Published: 08 ஆக 2017
நிதி நெருக்கடிகளின் போது தங்கம் எவ்வாறு உங்களுக்கு நண்பராக இருக்க முடியும்?
உங்களது விலை உயர்ந்த நகைகளின் தொகுப்பிற்கான கூடுதல் மதிப்பு மட்டுமல்ல தங்கம். நிதி நெருக்கடி காலங்களின்போது மிகவும் மதிப்பு மிக்க நண்பராகவும் அது விளங்கும்.
-
எளிதில் பணமாக்கும் தன்மை
உங்களது தங்கத்தை நீங்கள் எளிதில் பணமாக்க முடியும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 வரை பணம் பெற முடியும். உங்களது தங்கம் ஹால்மார்க் முத்திரை பெற்றிருந்தால் உங்கள் தங்கத்திற்கு அதிக தொகை கிடைக்கும். இந்த முத்திரையானது தங்கத்தின் தூய்மை, நேர்த்தி, தரம், உத்தரவாதம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. எனவே ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்கத்தின் தூய்மையைப் பொறுத்து உங்களுக்கு பணம் கிடைக்கும்.
-
கடன் பெறும் வசதி
பணத்திற்காக நீங்கள் எப்போதும் தங்கத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் உள்ள தங்க இருப்புகளுக்கு ஏற்ற வகையில் நீங்கள் எளிதாக தங்கக் கடன் பெறலாம். இதனால் இந்த மஞ்சள் உலோகத்தை பணமாக்குவது இன்னும் எளிது. கடன் அளிப்பவரிடம் உங்கள் தங்கத்தை நீங்கள் அடகு வைப்பதன் மூலம் உங்கள் தங்கத்தின் மதிப்பில் 75 % வரை உங்களுக்கு கடன் கிடைக்கும். கடன் அளிப்பவர் தங்கத்தை அடமானமாக வைத்துக்கொண்டு உங்களுக்கு பணம் கொடுப்பார். இதற்கு ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. உங்களது அவசர காலங்களில் உங்களது காப்பாளராக உங்கள் தங்கம் செயல்படும். தங்க கடன்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எல்லாம் இங்கே உள்ளது.
-
தங்க நகை முதலீட்டுத் திட்டம் மூலம் வரி வருமானம்
உங்களது தங்கத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் – நகையாகவோ, கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ நீங்கள் வங்கியில் வைப்பு வைக்கலாம். இதற்கு தங்க நகை முதலீட்டுத் திட்டம் உதவும். இந்த வைப்பின் மூலம் நீங்கள் வட்டி வருமானம் பெறலாம். நீங்கள் 30 கிராம் தங்கத்திலிருந்து எவ்வளவு அதிக அளவு தங்கத்தை வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். வரிவிலக்கு பெற்ற வட்டி வருமானம் சரியான கால இடைவெளியில் உங்களுக்குக் கிடைக்கும். தங்கத்தின் அளவின் அடிப்படையிலும் அதன் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்றபடியும் அதற்கு வட்டி கிடைக்கும். உங்களது சேமிப்புக் கணக்கில் நீங்கள் தங்கத்தை சேமித்து வைத்தீர்களானால் நீங்கள் அதனை பாதுகாக்கும் பெட்டகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போது அந்த கட்டணத்தையும் சேமிக்கலாம்.
-
பணத்தில் இலாபம்
மின்னணு வடிவில் இருக்கும் உங்களுடைய தங்கம் நிதி நெருக்கடி காலங்களில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தங்க நிதியம்(Gold Fund) அல்லது தங்க பரிமாற்ற வர்த்தக நிதியம் (Gold Exchange Traded Fund) மூலம் இது சாத்தியமாகும். பரஸ்பர நிதியங்களுக்கு இணையானவை தங்க இடிஎஃப்கள்(ETF). உங்கள் சார்பாக அவை தங்கத்தில் முதலீடு செய்து பாதுகாத்து வைக்கின்றன. பங்குகளை போல, அவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். எனவே ஒரு இடைத்தரகர் மூலம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தங்கத்தை வசதியாக வாங்கி விற்க முடியும். இதனால் உங்களுக்கு குறைந்த நேரமும் உழைப்பும் மட்டுமே செலவாகும். உங்களது இடிஎஃப்பை நீங்கள் பணமாக மாற்றும்போது இது உங்கள் கைக்கு எளிதாகும். உங்கள் தங்க முதலீட்டுக்கு இணையான தங்கத்தை இதன் மூலம் நீங்கள் பெறலாம். உங்கள் முதலீட்டை விற்று பணமாக்குவதற்கு பதிலாக உங்களுக்கு பணம் தேவைப்படும் காலங்களில் உங்கள் தங்க இடிஎஃப்பை அடமானமாக வைத்தும் நீங்கள் தங்க கடன் பெறலாம்.
-
டிஜிட்டல் கோல்டு
டிஜிட்டல் பணப்பைகளின் மூலம் ஒரு சில நிமிடங்களில் நீங்கள் பாதுகாப்பாக தங்கத்தை வாங்கி விற்க முடியும். நீங்கள் பணத்தை டிஜிட்டல் முறை மூலம் வாங்குவதற்கும், சேமித்து வைக்கவும், விற்பதற்கும் பல்வேறு மேடைகள் உள்ளன. தங்கத்தை ஆன்லைன் மூலம் விற்பதற்காக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ. .
பணத்திற்காக நீங்கள் தங்கத்தை பொருளாக மாற்ற விரும்புகிறீர்களோ அல்லது டிஜிட்டல் முறை மூலம் மாற்ற விரும்புகிறீர்களோ, தங்கத்தை பயன்படுத்தி பணம் பெறுவதற்கான முறைகள் ஏராளமாக உள்ளன. அதில் மிகவும் முக்கியமான அம்சம், நெருக்கடி காலங்களில் அதனைப் பெறுவதற்கு மிகவும் குறைவான காலமே ஆகும் என்பதுதான்.