Published: 07 ஜூலை 2017
2017 ஆம் ஆண்டில் உங்கள் தங்க முதலீடுகளை எவ்வாறு திட்டமிடலாம்?
2016 ஆம் ஆண்டு “எதிர்பாராத ஒன்றுக்காக தயாராக இருக்க வேண்டும்” என்பதை நமக்கு கற்பித்துள்ளது. பிரக்ஸிட் ஆகட்டும் அல்லது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகட்டும், உண்மை என்பது பரவலான எதிர்பார்ப்புகளிலிருந்து தொலைவாகவே இருக்கிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் தங்கத்தின் விலையில் தேக்கம் குறித்த நம்பிக்கையை கருத்தில் கொண்டு, 2017 ஆம் ஆண்டில் எது தங்கத்திற்கான லாபகரமான முதலீட்டு அணுகுமுறையாக இருக்கும்?
கணிக்க முடியாத நிலையிலும் உங்கள் செல்வத்தை பாதுகாக்கும் மற்றும் அதிகரிக்கும் ஒரு சொத்தாக தங்கத்தைக் கொண்டுள்ள நல்ல சமநிலை முதலீட்டு பிரிவை உருவாக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தங்க நாணயங்கள், கட்டிகள், மற்றும் நகை
தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளைஒரு சொத்தாக வைத்திருக்கும் ஆசையானது எளிமையாக வாங்குதல் மற்றும் நெகிழ்தன்மை மற்றும் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு தொகைக்கும் பணமாக மாற்றும் தன்மையையே சார்ந்திருக்கிறது.
தங்க நகைகள் நாட்டின் கலாச்சார மற்றும் சடங்காச்சார முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இது செழிப்பான பரம்பரை சொத்தாகும், குடும்பம் மரபுவழியை உயிருடன் வைக்க தலைமுறைகளாக ஒப்படைக்கப்படுகின்றன. ஒரு மத அல்லது பண்டிகை சமயத்தில் ஒருவருக்கு பரிசளிப்பதற்கு இது ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகிறது.
இந்த உலோகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சமீபத்தில் இந்தியாவிலேயே இந்திய தரநிலை இலாகா (BIS) ஹால்மார்க் முத்திரை கொண்ட இந்திய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தியது,. இது 24-காரட் தூய்மை மற்றும் 99.9 சதவீதம் துல்லியமானதாகும், பாதுகாப்பு மற்றும் எளிதாக மறுசுழற்சி செய்வதற்காக உள்ளமைக்கப்பட்ட போலி தடுப்பு அம்சங்கள் நிரம்பியதாகும். உங்கள் முதலீட்டுப் பிரிவில் ஒரு மதிப்பு கூட்டுதலாக இந்த நாணயத்தை நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட MMTC கடைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகள்மூலம் 5, 10 அல்ல 20 கிராம்களில் வாங்கலாம்.
தங்க பங்கு வர்த்தக நிதிப் பிரிவுகள்
தங்க பங்கு வர்த்தக நிதிப் (ETF) பிரிவுகளில் முதலீடு செய்வது பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வது போன்றதாகும். குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு உரிமையாளர் பங்குகளை குறிப்பிடுவது போலவே, ஒவ்வொரு ஈ.டி.எப் (ETF) பிரிவும் 0.5 முதல் 1 கிராம் தங்கத்தை குறிப்பிடுகிறது. இந்தப் பிரிவின் விலை பொருட் தங்கத்தின் விலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது மற்றும் சந்தை நிலைமைகள் மற்றும் தங்கத்தின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
ஈ.டி.எப்.களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான சில முக்கியமான காரணங்கள்:
- வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலை
- நீங்கள் தங்கத்தை பொருளற்ற வடிவத்தில் வைத்திருப்பனால் எளிதாக சேர்த்து வைத்துக் கொள்ளலாம்
- எளிதாக பணமாக்கலாம்; ஈ.டி.எப்.களை பங்குச் சந்தைகளில் விற்கலாம்
- அடிப்படைத் தங்கம் 99.5% அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டுமென சட்டம் வலியுறுத்துவதனால் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது
- 0.5 கிராம் என்ற சிறிய அளவில் கூட முதலீடு செய்யலாம், இது சிறிய முதலீட்டை சிறப்பானதாக்குகிறது
தங்க மியுச்சுவல் ஃபண்ட்
தங்க மியுச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு பரஸ்பர நிதி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை தங்க ஈ.டி.எப.களில் முதலீடு செய்யும் ஒரு கூட்டு முதலீட்டு திட்டமாகும். உங்களால் ஈ.டி.எப.களில் நேரடியாக முதலீடு செய்ய முடியும் போது, நீங்கள் ஏன் தங்க ஈ.டி.எப.களை வாங்க வேண்டும்? பங்குகளை நேரடியாக வாங்குவதுடன் ஒப்பிடும் போது ஒரு பங்கு தொடர்பான மியுச்வல் ஃபண்ட் பாதுகாப்பானதாக மற்றும் எளிதானதாக இருப்பதனால், தங்கள் தங்க முதலீட்டு பங்கை திறம்பட நிர்வகிக்க ஒரு தொழில்சார்ந்த நிதி மேலாளரை விரும்புகிறவர்களுக்கு ஒரு தங்க மியுச்வல் ஃபண்ட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
தங்கம் மியுச்வல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- உங்களுக்கு ஒரு டிமேட் கணக்கு இல்லாவிட்டாலும், நீங்கள் தங்க மியுச்வல் ஃபண்ட்களை வாங்கலாம்.
