Published: 12 மார் 2018
தங்கக் கட்டுப்பாட்டுக் காலம்

1960 ஆம் ஆண்டுகளில், தங்கச் சந்தைகளில் எதிர்பார்த்த விளைவுகளை எட்ட முடியாததால் 1963ல் தொடங்கிய கட்டுப்பாடுகள் 1989 வரை விரிவாக்கப்பட்டன. 1963ல் தங்கக் கட்டுப்பாட்டு விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, 1968 ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் இறுதி ஷரத்துகள் அமல்படுத்தப்பட்டன. பல்வேறு கூடுதல் வரைமுறைகள் தங்கத் தொழில்களின் மீது விதிக்கப்பட்டன.
இந்தச் சட்டங்கள் சில திட்டமிடப்படாத பின்விளைவுகளைக் கொண்டிருந்தன. ஏனெனில், தங்கக் கட்டிகளை வைத்திருக்க உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. நிறுவனத்தோடு தங்களை இணைக்காமலிருந்த பல பொற்கொல்லர்கள் ஒரே இரவில் தமது வாழ்வாதாரங்களை இழந்தனர். பெரும்பாலான பொற்கொல்லர்கள் சார்ந்திருக்கும் சுன்னர் ஜாதியினர் மீது விதிக்கப்பட்ட சமூகக் கட்டணங்கள் கணிசமாக இருந்தது. புதிய கட்டுப்பாடுகள், தங்கக் கடத்தலை அதிகரித்ததுடன், மிகப்பெரிய கள்ளச் சந்தையையும் உருவாக்கின.
தங்கக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. மருந்துகள் மற்றும் தீவிரவாத்தின் மீதான நவீன கால யுத்தங்களை நினைவுபடுத்தும் முறையில் அரசாங்கம் 1966 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகளின் கீழ், முன்னர் தடை செய்யப்பட்டிருந்த 14 காரட்டுக்கு அதிகமான நகை தயாரிப்புக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் தனிப்பட்ட உடைமை தடை செய்யப்பட்டது. குடும்பங்களால் குறிப்பிட்ட தங்க நகை வரைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், அறிவிக்கப்படவும் வேண்டும். அப்போது தங்க சுத்திகரிப்பு நிலையங்கள் அரசாங்க அதிகாரத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டு அவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன.
1969 இல் இந்திரா காந்தி ஆட்சியின் கீழிருந்த அரசாங்கம் வங்கிகளை தேசிய மயமாக்கியது மற்றும் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கியது. இது இந்தியாவில் “லைசன்ஸ் ராஜ்”-ன் தொடக்கமாகும். இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தேவையற்ற நேரத்தை விழுங்கும் சிவப்பு நாடா முறையை நிறுவியது, அது மட்டுமல்லாமல், அனைத்து மட்டங்களிலும் கட்டுக்கடங்காத ஊழலுக்கான கதவுகளையும் திறந்துவிட்டது.
1970 ஆம் ஆண்டுகளில் அரசியல் ரீதியாக மேலும் அதிக கொந்தளிப்புகள் ஏற்பட்ட காலமாகும். 1975 முதல் 1977 வரை அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது, பிரதம மந்திரி இந்திராகாந்திக்கு கிட்டத்தட்ட சர்வாதிகார அதிகாரம் கொடுக்கப்பட்டது. அரசாங்கம் வருவாய் மற்றும் சொத்துக்களை தன்னார்வமாக வெளிப்படுத்தும் (திருத்தம்) அவசரச் சட்டத்தை (1975) அறிமுகப்படுத்தியது. இது இந்தியக் குடும்பங்கள் இதுவரை வெளிப்படுத்தாத தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் வருத்தத்துடன் இதை ஏற்றுக் கொண்டவர்கள் வெகு சிலர் மட்டுமே.
1977 இல் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்ட போது, திருமதி. காந்திக்கு பதிலாக திரு. மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்தார். இவர் முந்தைய தசாப்தத்தில் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தி புகழ் பெற்றவர். ஆனால் சாதாரண மக்கள் மீதான சுமை அழுத்ததை குறைக்கவில்லை; விளிம்புநிலை வட்டி விகிதங்கள் நம்ப முடியாத அளவுக்கு 95 சதவிகிதத்தை எட்டியது மற்றும் ரூபாயின் மதிப்பு நிலையாகச் சரிந்தது. எனவே, இங்கே ஒரு முக்கியமான பாடம் என்னவென்றால்: அதிகமான ஒழுங்குமுறைகள் நல்லதாக இருக்க அவசியமில்லை.