Published: 18 ஜூன் 2018
தங்கம், ஒரு பெண்ணின் செல்வம்
உச்சநீதிமன்றம், ஒரு பெண் 'ஸ்ரீதனம்'-க்கு போட்டிக்கு இடமற்ற ஒரு உரிமையைக் கொண்டிருக்கிறாள், மற்றும் அவள் இந்த ஸ்ரீதனத்தைத் தனது கணவரிடமிருந்து பிரிந்த பிறகும் கூட அல்லது விவாகரத்து பெற்ற பிறகும் கூட உரிமை கோரி பெறலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, ஏனெனில் அவளது ஸ்ரீதனத்தைக் கொடுக்க மறுப்பது என்பது உள்வீட்டில் பிறரைக் கெட்ட நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தக் கொடுமைப்படுத்துவதற்குச் சமமானதாக உள்ளது எனத் தீர்ப்பு தெளிவாகக் கூறுவதுடன் இதைக் கொடுக்க மறுக்கும் எவரின் மீதும் குற்றவியல் வழக்கு தொடரப்படுவதையும் உறுதிசெய்கிறது.
ஹிந்து சட்டத்தின்படி, திருமணத்திற்கு முன்னும் பின்னும், ஒரு பெண் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் என இரண்டும் வகையிலும் சேர்த்து பெறுகின்ற விலை உயர்ந்தப் பொருட்களைக் குறிக்கிறது.
சமுதாய விதிகள் ஒரு வடிவத்தை எடுக்கத் தொடங்கிய ஆதிகாலத்தில் ஸ்ரீதனம் என்பது நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. இந்த நடைமுறையானது, ஒரு மகள் அவளது புகுந்த வீட்டுக்குச் செல்லும் சமயத்தில் அவளுக்குச் சொத்தில் உள்ள அவளது பங்கை கொடுக்க வேண்டும் என்ற எளிய புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் காலத்தில், நிலத்தைத் தவிர, மகள்களுக்குத் தங்கம் வழங்கப்பட்டது, அது இன்னும்கூட மதிப்புமிக்கதாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அவள் மட்டுமே அந்தச் செல்வத்தைச் செலவழிக்கக் கூடியவளாக இருந்தாள் - அவள் விரும்பினால் அதை வீட்டிற்கு முதலீடு செய்யலாம் அல்லது தனக்காகச் செலவழிக்கலாம் அல்லது அதை தனது குடும்பத்திற்காகச் செலவழிக்கலாம் - அது அவளின் முடிவைப் பொறுத்தது.
இது அவளின் பேராசை என காலப்போக்கில் தான் விதிகளும் மரபுகளும் பழி தூற்றின. உண்மையில், ஒரு திருமணமான மகளின் சொத்துரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் என்பன ஒரு சமீபத்திய சேர்ப்பு ஆகும். இதற்கு முன்னர், இந்திய சட்டமானது தனது பெற்றோரின் சொத்து மீதான ஒரு மகனின் உரிமையையும், தனது கணவரின் சொத்து மீதான ஒரு மகளின் உரிமையையும் பற்றிப் பேசியது. எனினும், 'ஸ்ரீதனம்' என்ற பாரம்பரியம் இந்தக் கருத்தை மறுக்கின்றது.
மணமகளின் குடும்பத்தால் அவளுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தங்கம் நல்லது என்று காணப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், அவளுக்கு வாழ்க்கைக்கான பாதுகாப்பாகவும் விளங்குகிறது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பம் என்று கருதப்படும் ஒரு மதிப்புமிக்க முதலீட்டு வர்த்தகப்பொருளாகக் காணப்படுகிறது. தங்கம் விலை படிப்படியாகப் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது, மணமகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் மதிப்புமிக்கதாக அமைகிறது.
உண்மையில், இந்தியப் பண்பாட்டின் முக்கியச் சாராம்சமானது ஆண் மற்றும் பெண் இருவருக்குமே சமத்துவத்தையும் நேர்மையையும் ஊக்குவிக்கிறது. ஆண்களும் பெண்களும் பாரம்பரியமாக ஒரே மாதிரியாக, அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அப்படியே நடத்தப்பட்டுள்ளனர்.