Published: 25 அக் 2017
தங்கம் மற்றும் சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, நமது கார்பன் தடம் குறைக்க மஞ்சள் உலோகம் எவ்வாறு உதவும் என்பதைக் கண்டுபிடிப்போம்.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
பிரச்சனை:
புதைபடிவ எரிபொருள்கள், ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை வரையறுக்கப்பட்ட அளவுகளில் கிடைக்கின்றன. எனவே, விஞ்ஞானிகள் காற்று, சூரிய மற்றும் அலை போன்ற சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க மாற்று ஆற்றல் ஆதாரங்களைத் தேடுகின்றனர்.
2050 ஆம் ஆண்டளவில் சூரிய சக்தி உலகின் மிகப்பெரிய மின்சார ஆதாரமாக மாறும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஆனால் இப்போது, திறமையான சூரிய மின்கலங்களை உருவாக்க அதிக செலவாகிறது என்பது கவலையளிப்பதாக உள்ளது.
தீர்வு:
உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சிக் குழுக்கள் சிறிய அளவிலான தங்கத்தை (சிறிய நானோ துகள்களின் வடிவத்தில்) பயன்படுத்துவது பல்வேறு சுத்தமான தொழில்நுட்பங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் என்பதைக் காட்டுகின்றன. சூரிய சக்தி துறையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதுமையான சூரியப் பலகங்களை உருவாக்கியுள்ளனர், இதில் தங்க நானோ துகள்களாலான ஓர் அடுக்கு நிறுவப்பட்டுள்ளது. பலகத்தில் உள்ள ஒவ்வொரு சூரிய மின்கலத்தின் செயல்திறனை 20% முதல் 22% வரை அதிகரிக்க இந்த அடுக்கு உதவுகிறது. இது ஒரு சிறிய அதிகரிப்பு போல் தோன்றலாம், ஆனால் ஒரு சதவீத புள்ளி செயல்திறனில் குறிப்பிடத்தக்க ‘உண்மையான உலக’ முன்னேற்றத்தைக் குறிக்கிறது
- வினையூக்கி மாற்றிகள்
பிரச்சனை:
ஏப்ரல் 2017 இல், இந்தியாவில் 2,54,290 கார்கள் பதிவு செய்யப்பட்டன, மேலும் எண்ணற்ற கார் சவாரிகள் மேற்கொள்ளப்பட்டன. இது பொருளாதார முன்னேற்றத்தையும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதைக் குறிக்கும் அதே வேளையில், அதிகமான கார்கள் எனறால் அதிக காற்று என்பதையும் இது வெளிப்படுத்துகிறது
தீர்வு:
காற்று மாசுபாட்டைக் குறைக்க, கார்களில் வினையூக்கி மாற்றிகள் பொருத்தப்பட்டுல்ளன. இவை ஓர் இன்ஜினுக்குள் எரிபொருள், எரிக்கப்படுவதால் உருவாகும் அபாயகரமான மாசுபாடுகளை அகற்ற உதவும். 2011 ஆம் ஆண்டில், உலக தங்க கவுன்சிலின் (WGC) ஆதரவுடன் ஒரு புதிய வினையூக்கி மாற்றி உருவாக்கப்பட்டது. பிற விலைமதிப்பற்ற (செயல்பாட்டில் நுகரப்படாமல் ரசாயன எதிர்வினைகளை துரிதப்படுத்தும் ஒரு பொருள்) உலோகங்களுடன் இணைந்த இந்த சாதனங்கள் தங்கத்தை ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்துகின்றன. இந்த வினையூக்கி உருவாக்கம் கார் உற்பத்தியாளர்களுக்கு மாற்று தீர்வை வழங்குகிறது, மேலும் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் தற்போது உலகின் மிகப்பெரிய வினையூக்கி மாற்றி உற்பத்தி நிறுவனமொன்றில் மேம்பாடு செய்யப்பட்டுவருகிறது.
- தூய்மையான நிலத்தடி நீர்
பிரச்சனை:
இந்தியாவில், 19 மாநிலங்கள், தண்ணீரில் ஃப்ளூரைடு மாசுப்பாடு, மற்றும் குறைந்தது பத்து மாநிலங்களில் நிலத்தடி நீரில்ஆர்சனிக்மாசுப்பாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இது மாசுபட்ட நீர் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் மருத்துவ பிரச்சினைகளுக்கு சமூகங்களை அம்பலப்படுத்துகிறது.
தீர்வு:
தண்ணீர் மாசுப்பாட்டை கையாளுவதற்கு உள்ள மிகவும் திறமையான மற்றும் சிக்கனமான வழிமுறைகளில், அசுத்தங்களைத் தகர்ப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரசாயன வினையூக்கிகளைப் பயன்படுத்துவது ஒன்றாகும். ரைஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டுபோன்ட் கெமிக்கல் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தங்கம் மற்றும் பல்லாடியம் வினையூக்கியை உருவாக்கியுள்ளனர், இது மாசுபட்ட நிலத்தடி நீரிலிருந்து ஆபத்தான குளோரினேற்றிய கலவைகளை திறம்பட நீக்குகிறது.
சாராம்சம்:/strong>
தங்கமானது இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை உள்ளடக்கிய ஒரு பழங்காலத்து சின்னம் மட்டுமல்ல, தொழில்நுட்பத்தால் உந்தப்படுகின்ற ஒரு தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும் அதனால் முடியும்.