Published: 08 பிப் 2018
தங்கத்தில் சுவாரஸ்யமான பொருட்கள்
அழகு மற்றும் அரிதாக கிடைப்பதால் உலக அளவில் விரும்பப்படுவது, தங்கத்தை உச்சபட்ச அந்தஸ்தின் சின்னமாக்கி உள்ளது. பண்டைக் காலத்திய மன்னர்கள் முதல் நவீன காலத்து கோடீசுவரர்கள் வரை, தங்களது தங்க பொக்கிஷங்களாக மாற்றி வைத்துள்ள அசாதாரணப் பொருட்களில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
தங்க உடை அலமாரி -
இந்தியக் கோடீசுவரரான, காலஞ்சென்ற ஸ்ரீ தத்தாத்ரை புகே, மஞ்சள் உலோகத்தால் தயாரிக்கப்பட்ட சட்டையை வைத்திருந்தார். இருந்தபோதிலும், தங்கத்தின் மீதான அவரின் மோகத்தை இது தணிக்கவில்லை என்பதால், சட்டைக்குப் பொருத்தமாக தங்கத்தில் பெல்ட் செய்தார். ‘மிகவும் விலையுயர்ந்த சட்டை’ என்ற வகையில் இந்த சட்டை கின்னஸ் விருதினையும் பெற்றுள்ளது.
தங்க நேரம் -
ராஜாக்கள் காலத்தைச் சேர்ந்த இன்னொரு கலையம்சமான தயாரிப்பு, 1920ல் பாட்டியாலா மகாராஜா புபிந்தர் சிங் வைத்திருந்த அழகிய ரிபீட்டர் பாக்கெட் வாட்ச் ஆகும். இந்தியாவின் பணக்கார ராஜாக்களில் இவரும் ஒருவர்.
தங்கப் பெட்டகம் -
கவுதம புத்தரை ஒரு ஆன்மிகத் தலைவராகக் கொண்டாடவும், கவுரவிக்கவும், அவரது உடம்பின் எச்சங்களை அவரது சீடர்கள் ஒரு தங்கப் பெட்டகத்தில் வைத்து பராமரித்துவருகின்றனர். இந்தப் பெட்டகம் 35 கிலோ எடையுள்ளது மற்றும் 18 காரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டதாகும்.
தங்கக் காலணிகள் -
மற்ற துணைக்கருவிகளைக் கூட விட்டுவிடலாம்; இந்தியாவின் பாரம்பரியம், காலணிகளிலும் தங்க நூலில் எம்பிராய்டரி செய்கின்ற அளவுக்கு மிகவும் உயர்ந்தது. இந்த அழகிய தங்கக் காலணிகளை 1920ல் கபுர்தலா மகாராஜா ஜக்ஜித் சிங் சொந்தமாக வைத்திருந்தார்.
தங்க ஆயுதங்கள் -
1943ல் ஜோத்புர் மகாராஜா உமைத் சிங் பயன்பாட்டிற்காக தங்கம் மற்றும் தந்தத்தால் ஒரு கோல்ட் (Colt) பிஸ்டல் தயாரிக்கப்பட்டது. இதைவிட மாட்சிமைமிக்க சண்டை எதையும் நமது அரசர்களால் செய்திருக்க முடியாது.
நினைவில் வைத்திருக்க வேண்டிய நடை -
கூச் பேஹார் மகாராணி இந்திரா தேவி வகை வகையான காலணிகள் அணிவதில் அதிக நாட்டமுள்ளவர். வைரம் மற்றும் மரகதம் போன்ற விலைமதிப்பற்ற நவரத்தினங்கள் பதித்து தங்கத்தால் கெட்டிப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஷூக்களை அவர் வைத்திருந்தார்.
எடை மிக்க தங்கம் -
செல்வத்தின் மீது இந்திய அரசர்கள் கொண்டிருந்த மோகத்திற்கு ஓர் அளவே இல்லை எனலாம். ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், ஆஸ்ட்ரிச் முட்டையளவு பெரியதான தங்க முட்டையை பேப்பர் வெயிட் போல பயன்படுத்திவந்தார்.
காலங்காலமாய் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சீமான்கள் தங்கத்தின் மீதான தங்களின் காதலில் எப்படியெல்லாம் திளைத்திருந்தனர் என்பதற்கு இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. புதிய தலைமுறையினர் இது குறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை நாம் எதிர்நோக்குகிறோம்.