Published: 18 ஆக 2017
இந்தியாவில் தங்க நாணயங்களின் வரலாறு
இந்தியா தங்கக் குருவி என்று அடிக்கடி அழைக்கப்பட்ட காலம் உண்டு. பல்வேறு ஆண்டுகளாக, பல்வேறு நாணயங்கள் தங்கத்தை ஒரு நாணய மாற்றாகப் பயன்படுத்தி வந்துள்ளன. தங்கம் வளமையின் குறியீடாகவும் விளங்கியுள்ளது. இந்தியாவின் தங்க நாணயங்கள் குறித்த அதிசயிக்கத்தக்க உண்மைகளைக் கண்டறிய மேற்கொண்டு படிக்கவும். தங்கத்திற்கான நமது காதல் உண்மையில் காலம் கடந்தது என்று இவை நிரூபிக்கும்.
-
முதலாம் கனிஷ்கரின் தங்க தினார்
ஓர் இந்திய மன்னரால் வெளியிடப்பட்ட முதல் தங்க நாணயம் இது. குஷான மன்னர் கனிஷ்கரால் சக ஆண்டு 127இல் வெளியிடப்பட்டது. கிரேக்க மொழியில் வெளியிடப்பட்ட சில நாணயங்களுள் இதுவும் ஒன்று. பின்னர் வெளியிடப்பட்ட நாணயங்கள் பாக்டீரிய மொழிக்கு மாறின. இந்த மொழி பாக்டிரியா எனப்படும் (தற்போதைய உஸ்பெக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் தாஜிகிஸ்தான் பிராந்தியங்கள்) மத்திய ஆசியப் பிராந்தியத்தில் பேசப்பட்ட ஓர் ஈரானிய மொழியாகும்.
-
ஹூவிஷ்காவின் தங்க தினார்
கனிஷ்கரின் மகன் ஹூவிஷ்கா. இவர் பல்வேறு தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றின் சில சான்றுகள் இதோ. சக ஆண்டு 155க்கும் 190க்கும் இடையில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் பாக்டீரியன் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்தில் ஈரானிய சூரியக் கடவுள் மித்ராவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
-
முதலாம் வாசுதேவரின் தங்க தினார்
ஹூவிஷ்காவிற்கு ஓர் இந்து மனைவியின் மூலம் பிறந்த மகன் முதலாம் வாசுதேவன் என்று நம்பப்படுகிறது. இது அவரது பெயரிலிருந்தே தெரிகிறது. அவரால் சக ஆண்டு 195ல் வெளியிடப்பட்ட தங்க நாணயத்தின் சான்று இது. இதில் சிவபெருமான் உருவமும் நந்தியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
-
இரண்டாவது கனிஷ்கரின் தங்க தினார்
இரண்டாம் கனிஷ்கரால் வெளியிடப்பட்ட தங்க நாணயத்திலும் சிவபெருமான் உருவமும் நந்தி காளையும் இடம்பெற்றது. இவர் 20 ஆண்டுகள் பதவி வகித்தார். சக ஆண்டு 227லிருந்து 247ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட நாணயங்களின் சான்று இதோ. இது தனது முன்னோரிடமிருந்து நுண்ணிய விவரங்களிலும் எழுத்துவெட்டுக்களிலும் மாறுபடுகிறது.
-
வஷிஷ்கா தங்க தினார்
சக ஆண்டு 247லில் இருந்து 265 வரை வஷிஷ்கரின் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்களில் இடது புறம் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வலது புறம் இரானிய தேவதையான அர்டாஷ்ஷோவின் (Ardochsho) உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
-
இரண்டாம் வாசுதேவர்
சக ஆண்டு 275க்கும் 300க்கும் இடையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயமும் முந்தைய நாணயத்தை ஒத்தது போல்தான் உள்ளது.
-
ஷகா தங்க தினார்
இரண்டாம் வாசுதேவருக்கும் பிறகு குஷான வம்சத்தின் வம்சாவழி ஸ்திரமற்றதாக உள்ளது. எனவே ஒரு குறிப்பிடட காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களின் அமைப்பு ஷகா தங்க நாணயங்களாக இருக்கலாம். அல்லது இவற்றை ஷகா என்ற மன்னர் வெளியிட்டிருக்கலாம். ஷகா நாணயங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். நான்காம் நூற்றாண்டின் மத்தியில் இவை வெளியிடப்படும். மற்ற நாணயங்களைப் போலவே இந்த நாணயத்திலும் அரசரின் உருவமும் அர்டாஷ்ஷோ(Ardochsho) தேவதையின் உருவமும் இடம் பெற்றுள்ளது.
குப்தர்களின் சாம்ராஜ்யத்தின்போது இந்தியா, தனது நாகரிகம், கலாச்சாரம், கலை, தங்க நாணயங்கள் ஆகியவற்றின் பொற்காலத்தைக் கண்டது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள மிகச் சிறந்த தங்க நாணயங்கள் குப்தர் சாம்ராஜ்யத்திலிருந்து வெளிவந்தவை. இவை சக ஆண்டு 335லிருந்து 375 வரை வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் வெளிவந்த பல்வேறு விதமான தங்க நாணயங்கள்.
