Published: 19 ஜூன் 2018
தங்கத்தின் சரியான விலைத் தெரிந்துக் கொள்வது எப்படி
தங்கத்தின் விலைகள் நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மட்டுமில்லாமல் ஒரே நகரத்திற்குள் வெவ்வேறு நகைக்கடைகளில் வேறுபடுவது ஏனென்று எப்போதாவது வியந்ததுண்டா?
ஏனென்றால் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும் சந்தைப் பரிமாணங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
இந்தியாவில், தங்கத்தின் விலைகள் ஒரு முறை சார்ந்த பரிமாற்றகத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. இந்தியாவில் தேசிய அளவில் தங்கத்தில் விலைகளை அமைக்கக்கூடிய ஒரே ஒரு அதிகார ஆணையம் கூட இல்லை. ஆனால் தினமும் இந்திய தங்க நகை சங்கத்தினரால் (ஐபிஜேஏ) அறிவிக்கப்படும் தங்க விலைகள் நாடு முழுவதிலும் தங்க வணிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறது1. இது பத்து பெரிய தங்க வியாபாரிகளிடமிருந்து அந்த நாளில் பெறப்படும் விலைகளின் சராசரி ஆகும். இவர்களில் சில வணிகர்கள் இந்திய பல்வேறு வணிகப் பொருள் பரிமாற்றகத்தின் (எம்சிஎக்ஸ்) அருகிலுள்ள மாதத்தின் கோல்ட் ஃப்யூச்சர் ஒப்பந்தத்தைப் பயன்படுத்துகின்றனர், மற்றவர்கள் இறக்குமதி வங்கிகளில் அவர்கள் தங்கம் வாங்க செலுத்திய விலையிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்குகின்றனர். உள் மாநில போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் உள்ளூர் நகைக் கடை சங்கங்களால் அறிவிக்கப்பட்ட விலைகளின் விளைவுகளும் வெவ்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் தங்கத்திற்கான மூலாதாரம் வங்கிகளின் வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. அவர்கள் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யும் போது தரையிறக்க விலையையும் அவர்களுடைய கடடணத்தில் சேர்க்கின்றனர். வங்கிகளால் தங்க வியாபாரிகள் மற்றும் நகை உற்பத்தியாளர்கள்/சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கப்படும்போது இறுதி விலையுடன் 10% சுங்க வரியும் 3% ஜிஎஸ்டியும் சேர்க்கப்படுகிறது.
நகைக்கடைக்காரர்கள் வழக்கமாக நகையின் இறுதி விலையைக் கணக்கிடும் போது இந்த அறிவிக்கப்பட்ட தங்க விலையை சரிபார்ப்பர். இந்த விலையானது, ஆபரணத்தை செய்ய பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் எடையோடு பெருக்கப்படுகிறது அதன் பிறகு அத்துடன் செய்கூலிகள் சேர்க்கப்படுகின்றன. 3% ஜிஎஸ்டி அதன் பிறகு கணக்கிடப்பட்ட தொகையோடு1 விதிக்கப்படுகிறது. சில நகைக்கடைக்காரர்கள் தூய்மை மற்றும் நிறுவன தர அடையாளத்திற்காகவும் ஒரு ப்ரீமியம் கட்டணத்தையும் கூட வசூலிக்கிறார்கள்.
தங்க நகைகளை வாங்கும் முன்பு மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- நகைக் கடைக்காரர்களின் விலைகள் வாங்கும் போதும் விற்கும் போதும் மாறுபடுகின்றன மேலும் செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்படும் விலைகளிலிருந்தும் மாறுபடுகிறது. அவை குறிப்பிடத்தக்கவை அல்ல.
- எந்த விலையுயர்ந்த பொதிக்கப்பட்ட கற்களின் எடை இன்றி தங்கத்தின் எடை மட்டும் கணக்கிடப்படுகிறது.
- தங்கத்தின் விலை நகையின் தூய்மையான பகுதிகளைப் பொறுத்து மாறும். அதாவது, BIS நிலையான தர முத்திரையின் படி 22K அல்லது 18K.
- நகையின் வலிமை மற்றும் வாழ்நாளுக்காக சேர்க்கப்படும் உலோகக் கலப்பின் விலை தூய தங்கத்தின் விலையில் 3% அதிகமாக இருக்கக்கூடாது.
- நகைக் கடைக்காரர்களுக்கு இடையே செய்கூலி (அல்லது கழிவுகள்) முறைப்படுத்தப்படவில்லை. இந்த விலைகள் தங்கத்தின் விலையில் ஒரு சவிகிதமாக இருக்கலாம் அல்லது ஒரு கிராம் தங்கத்திற்கான ஒரே விகிதமாகவும் இருக்கலாம். பொதுவாகத் தங்க நகைகளின் செய்கூலிகள் இயந்திரத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு மிகப்பெரிய சந்தைகளில் 3% முதல் 25% ஆக இருக்கும். பொதுவாக, கையால் செய்யப்பட்ட நகைகள் இயந்திரத்தால் செய்யப்படும் நகைகளை விட விலையுயர்ந்ததாகும்.
இது தொடர்பாக: தங்கக் கொள்முதலை எளிமையாக்குதல் : செய்கூலி மற்றும் கழிவுக் கட்டணங்களைப் பற்றிய ஒரு பார்வை.
கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களின் படி பின்வரும் காரணிகள் தங்கத்தின் சந்தை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்:
- தங்க விநியோகம்: தங்கம் ஒரு அரிதான வியாபாரப் பொருளாகும். மேலும் பல நாடுகள் இந்த உலொகத்தின் தாராளமான வளங்களை கொண்டிருக்கவில்லை. தங்கத்தின் விநியோகம் மாறுபடும்போது விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. தங்க உற்பத்தி நாடுகளுடனான பூகோள அரசியல் ரீதியான நல்லுறவும் இந்த உலோகத்தின் விநியோகம் மற்றும் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
- பரிமாற்ற விகிதம்: வலிமையான ரூபாய் மதிப்பு மலிவாக இறக்குமதி செய்கிறது இதனால் ஒட்டுமொத்த தங்கத்தின் விலை குறைகிறது.
- முக்கியக் கட்டுப்பாடுகள்: உயர் சுங்க வரி, ஜிஎஸ்டி போன்ற அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது இறக்குமதியைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தங்கத்தின் விலைகளை அதிகரிக்கச் செய்கின்றன.
- பருவகால காரணிகள்: தங்கத்தின் கொள்முதலும் விலைகளும் திருமண காலங்கள், மதஞ்சார்ந்த பண்டிகைகள், நல்ல ஆறுவடை மற்றும் மழைக்காலப் பருவங்களில் உச்சத்தைத் தொடுகின்றன.
தங்கத்தின் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை தெரிந்துக் கொள்வது உங்கள் நகைக்கடைக்காரரால் வழங்கப்படும் மதிப்பீட்டை நீங்கள் நன்கு புரிந்துக்கொள்ள உதவும். இப்போது நீங்கள் அவருடன், அவர் குறிப்பிடும் விலை, கொடுக்கப்பட்ட கேள்விக்குரிய தங்கத்தின் எடை மற்றும் தூய்மை மற்றும் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விலை ஆகியவற்றைப் பற்றி தகவலறியப்பட்ட உரையாடல்களை மேற்கொள்ளலாம்.
மேலும், உங்கள் கொள்முதல் விலைக்கான முறையான இடைவெளியை வழங்கும் ஒரு வெளிப்படையான விலைப்பட்டியலை கேட்டு வாங்க மறவாதீர்கள்.