Published: 07 செப் 2017
உலகின் மாபெரும் தங்க நகை ஏற்றுமதியாளராக இந்தியாவை மாற்றியுள்ளது எது?
2015-2016ஆம் ஆண்டுக்குள் 8.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தங்கத்தை இந்தியா ஏற்றுமதி செய்தது.
2004ஆம் ஆண்டிலிருந்து, தங்கம் மற்றும் தங்க நகை தொழிற்துறையானது 369 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது (ரூ.19.024 பில்லியன்களை) அந்நியச் செலாவணியாக சம்பாதித்துள்ளது. இது கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிகிதமாக அடுத்த 10 ஆண்டுகளில் 5%–7% வளரும்.
இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தங்கம் 2 டன்களுக்கும் குறைவாக உள்ளது. தங்கத் தேவையை சந்திக்க 950 டன்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியானால் உலகிலேயே தங்க நகைகளை ஏற்றுமதி செய்யும் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளது எது?
தங்க நகை இறக்குமதியாளர்கள்2015-2016ஆம் ஆண்டில் தங்க நகை 90 நாடுகளுக்கு எற்றுமதியானது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், அமெரிக்கா, ஐக்கிய குடியரசு மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடங்கும். மாபெரும் இந்திய மக்கள்தொகைக் கொண்ட நாடுகளிலிருந்து இந்தியாவின் தங்க நகைக்கான தேவையின் பெரும் பகுதி உருவாகிறது. இந்தியாவின் ஏற்றுமதிகளில் 50% ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) செல்கிறது. இங்கு இந்திய வம்சாவழியினர் 2.6 மில்லியன் பேர் வாழ்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டு வம்சாவழியினர்களில் இவர்கள்தான் அதிகம்.
தங்க வடிவங்கள்
இந்தியா ஏற்றுமதி செய்யும் மொத்த தங்க நகைகளில் 50% எளிமையான தங்க நகைகள்தான். பொதுவாக மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களும் தென்னிந்தியாவில் சில நகரங்களும் இந்த தங்க நகை செட்டுக்களையும் சங்கிலிகளையும் ஏற்றுமதி செய்கின்றன. தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடும் கேரளாவும் அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவை. இயற்கையிடமிருந்து பெற்ற வடிவங்கள் தங்கத்தில் வடிவமைக்கப்படுவது உலகெங்கும் பாராட்டைப் பெற்றுள்ளது. பலர் மூச்சடைத்து வியந்துள்ளனர்.
இந்தியாவில் தங்க வடிவமைப்புகளின் தனித்துவமும் பல்வேறு வகைகளும் உலகெங்கும் இந்திய தங்க நகைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளன. இந்தியாவில் கை வேலைப்பாடுகளிலேயே(handmade) தயாராகும் தங்க நகை உலகெங்கும் அதிகமாக தேவைப்படுகிறது. இந்திய தங்க நகைகளில் உள்ள பாரம்பரிய வடிவங்கள் மற்றும் பொற்கொல்லர்களின் கைவேலைப்பாடுகள் உலகெங்கும் பேசப்படுகின்றன, மொகலாயர்களின் தாக்கம் பெற்ற குந்தன் மற்றும் மீனாகரிடாகே வடிவங்கள் உலகெங்கும் பிரபலமானவை. அதிகத் தேவையில் இருப்பவை.
தங்க வர்த்தகம்
ரவுண்ட் டிரிப்பிங் (Round Tripping) எனப்படுவது தங்கத்தை எந்த வடிவத்திலாவது வேறு நாட்டிற்கு மாற்றுவதாகும். இதனை உருக்கி அதன் பின்னர் அசல் ஏற்றுமதி நாடுக்கு அனுப்புவதாகும். இதனால் தங்கத்தின் ஓட்டம் நாடுகளுக்கு இடையில் ஒரு சுற்றாக வருகிறது. இதனால் வர்த்தக புள்ளியியல் அதிகரிக்கிறது.
ரவுண்ட் டிரிப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. இந்தியாவில் என்ன நடக்கிறது? ரவுண்ட் டிரிப்பிங் மூலம் மலிவான நிதி அமைப்பு இந்தியாவிற்கு கிடைத்து வர்த்தக அளவு அதிகரிக்கிறது. இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சில கொள்கைகளும் சில அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன,
-
ஜிஜேஇபிசி (GJEPC)
ஜிஜேஇபிசி எனப்படும் கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (The Gem & Jewellery Export Promotion Council also known as GJEPC) இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக , ஏற்றுமதியானது 1966-1967ஆம் ஆண்டுகளில் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2013-2014ஆம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறியுள்ளது.
-
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs)
வெளிநாட்டு வர்த்கத்தைக் கவரும் பொருட்டு 2000ஆண்டில் இந்திய அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களை (Special Economic Zone (SEZ) ) ஏற்படுத்தியது. ஏற்றுமதி செயல்முறை மண்டலத்தை அமைப்பது (an Export Processing Zone (EPZ)) எவ்வளவு திறமானது என்று அரசு புரிந்துகொண்டது. இவ்வாறு செய்த முதல் ஆசிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.
-
சாந்தாகுரூஸ் மின்னணு ஏற்றுமதி முறைப்படுத்தும் மண்டலம் (SEEPZ)
சாந்தாகுரூஸ் மின்னணு ஏற்றுமதி முறைப்படுத்தும் மண்டலம் (SEEPZ) (Santacruz Electronics Export Processing Zone) 1973ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தில் கிடைத்த அனைத்து நகை ஏற்றுமதிகளில் 84% (1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை) இங்குள்ள தங்க நகைகள் மாபெரும் பங்கினைக் கோருகின்றன.
கற்கள் மற்றும் நகைத்துறையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மட்டுமல்ல, பணியாளர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. ஏடி கியர்னி (AT Kearney) அளித்த ஓர் அறிக்கையின் படி கற்கள் மற்றும் நகைகள் துறை 2.5 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் 0.7–1.5 மில்லியன் மக்கள் மேலும் இதில் வேலைவாய்ப்பு பெறலாம். இந்த துறையில் என்னவெல்லாம் வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், நகை வடிவமைத்தல்- அற்புதமான வேலை தேர்வு என்பதைப் படிக்கவும்.