பாக ஒன்று நிகழ்ந்திருக்க முடியாது" என்று கூறினார்.
விளையாட்டு சாதனைகளுக்காக ஏங்கும் ஒரு நாட்டில், அபினவின் சாதனை பலரை களிப்படையச் செய்தது. இறுதியாக, தடகளப் போட்டிகளும் வெளிச்சத்துக்கு வந்தன. மாறாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இந்தியா விளையாட்டில் ஏன் அதிகமாக கதாநாயகர்களை உருவாக்குதில்லை என்பதே அது.
அவருடைய கனவை அடைவதற்கு, பிந்த்ரா எந்த முயற்சியையும் செய்யாமல் விட்டுவிடவில்லை, அவருடைய பயத்தை சமாளிப்பதற்கு 40 அடி உயர பிட்ஸா கம்பத்தைக் கூட ஏறினார். பத்திரிக்கையாளர்கள் திக்விஜய் சிங் தியோ மற்றும் அமித் போஸ் ஆகியோருடன் சேர்ந்து எழுதிய 'என் ஒலிம்பிக் பயணம்' என்ற புத்தகத்தில், "என்னுடைய சௌகரியமான மனநிலையிலிருந்து வெளியில் வர முடிவுசெய்து, ஜெர்மன் சிறப்புப் படையினர் பயன்படுத்தும் பிட்ஸா கம்பத்தில் ஏறினேன்" என்று பிந்த்ரா கூறினார். அது 40 அடி உயரக் கம்பம், அதன் உச்சிக்குச் செல்ல செல்ல அந்தக் கம்பத்தின் அளவு குறைந்து கொண்டே போகும், உச்சியில் அதன் அகலம் பிட்ஸா பெட்டி அளவுக்குதான் இருக்கும்
நான் ஏறத் தொடங்கினேன், பாதி வழியில் இதற்கு மேல் போகமுடியாது என முடிவுசெய்துவிட்டேன். ஆனால் அந்த செயலை முயற்சிப்பதற்கான துல்லியமான காரணம் இதுதான். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் என்னைப் பற்றிக் கொள்ளக்கூடிய பயத்தை நான் வெல்லவேண்டி இருந்தது. மேலும் முயற்சி செய்தேன், இறுதியில் ஒரு வழியாக நடுக்கத்துடன் உச்சியில் நின்று கொண்டிருந்தேன்.
எனினும், அது (பிட்ஸா கம்பம்) ஒரு அருமையான அனுபவம், என்னுடைய திறமையையும், பொறுமையையும் என்னால் அதிகரித்துக் கொள்ள முடிந்தது -- அது ஒலிம்பிக் போட்டிகளில் தேவைப்படும் ஒன்று. இவை எல்லாம் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கு தான்.