Published: 27 செப் 2017
தங்கம் என்பது சுவையற்றதாகும்: பின்னர் ஏன் அதை நாம் சாப்பிடுகிறோம்?
உங்கள் உணவு மீது தூவப்பட்ட தங்கம், அல்லது உங்கள் பானங்கள் மீது தெளிக்கப்பட்ட தங்கம் என்ற ஒரு யோசனையானது 16 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையதாகும். நவீன காலகட்டத்தில், தங்கத்தால் மூடப்பட்ட டோனட்கள், தங்கப் படலங்களைக் கொண்ட பீட்சா, மற்றும் தங்கத் தாள்களில் மடிக்கப்பட்டிருக்கும் பர்கர்கள் ஆகியவற்றை நாம் காணலாம். எனினும், தங்கம் என்பது வினைபுரியாத ஒரு உலோகம் என்பதால், நமது நாக்கினால் துரதிருஷ்டவசமாக, தங்கத்தை சுவைக்க முடியாது, அதே நேரத்தில் நமது வயிற்றால் அதை ஜீரணிக்க இயலாது. எனவே, இது உண்மையில் ஒரு பெரிய கேள்வியாகும்; நாம் ஏன் அதை உணவில் சேர்க்கிறோம்?
தங்கம் சேர்க்கப்பட்ட உணவை நீங்கள் சாப்பிட எப்போதாவது வாய்ப்புண்டாகும் சூழலில், ஏன் என்பதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னர், உணவில் எந்த வகையான தங்கம் சேர்க்கப்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். உணவில் சேர்க்கப்படும் தங்கம் ஆனது 100% தூய்மையானதாக அல்லது 24 காரட்டில் வேண்டும். 24 காரட்டில் இல்லாத தங்கம் ஆனது, பயன்பாட்டுக்கு ஏற்ப, வெள்ளி, வெண்கலம், தாமிரம் அல்லது தகரம் ஆகிய மற்ற உலோகங்களோடு கலக்கப்பட்டிருக்கும். மற்ற உலோகங்கள் கலக்கப்பட்ட கலவை என்பது உங்கள் உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும் என்பதால், தூய்மையற்ற தங்கம் ஆனது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
இப்போது ஏன் என்பதை நாம் பார்ப்போம். பல்வேறு சமையல்காரர்களும் உணவகங்களும் தங்களுடைய மெனுவில் தங்கத்தை சேர்ப்பதற்கான காரணம் என்பது அவை உணவின் சுவையை அற்புதமாக ஆக்கும் என்பதால் அல்ல; தங்கத்தின் மருத்துவ குணங்களும், மற்றும் தங்கள் உணவகங்களுக்கு மக்கள் கூட்டம், புகழ் மற்றும் வெற்றி ஆகியவற்றை கொண்டு வருவதற்காக தங்கத்தின் ஆற்றலையும், செல்வச்செழிப்பையும் பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் உத்தியுமே காரணமாகும். இது உண்மையாகும் மற்றும் மிகவும் புத்திசாலித்தனமாக விஷயமாகும். தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாகவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவும் சேகரிக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். மனிதர்களாக, தங்கத்திற்கும் அதன் கவர்ச்சிகரமான துணைக்கும் நாம் ஆசைப்படுகிறோம். உணவு உள்ள ஒரு தட்டில் தங்கத்தை வைப்பது என்பது, ஓரளவிற்கு நம்மைத் தூண்டுகிற ஒரு விஷயமாகும். இதுவே தங்கத்தின் சக்தியாகும், இதை மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள்.