Published: 27 செப் 2017
இந்திய தங்கப் பொருளாதாரம்
இந்தியாவில் தங்கத்தின் பொருளாதாரம் என்பது ஒரு சிக்கலான விஷயமாக உள்ளது. இந்தியா பல ஆண்டுகளாக, குறிப்பாக பல தசாப்தங்களாக, மிகப் பெரிய தங்க நுகர்வோராக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 4500 டன் உலோகத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகமானது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அதன் வலிமையான பாதுகாப்பு உணர்வு காரணமாக, இந்திய சமூகத்தில் உளவியல்ரீதியாக ஆழமான இடத்தைப் பிடித்துள்ளது. தங்கம் என்பது, உண்மையில், தலைமுறை தலைமுறைகளாக சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான இயற்கையான முறையாக இருக்கிறது. ஒருவர் செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ இருந்தாலும், அவரின் முதலீட்டுப் பட்டியலில் சிறிய அளவிலாவது தங்கம் இருக்கும்.
இந்தியாவில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோர் என்பது நகைக் கடைகள் ஆகும், இவை சுமார் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தங்கத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 400,000 நகைக்கடைகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை முறைசாரா துறையில் செயல்படுகின்றன.
இந்தியர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆசை என்பது அதைக் கையாள்வதற்கான ஒரு கடினமான பொருளாக உருவாக்கியுள்ளது, அனைத்து சூழ்நிலைகளிலும் அதன் தேவை அதிகமாக இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் அதன் விலை கணிசமான அளவிற்கு மாறாமல் இருக்கிறது, அதாவது தங்கத்தின் விலை உயர்வு என்பது அதன் தேவையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மற்ற நிதிசார்ந்த சொத்துக்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதும் இதன் அர்த்தமாகும்.
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தரவுகளைப் பயன்படுத்தி, 2013ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய ஒரு ஆய்வானது, நிச்சயமற்ற தன்மைக்கு எதிரான பாதுகாப்பாக தங்கத்தை நுகர்வோர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பங்குச் சந்தை செழிப்பாக இருந்தாலும் அல்லது வீழ்ச்சியடைந்தாலும், மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். உண்மையில், நிச்சயமற்ற சந்தை சூழல்களில் தங்கத்தை வாங்குவதாக FICCI நடத்திய ஆய்வில் பதிலளித்த 22 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். தங்கம் என்பது ஒரு வீட்டின் வழக்கமான செலவினத்தின் ஒரு பகுதியாக உள்ளது; நகைகள் மற்றும் தங்கக் காசுகளை வாங்குதல் என்பது தினசரி நுகர்வில் 8 சதவீதம் உள்ளது, இது மருத்துவ செலவுகள் அல்லது கல்விக்கான செலவுகளை விட சற்றே குறைவானதாகும்.
தங்கத் தொழிற்சாலைகளானது சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது மற்றும் இந்தியாவின் ஏற்றுமதிக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது. 2012ல், தங்க நகைகள் என்பது $18.28 பில்லியனுக்கு இருந்தது, இது $18.05 பில்லியன் அளவில் இருந்த வைரங்கள் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்களை விட அதிகமாகும். 2013-ல் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின் அறிக்கையானது, இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்கத்தின் பங்களிப்பு என்பது $30 பில்லியன் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
தங்கம் தொடர்புடைய பொருளாதாரத்தின் சிக்கலானது, கொள்கை வகுப்பாளர்களுக்கு சில சவால்களை அளிக்கிறது, ஆனால் பின்வரும் கேள்வியையும் கேட்கிறது: பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு பற்றிய நமது கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிக்க வேண்டுமா? அந்த கேள்விக்கு 'ஆம்' என்ற பதில் கிடைப்பது அதிகரிப்பதாக தோன்றுகிறது.