Published: 04 அக் 2017
புத்த மதத்தில் தங்கம்
ஒரு நிறமாகவும் ஒரு உலோகமாகவும் புத்த மதத்தில் தங்கம் மிகவும் முக்கியம். புத்த மதத்தின் சிலை தத்துவத்தை கண்டால் இது தெள்ளத்தெளிவாகும்.
தங்கம் – புத்த மதத்தினருக்கு இதன் பொருள் என்ன?
புத்த மதத்தில் தங்கம் சூரியனையோ அல்லது அக்னியையோ குறிக்கிறது. மற்ற உலோகங்களுடன் தங்கத்தைக் கலப்பது புனிதமற்றதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதனால் தங்கத்தின் இயற்கை பிரகாசம் நீர்த்து போகும் என்று நம்பப்படுகிறது. எனவே, புத்த மதத்தின் நுண்கலைகளில் பயன்படுத்தப்படும் தங்கம் மிகவும் தூய்மையானது.
தங்கமும் புத்தர் சிலைகளும்
புத்த மதத்தின் ஆன்மீகத்தின் முக்கிய பங்காக பொன்னிறம் உள்ளது. எனவேதான் திபெத்திய பிராந்தியத்தில் செய்யப்பட்ட பல்வேறு சிலைகள் சுத்தமான தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட சிலர் புத்த சிலைகளும் உள்ளன. தாய்லாந்தில் உள்ள வாட் டிரய்மிட் கோவிலில் செய்யப்பட்ட தங்க புத்தர் சிலையானது ஐந்து டன் எடை கொண்டது.
தங்கமும் அஷ்டமங்கலமும்
திபெத்திய புத்த கலாச்சாரத்தின் சிறந்த குறியீடுகள் அஷ்டமங்கலம் (Astamangala) என்றழைக்கப்படும் எட்டு புனித பொருட்கள். கதா(kata) எனப்படும் மிகவும் புனிதமான ஆசிர்வதிக்கப்பட்ட துணியில் இந்த குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாரம்பரிய கொண்டாட்டங்களில் சிறப்பு தருணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குறியீடுகளில் எட்டில் மூன்று தங்கத்தால் செய்யப்பட்டவை
- தங்க மீன் ஜோடி: ஒன்றுக்கு ஒன்று இணையான ஒன்றை ஒன்று பார்க்கும்படி அமைக்கப்பட்ட இரண்டு மீன்கள். இந்த மீன் ஜோடியானது இந்தியாவின் இரண்டு புனித நதிகளான கங்கையையும் யமுனையையும் குறிக்கிறது. முழுமையான விடுதலையுடன் அச்சமற்ற தன்மையை பெற்று தடைகளைக் கடந்து வரும் பாங்கை இந்த மீன் ஜோடி அளிக்கிறது.
- தங்கத் தாமரை மலர்: ஆசை என்னும் குழம்பிய நீர்நிலையில் உடல், பேச்சு மற்றும் மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தாமரை மலர் குறிக்கிறது. புத்துணர்ச்சி, அழகு மற்றும் தெளிவு ஆகியவற்றைப் பெறுவதற்கு துன்பத்திலிருந்து மேல் எழும்பி வரவேண்டும் என்பதற்கான பிம்பமே தாமரை.
- தங்க தர்மச் சக்கரம்: தர்மச் சக்கரமானது புத்தரைக் குறிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. புத்த மதத்தின் உலளாவிய குறியீடு. இந்த சக்கரத்தின் எட்டு கால்களும் புத்துணர்ச்சி பெறுவதற்கான புத்தமதத்தின் எட்டு விதமான பாதையைக் குறிக்கின்றன. அளவுக்கு அதிகமான உலகாயத தன்மைக்கும் துறவி நிலைக்கும் இடைப்பட்ட மத்திய வழியை இது பரிந்துரைக்கிறது (எந்தவிதமான ஒழுங்கீனங்களும் இல்லாமல் )
தங்கமும் இசையும்
திபெத்திய பாடும் கிண்ணமானது(singing bowl) ஏழு உலோகங்கள் கலந்த கலவையால் ஆனது. இது ஒவ்வொன்றும் ஒரு கோளுடன் தொடர்புடையது. இந்த ஏழு உலோகங்களுள் தங்கமும் ஒன்று. இது சூரியனைக் குறிக்கிறது. இந்த உலோகக்கலவையில் கலந்துள்ள கலவை, வடிவம் மற்றும் இறுக்கத்தின் விகிதப்படி இந்த மணியின் ஓசை வேறு படுகிறது. இது சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் துடிப்பானது தியானத்தின்போது கவனத்தை உண்டாக்கப் பயன்படுகிறது.
பொன்னிறம் – புத்த மதத்தினருக்கு இதன் பொருள் என்ன?
புத்த மத ஆன்மீகத்தில் பொன்னிறம் மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும் சிரிக்கும் புத்தர் சிலைகள் பெரும்பாலும் தங்கத்தால் வண்ணம் பூசப்படுகின்றன. பிரபலமான ஜப்பானிய புத்தர் கலைப்படைப்பானது புத்தரை அவரது மரணப்படுகையில் சித்தரிக்கிறது. உயரமான, மெலிதான. பொன்னிற இலைகளை உடைய சால் மரங்கள் நிறைந்த தோட்டத்தில் இந்தப் படுக்கை உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. புத்த தங்கா(thangka) எனப்படும் திபெத்திய ஓவியங்கள் பருத்தி அல்லது பட்டு அப்ளிக் பணிகளால் ஆனவை. இதில் புத்தமத கடவுளோ அல்லது காட்சியோ விளக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கறுப்பு பின்னணியில் அழுத்தமான தங்க வரிகளால் அமைக்கப்பட்டுள்ளன.
சூரியனுடன் தொடர்புள்ளதால் புத்தமதத்தில் தங்கம் அறிவு, புத்துணர்ச்சி, தூண்மை, மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்துடன் தொடர்புடையது. உலகின் மிகவும் ப்ரியமான விலை உயர்ந்த உலோகமானது நமது வாழ்கையில் எந்த தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான மற்றொரு வழி இது.