Published: 12 செப் 2017
உங்கள் சுவருக்கான தங்க ஓவியங்கள்
வெற்றுச் சுவர்களுக்குப் பதிலாக ஒரு சுவாரசியமான அலங்காரமாக, கண்ணைக் கவரும் தோற்றமாக மற்றும் உணர்வாக இருக்கிறது என்பவை சுவர் ஓவியத்தை விரும்பச் செய்வதற்கான காரணங்களில் சில ஆகும். இந்தியாவில், தொன்மவியல், கலாசாரம் ஆகியவற்றை சித்தரிக்கும் கலைப்படைப்புகளானது, பாரம்பரிய மற்றும் நவீன வசிப்பிடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் சுவர்களில் எப்போதும் காணப்படுகின்றன.
பழைய கலைப்படைப்புகள், இந்தியக் கலைஞர்களின் நேர்த்தியான கலையுணர்வு மற்றும் நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகின்றன. சுவாரசியமாக, பழங்கால இந்திய கலைஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொண்டு கடவுளர்கள், தேவியர், புராணக் காட்சிகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவற்றைப் பொதுவாக வரைந்தனர். இருப்பினும், அரசகுல மற்றும் பணக்கார வாடிக்கையாளர்கள் தனித்துவமான ஓவியங்களைக் கோரினர். எனவே, இந்தியர்களின் தங்கத்தின் மீதான ஆசையைக் கருத்தில்கொண்டு, கலைஞர்கள் தங்களுடைய தலைசிறந்த படைப்புகளை மஞ்சள் உலோகத்திலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உருவாக்கினர்.
தஞ்சாவூர் ஓவியங்கள் என்பது தங்கத்தால் படைக்கப்பட்ட மிகவும் பிரபலமான ஓவியங்கள் ஆகும். இந்தக் கட்டுரையில், தங்கத்தின் மீதான இந்தியாவின் காதலை வெளிப்படுத்தும் கலைப்படைப்புகளை நாங்கள் உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறோம்.
மைசூர் ஓவியங்கள்: கலைகள் உருவாவதற்கு ஆதரவளித்த விஜயநகர சாம்ராஜ்ஜிய காலத்தில் இந்த ஓவியங்கள் தோன்றின. மைசூர் ஓவியங்கள் என்பவற்றில் மெல்லிய தங்கப் படலங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஓவியங்களின் மிகவும் பிரபலமான கருப்பொருள்களில் இந்து கடவுளர்கள் மற்றும் தேவியர்கள் மற்றும் இந்து இதிகாசத்திலிருந்து காட்சிகள் ஆகியவை அடங்கும். இந்திய மைசூர் ஓவியங்கள் கருணை, அழகு மற்றும் நேர்த்தி ஆகியவை பார்வையாளர்களை வசியம் செய்கின்றன.
ராஜ்புட் ஓவியங்கள்: இந்த ஓவியங்கள், இராஜபுத்திர சகாப்தத்தில், அரசர்களின் நிலமான ராஜஸ்தானில் தோன்றின. ராமாயணத்தில் இருந்து இராஜபுத்திர வம்சாவளியின் அரசவைக் காட்சிகள் வரை பல்வேறு கருப்பொருள்களை சித்தரித்த ராஜ்புட் ஓவியங்களை அரசர்கள் ஊக்கப்படுத்தினர்.
வண்ணங்களைத் தவிர, இந்த ஓவியங்களுக்கு உயிர்கொடுக்க தாவரப் பொருட்கள், சில தாதுக்கள் மற்றும் சங்குகள் ஆகியவற்றை ஓவியர்கள் பயன்படுத்தினர். இந்த நேர்த்தியான கலைப்பொருட்களை சித்தரிக்க மெல்லிய தூரிகைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த ஓவியங்கள், அதன் கலையில் மஞ்சள் உலோகமான தங்கத்தைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் ராஜ்ஜிய தொடர்பை பெருமையுடன் வெளிப்படுத்துகின்றன.
ஒரு வெற்றுச் சுவரில் மாட்டப்படும் ராஜ்புட் ஓவியங்கள், அறைக்கு ஒரு கம்பீரமான மற்றும் அற்புதமான சூழலை உருவாக்குகின்றன.
இந்த ஓவியங்களைத் தவிர்த்து, முராக்கா மற்றும் தங்கா கலைப்படைப்புகளும் (முறையே பெர்சியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் இருந்து உருவானவை) தங்கத்தைப் பயன்படுத்தின, மேலும், அவை இந்தியாவில் மிகவும் விரும்பப்பட்டன. தங்கத்தின் மீதான இந்தியாவின் நேசம் என்பது தங்க நகைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது - அவற்றில் ஓவியம் என்பது ஒரு வடிவம் ஆகும்.