Published: 07 செப் 2017
உலகெங்கும் உள்ள தங்க நினைவுச் சின்னங்கள்
அறிவியல் நிலைப்பாட்டின் பயன்களுக்கும் மேல், தங்கமானது செல்வம், வளமை மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. அடிக்கடி மக்கள் தங்கம் அணிவதும் தங்கத்தை பரிசாக அளிப்பதும் நேர்மறை ஆற்றலை கொண்டுவருவதாக சொல்லப்படுகிறது. மனிதகுல வரலாற்றின் சில முக்கிய பிரபலமான நினைவுச்சின்னங்கள் இந்த விலை மதிப்புள்ள உலோகத்துடன் தொடர்புடையவை என்றால் அது மிகை அல்ல.
-
தங்க புத்தர், பாங்காக், தாய்லாந்து
நீங்கள் தாய்லாந்திற்குச் சென்றால், கண்டிப்பாக வால் டிராய்மிட்டிக்குச் செல்லவும் (Wal Traimit). இந்தக் கோவிலில் முற்றிலும் தங்கத்தால் ஆன புத்தர் சிலை உள்ளது. இந்த சிலையானது 9.8 அடி உயரம் கொண்டது. இதில் 18 காரட் தூய்மையிலான 5500 கிலோ தங்கம் உள்ளது. இன்றைய தங்க மதிப்பில் இந்த சிலையின் மதிப்பு 300 மில்லியன் டாலர்களாகும். !
-
தி டோம் ஆஃப் தி ராக், ஜெருசலம், இஸ்ரேல்
குறிப்பாக பாடல்களில் ஜெருசலம் தங்கத்தின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஜெருசலத்தில் மிகவும் பழமையான இஸ்லாமிய நினைவுச் சின்னமான கம்பீரமான டோம் ஆஃப் தி ராக் ('Dome of the Rock') உள்ளது. அசலாக தங்கத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலின் மாடம் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் மாற்றி அமைக்கப்பட்டு பின்னர் தங்க இலைகளால் மூடப்பட்டுள்ளது. 100,000 தங்க நாணயங்களை உருக்கி இந்த மாடம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. 1998ஆம் ஆண்டு இந்த மாடம் மறுசீரமைக்கப்பட்டபோது 80 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டது.
-
புத்தா டோர்டென்மா, பூடான்
குயன்செல்ஃபோடிராங் இயற்கைப் பூங்காவில் (Kuenselphodrang Nature Park) மலை உச்சியில் உள்ள புத்தர் சிலை உலகில் உள்ள பெரிய புத்தர் சிலைகளுள் ஒன்று. அது 180 அடி உயரம் கொண்டது. பித்தளையில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது. முலாம் பூசுதல் என்றால் எதனையாவது தங்க பெயிண்ட் மூலமோ அல்லது தங்க இலை மூலமோ மூடுவதாகும். சுவாரஸ்யமாக, இந்த மாபெரும் சிலையில் பல சிறிய புத்தர் சிலைகள் உள்ளன. அதற்குள் 8 இஞ்ச் உயரம் கொண்ட 100,000 புத்தர் சிலைகளும் 12 இஞ்ச் உயரம் கொண்ட 25,000 புத்தர் சிலைகளும் உள்ளன. இந்த 125,000 புத்தர் சிலைகளும் கூட பித்தளையால் செய்யப்பட்டு தங்க முலா பூசப்பட்டவை .
-
பொற்கோவில், அமிர்தசரஸ், இந்தியா
16ஆம் நூற்றாண்டில் நான்காவது சீக்கிய குருவான குரு ராம் தாஸ் சாஹிப்பால் அமிர்தசரஸ் பொற்கோவில் உருவாக்கப்பட்டது. அன்றாடம் உலகெங்கிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குவிகிறார்கள். 1830ஆம் ஆண்டில் 162 கிலோ தங்கத்தால் இங்கு முலாம் பூசப்பட்டுள்ளது. இதன் அப்போதைய மதிப்பு ரூ.65 இலட்சமாகும். பின்னர் 500 கிலோ எடை கொண்ட 24 காரட் சத்தமான தங்கத்தால் ரூ.140 கோடி செலவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. தங்க பெயிண்ட்டின் 24 அடுக்குகள் பூசப்பட்டன. இந்த புதுப்பித்தல் நான்கு ஆண்டுகளாக சென்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மிகவும் திறமையான கலைஞர்களின் கரங்களால் இந்த தங்க முலாம்கள் பூசப்பட்டன.
இந்த இடங்களுக்கு செல்வதாக நீங்கள் அடுத்த முறை திட்டமிட்டால், இந்த நினைவுச்சின்னங்களை உங்கள் பட்டியலில் சேர்த்து தங்கத்தின் மேன்மையை அனுபவிக்கவும்.