Published: 11 செப் 2018
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தங்கம் அணிதல்
கவிதைகள், உணவு வகைகள் முதல் தனித்துவமான ஃபேஷன் வரை – பாரம்பரியமும் கலாச்சாரமும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சாராம்சமாகும்.
இந்த மாநிலத்தின் செழிப்பான பாரம்பரியம் நுணுக்கமான, நல்ல கலைத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட, தனித்துவமான மற்றும் நுட்பமான விவரங்களுக்குப் புகழ் பெற்ற வசீகரமான தங்க நகை வடிவமைப்புகளில் பிரதிபலிக்கிறது. மேலும் அவற்றின் பெயர்கள் பாரசீக மற்றும் சமஸ்கிருத மொழிகளிலிருந்து பெறப்பட்டவை.
உண்மையில், காஷ்மீரில் பல்வேறு நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட தங்க நகைகளை அறிமுகப்படுத்திய மற்றும் செல்வாக்கை ஏற்படுத்திய பெருமை முகலாய அரசி – நூர்ஜஹானையே சேரும்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில தனித்தன்மையான தங்க நகை வகைகளைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.
ஜிக்கினி:
இந்த ஆபரணம் நெற்றியில் அணியப்படுகிறது. இது தங்கத்தால் செய்யப்பட்டு விளிம்புகளில் முத்துக்களும் தங்க இலைகளும் தொங்க விடப்படுகிறது. இவை பொதுவாக முக்கோணம், அரை வட்டம் மற்றும் வட்ட வடிவங்களில் இருக்கும்.
மரியாதை: பின்ட்ரஸ்ட்
மரியாதை: மிர்ராவ்.காம்
மரியாதை: மிர்ராவ்.காம்
மரியாதை: மிர்ராவ்.காம்
ஹல்கா பேண்ட்:
இறுக்கமான கழுத்துப் பட்டையான பாரம்பரிய சோக்கரான ஹல்கா பேண்ட் கழுத்தைச் சுற்றி அணியப்படுகிறது. இது பொதுவாக தங்கத்தில் செய்யப்படுகிறது மேலும் கயிற்றால் ஒன்றாக இணைக்கப்பட்ட பிணைப்பு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
மரியாதை: பின்ட்ரஸ்ட்
மரியாதை: பின்ட்ரஸ்ட்
டெஜிஹோர்:
ஒவ்வொரு பண்டிட் பெ்ணாலும் தனது திருமணச் சின்னமாக அணியப்படும், டெஜிஹோர் காதின் மேல் பாகத்திலிருந்து தொங்கும் இது ஒரு ஊஞ்சலாடும் காதணியாகும். இது திருமணமான பெண்களுக்குள் தெய்வீக வலிமையை உட்புகுத்துவதற்காக தலைசிறந்த காஷ்மீர ஆச்சாரியர்களால் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
மரியாதை: அமேஜான்.காம்
அட்டா – ஹோர்:
திருமணமான காஷ்மீர பண்டிட் பெண்களால் அணியப்படும் மற்றுமொரு ஆபரணமான அட்டா ஹோர், இரண்டு காதுகளின் மேலும் தொங்கும் மேலும் இது தலையின் மேல் ஒரு தங்கச் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளது.
கனா – தூர்:
இளம் பெண்களுக்கு மத்தியில் அதிகப் புகழ்பெற்ற கனா – தூரும் காதுக்கான ஒரு நகை ஆகும். தங்கத்தில் செய்யப்பட்டு சிகப்பு அல்லது பச்சை முத்துக்கள் பதிக்கப்பட்ட கனா – தூர் காஷ்மீர கவிதைகளில் ‘அன்புக்குரியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியாதை: ரெடிஃப்.காம்
மரியாதை: மிர்ராவ்.காம்
குணுஸ்:
மணிக்கட்டிற்கான ஆபரணமான குணுஸ் ஒரு தடிமனான வளையலாகும் மேலும் பாம்பு அல்லது சிங்கத்தின் தலையை இரண்டு முனைகளிலும் கொண்டிருக்கும். இந்த வடிவமைப்பு வனவிலங்குகளால் ஈர்க்கப்பட்ட பல வடிவங்களில் ஒன்றாகும்.
மரியாதை: பின்ட்ரஸ்ட்
மரியாதை: ஷாபிஃபை
சோன்டஸ் அல்லது ப்ரான்ஷில்:
இது திருமணத்தின் அடையாளமான மற்றுமொரு ஆபரணமாகும். பெரும்பாலும் லடாகி பெண்களால் அணியப்படும் சோன்டஸ் அல்லது ப்ரான்ஷில் திருமண சமயத்தில் தாயிடமிருந்து மகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு ஆபரணமாகும். இந்த நகை இடது தோள்பட்டையில் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த ஆபரணத்தில் சில தங்க வட்ட வில்லைகளை இணைக்கும் நீண்ட வெள்ளி இழைகளைக் கொண்டிருக்கிறது.
மாங்டிகா
திருமண நகைகள் என்று வரும்போது, தங்க மாங்டிகா (அல்லது வெறும் டிகா) நெற்றியில் அணியப்படும் மற்றொரு ஆபணமாகும். மணப்பெண்கள் மேலும் நுண்ணிய தங்க சரிகைச் சித்திர வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட கடையம் அல்லது வளையலை அவர்களுடைய மணிக்கட்டில் அணிகிறார்கள்.
மரியாதை: பின்ட்ரஸ்ட்
மரியாதை: ஃபேஷன்மந்த்ரா
தங்க நகைகள் உண்மையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கலாச்சாரத்தில் பதியப்பட்டிருக்கிறது மேலும் பல நூற்றாண்டுகளாக மாநிலத்தின் அலங்கார ஒப்பனைகளில் ஈடு செய்ய முடியாத ஒரு பகுதியாக விளங்குகிறது. அவர்களுடைய தங்க நகைகளின் திகைப்பூட்டும் பாணிகளும் வடிவமைப்புகளும் நவீன – நாட்களின் கைவினைக்கலைஞர்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்துள்ளது.