- வழக்கமான மற்றும் தொந்தரவு இல்லாத தங்க முதலீட்டை உறுதிப்படுத்த நீங்கள் ஒரு எஸ்.ஐ.பி (SIP) -ஐ தேர்ந்தெடுக்கலாம்
- ஒரு தொழில்துறை மேலாளரின் நிபுணத்துவத்திலிருந்து நீங்கள் நன்மை அடைவதனால், இது பணப்புழக்க அபாயத்தை குறைக்கிறது
அரசின் தங்க பத்திரங்கள்
அரசின் தங்க பத்திரம் (SGB) என்பது தங்கத்தின் தற்போதைய விலையில் இந்திய அரசு வழங்கும் ஒரு கடன் ஆவணமாகும். இந்த பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டிருக்கிறது, 5 வது வருடத்திலிருந்தே வெளியேறும் வாய்ப்பையும் வழங்குகிறது. முதலீட்டின் ஆரம்ப மதிப்பில் ஆண்டுக்கு (6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும்) 2.75% என்ற ஒரு நிலையான வட்டிவிகிதத்தை முதலீட்டாளர்கள் பெறுவார்கள்.
அன்றைய தங்க விலையிலேயே அதை மீட்கலாம், எனவே இது எந்த மதிப்பிலும் நீங்கள் ஆதாயம் பெறும் வாய்ப்பளிக்கிறது. நீங்கள் 10 யுனிட்கள் எஸ்.ஜி.பி. (SGB) வாங்கினால், தங்கத்தின் சந்தை விலை கிராமிமிற்கு ரூ. 3000 எனில் அதன் மதிப்பு ரூ. 30000 ஆகும். மீட்கும் போது, தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 9000 ஆக மதிப்பிடப்படும் எனவே, நீங்கள் அதை ரூ. 90,000 -க்கு விற்று மொத்தம் ரூ. 60,000 லாபம் பெறுவீர்கள்.
குறைந்தபட்ச காலம் இதை ஒரு நடுத்தர முதலீட்டு விருப்பமாக்குவதனால், இங்கே தான் நீங்கள் அதை எடைபோட வேண்டும்:
- இது இந்திய அரசால் ஆதரிக்கப்படுகிறது, எனவே இது ஆபத்தில்லாத வருவாய்க்கு ஒரு வாய்ப்பளிக்கிறது
- இது டிமேட் அல்லது காகித வடிவத்தில் இருக்கிறது. தங்கம் பொருள் வடிவத்தில் இல்லை என்பதனால், முதலீட்டாளருக்கு தூய்மை அல்லது பாதுகாப்பு ஆபத்து மற்றும் சேமிப்பு செலவு எதுவுமில்லை
- நிலையான வட்டி விகிதம் விலை வீழ்ச்சி காரணமாக ஏற்படும் பிற தங்க முதலீட்டாளர்களின் இழப்புக்களில் தாக்கத்தை குறைக்கிறது
- எஸ்.ஜி.பி (SGB) பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது, எனவே முதலீட்டாளர்கள் தொகை பெரியதாக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறலாம்
- இவற்றை நிதி நிறுவனங்களின் கடன்களுக்கான பிணையமாக பயன்படுத்தப்படலாம்.
சுருங்கச் சொன்னால், நீங்கள் இப்படித் தான் உங்கள் தங்க முதலீடுகளை இந்த வருடம் திட்டமிட வேண்டும்:
நீங்கள் காகிதமற்ற மற்றும் செயலற்ற பிரிவு நிர்வாகத்தை விரும்பினால் ஈ.டி.எப்.களை தேர்ந்தெடுங்கள் |
நீங்கள் செயல்பாடுள்ள மற்றும் தொழில்சார்ந்த நிர்வாகத்தை விரும்பினால், தங்க மியுச்வல் ஃபண்ட்களை தேர்ந்தெடுங்கள் |
2017 இல் அரசின் தங்க பத்திர வெளியீடு ஆரம்பமாக காத்திருங்கள் மற்றும் உத்தரவாதமான வட்டி விகிதம் தான் உங்கள் முதலீட்டுப் பிரிவை சத்தியுள்ளதாக்கும் என்றால் உலகின் மிகவும் பிடித்தமான விலைமதிப்பற்ற உலோகத்தின் மீது முதலீடு செய்யுங்கள். |