-
செங்கோல்
நிலையான வகை என்று இந்த நாணயங்கள் அழைக்கப்படுகின்றன. இவை குப்தர்களின் தங்க நாணயங்கள் முதல் முதலாக வெளியிடப்பட்ட போது இருந்தவை. இதில் மன்னர் இராஜ செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற காட்சி உள்ளது.
-
அரசரும் அரசியும் /strong>
இந்த நாணயமானது அரசர் முதலாம் சந்திரகுப்தருக்கும் லிச்சவி இளவரசி குமாரதேவிக்கும் இடையே நடைபெற்ற திருமணத்தை விவரிக்கிறது. முற்கால குப்தர்கள் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அந்த மன்னனுக்கு இந்த திருமணத்தால் நிறைய அதிர்ஷ்டம் கிடைத்து அவனது சாம்ராஜ்யம் விரிவாக உதவியது.
-
வில் வித்தை வீரர்
குப்தர் நாணயங்களில் ஒன்றான இந்த நாணயத்தில், இடது கையில் நாணையும் வலது கையில் அம்பையும் பிடித்திருப்பது போன்ற தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
-
போர் கோடரி
இந்த நாணயத்தில் அரசர் ஒரு போர் கோடரியை தனது இடது கரத்தில் ஏந்தியிருந்தார். நாணயத்தின் மறுபக்கம் இந்து கடவுளான இலஷ்மியின் உருவத்தை விவரிக்கிறது. செங்கோல், வில்வித்தை வீரர், அரசர் மற்றும் அரசி நாணயங்களில் உள்ளது போலவே இது உள்ளது.
-
அஷ்வமேதா
இந்தப் பெயர் குறிப்பிடுவது போல், இந்த நாணயம் குதிரையைப் பற்றி பேசுகிறது. வேதகாலங்களில், அஷ்வமேத யாகமானது குதிரை பலியிடும் சடங்காகும். ஆட்சியாளர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்க இதனை நடத்தினார்கள். நாணயத்தின் மறுபக்கத்தில் ஓர் இராணியின் படம் வரையப்பட்டுள்ளது.
-
இசைக்கலைஞர்
இது மிகவும் தனித்துவமான ஓவியம். இதில் ஓர் அரசர் வாத்தியக் கருவி வாசிப்பது போல் உள்ளது. மன்னர் சமுத்திரகுப்தர் ஒரு திறமையான இசைக்கலைஞர்.
-
புலி கொல்பவர்
புலிக்கொல்பவர் நாணயம் அயுதங்களுடன் மன்னருக்கு இருந்த பரிச்சயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நாணயத்தில் புலியின் மீது ஒரு அரசன் அம்பெய்துவது போலவும் அதன் பின் விலங்கை வேட்டையாடி கீழே செலுத்தியது போலவும் காட்டப்பட்டுள்ளது.
-
காச்சா
குப்தர்களின் தங்க நாணயங்களில் கடைசி நாணயம் இது. இந்த நாணயத்தில் ஒரு சக்கர பீடம் உள்ள நிலுவையை ஓர் பலி பீடத்தில் மன்னர் வைத்துள்ளது போல் தோன்றுகிறது.
குப்தர் காலத்திற்குப் பிறகு, ஹர்ஷராலும் முந்தைய மத்திய கால இரஜபுத வம்சத்தினராலும், நாணய மாற்றுமுறையானது சுவாரஸ்யமான வடிவங்களைப் பெற்றது. இந்த நேரத்தில் கிடைத்த தங்க நாணயங்கள் மிகவும் அதிசயிக்கத்தக்கதாக இருந்தன.
-
அமர்ந்துள்ள இலக்ஷமி நாணயங்கள்
காலாச்சூரி ஆட்சியாளர் கங்காயே தேவரால் வெளியிடப்பட்டது. இந்த தங்க நாணயங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றை பின்னர் மற்ற ஆட்சியாளர்கள் நகல் எடுத்தனர்.
-
எருதும் குதிரைவீரனும் உள்ள நாணயங்கள்
இராஜபுத்திர வம்சத்தினர் வெளியிட்ட தங்க நாணயங்களில் இடம் பெற்ற மிகப் பொதுவான அம்சங்கள் எருதுவும் குதிரை வீரனும் உள்ள படங்கள்.
சத்ரபதி சிவாஜியின் காலத்தில் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களும் நிலைத்து நிற்பவை.
1674ஆம் ஆண்டிற்கும் 1680ஆம் ஆண்டிற்கும் இடையில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. இது மிகவும் அரிதான தங்க நாணயம். இந்த நாணயத்தின் ஒருபுறம் சிவாஜி, பநீ இராஜ சிவா என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு புறம் ஷத்ரியர்களின் இறைவன், சத்திரபதி என்று அழைக்கப்படுகிறார். .
தங்கத்துடன் இந்தியாவிற்கு உள்ள அற்புதமான உறவை நாணயங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இன்று, இந்திய தங்க நாணயமானது பாதுகாப்பு, தூய்மை, கௌரவம் ஆகிய அனைத்தையும் கவர்ந்த ஒன்றாக உள்ளது. நமது மனங்களிலும் நமது பைகளிலும் தனக்கான இடத்தை தங்கம் மீண்டும் பிடிக்கிறது.