Published: 10 செப் 2018
இந்தியாவின் தங்க கோட்பாடுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
இந்தியாவின் தங்கம் தொடர்பான கோட்பாடுகளும் சட்டங்களும் காலப்போக்கில் புதிய பரிணாமம் பெற்று எழுச்சி அடைந்துள்ளன. இன்று மாற்றம் பெருமளவு முன்னேற்றத்துடன் நெறிப்படுத்தப்பட்ட வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டுள்ளது . 2018 பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சர் யூனியன் பட்ஜெட் உரையின் போது தங்கத்தை சொத்துப் பிரிவாக மேம்படுத்த மத்திய அரசு விரிவாக வடிவமைக்கப்பட்ட தங்கம் சார் கொள்கைகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.. இதன் பொருள் என்னவென்றால் பங்குகள் ,பத்திரங்கள், சொத்துக்கள் மற்றும் வியாபாரப் பொருட்களை போலவே தங்கத்தில் முதலீடு செய்வதும் சொத்து என்னும் ஒற்றை குடையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், புதிதாக வெளியிடப்படும் இந்தியத் தங்கக் காசுகள் அல்லது முன்மொழியப்பட்ட ஹால்மார்க் ஒழுங்குமுறை விதிகள் போன்றவை இந்தியாவில் தங்கத்தை வாங்குவதிலும் விற்பதிலும் நுகர்வோரிடம் தரமான நம்பிக்கையை ஏற்படுத்த உதவியுள்ளது. இந்திய தங்கக் கொள்கைகள் சுதந்திரத்திற்கு பிறகு எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதை பார்ப்போம்.
கட்டுப்பாட்டு காலம் (1947 -1962)
இக்காலகட்டத்தில் தங்கச் சட்டங்கள், தங்க வினியோகம் மற்றும் உள்ளூர் சந்தை விலை அத்துடன் தங்கக் கடத்தலை ஒழுங்குப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பெரா அல்லது அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் (1947) FERA or Foreign Exchange Regulation Act அன்னியச் செலாவணி பரிமாற்றகத்தில் பணம் செலுத்துதல் மற்றும் ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்தவும், ரூபாய் மற்றும் தங்கத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஒழுங்குப்படுத்தவும் உதவியது.
1956 இல் இந்தியா தங்கத்தை பின்னணியாகக் கொண்ட விகிதாச்சார இருப்பு முறையிலிருந்து" "குறைந்தபட்ச இருப்பு முறைக்கு" மாறியது. அதாவது ஆர்பிஐ தங்கம் மற்றும் அந்நிய செலவாணி இருப்பை ரூ 200 கோடி வசரை பராமரிக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ரூபாய் 115 கோடி வரை தங்கமாக இருக்க வேண்டும் என்பது பொருளாகும்.
எல்லைப் பிரச்சனையில் இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்புகள் சரிந்தன. ஒரு உத்தரவில் பொதுமக்களின் முதலீட்டை ஊக்கப்படுத்த முதல் தங்க பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட காலகட்டம் (1963 – 1989)
1962ஆம் ஆண்டு தங்கத்தின் உற்பத்தி மற்றும் பரிமாற்றங்களின் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இது தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1968) [Gold Control Act (1968)]. க்கு வழிவகுத்தது. அதிகப்படியான தங்க இறக்குமதிகள் இந்திய ரூபாயின் கடுமையான மதிப்பிழப்பிற்கு வழிவகுத்தது. இந்தச் சட்டம் பிரச்சனையைக் கட்டுப்படுத்தவும் தங்கத்தை தனிப்பட்ட முறையில் சொந்தமாக வைத்திருக்கும் அளவை வரையறுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தங்க கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள்:
- 14 காரட்டுக்கு மேற்பட்ட தங்க உற்பத்தி தடைசெய்யப்பட்டது.
- தனிநபர்கள் தங்க நகைகள் வைத்திருப்பதற்கான அளவு வரையறுக்கப்பட்டது.
நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சரிகட்டவும் தங்க கடத்தலை குறைக்கவும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒரு திட்டம் தாமாக முன்வந்து சொத்துக்களை தெரிவிக்கும் சட்டம் Voluntary Disclosure of Income and Wealth (Amendment) Ordinance (1975), இதன் படி மக்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட ஊக்குவிக்கப் பட்டனர்.
தங்க ஏலம் (1978) மற்றும் தங்க பத்திர வெளியீடு போன்ற மற்ற முன் முயற்சிகளும் இதே நோக்க்ததில் செயல்படுத்தப்பட்டவையாகும்.
தாராளமயமாக்க காலகட்டம் (1990 – 2011)
இந்த காலகட்டத்தில் அரசாங்கம் தங்கத் தொழிற்துறையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
1990 ஆம் ஆண்டு அரசாங்கம் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (Gold Control Act) ரத்து செய்தது.
இந்திய குடியுரிமையற்ற திட்டம் (Non-Resident Indian scheme - 1992) மற்றும் சிறப்பு இறக்குமதி உரிமத் திட்டம் Import License scheme (1994) ஆகியவை என்ஆர்ஐ க்கள் இந்தியாவிற்குள் தங்கத்தை கொண்டு வருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997 ஆம் ஆண்டு வாக்கில் பல வங்கிகளுக்கு நாட்டிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்ய அதிகாரமளிக்கப்பட்டது.
1999 இல் அரசாங்கம் தங்க வைப்புத் திட்டத்தின் (GDS) மூலமாக பயன்படுத்தப்படாத தங்கத்தை திரட்டி தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அந்த வருமானத்தின் மூலம் வட்டியை ஈட்ட ஒரு வாய்ப்பை வழங்கியது.
202 ஆம் ஆண்டு முதல் தங்கத்தை அணுகுவது அதிக வசதியாகியது, வங்கிகளுக்கு தங்க நாணயங்களை விற்க அனுமதியளிக்கப்பட்டது. மேலும் 2008 ஆம் ஆண்டு முதல் நீங்கள் தங்க வாங்க வேண்டுமென்றால் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றால் போதுமானதாகியது.
இந்தியாவில் தங்க பரிமாற்ற பங்கு நிதிகளை Gold Exchange Traded Funds (ETFs) அறிமுகப்படுத்தியதிலிருந்து தங்கத்தை வைத்திருப்பதற்கான எல்லையும் வசதியும் 2007 ஆம் ஆண்டில் அதன் உச்சத்தை அடைந்தது. தங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கம், முதலீட்டில் நெகிழ்வுத்தன்மை, தரத்திற்கு உத்திரவாதம், மற்றும் மன அழுத்தமற்ற சேமிப்பு ஆகியவற்றை வழங்கியது.
இது தொடர்பாக: தங்க ஈடிஎஃப் களில் முதலீடு செய்ய தொடக்ககால முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி.
2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி நுகர்வோரின் தங்கத்தின் மீதான ஆர்வத்தை புதுப்பித்தது. தேவை உச்சத்தைத் தொட்டதால் தங்கத்தின் விலைகள் மும்மடங்காகியது.
தாராளமயமாக்க காலகட்டத்தின் இறுதி நிலை நாட்டின் மொத்த தங்கத் தேவையில் மிகப் பெரிய எழுச்சியை அடைந்து 2010 ஆம் ஆண்டில் 1001.7 டன்னைத் தொட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இடைத் தலையீட்டு காலகட்டம் (2012 – 2013)
உலகளாவிய நிலையற்ற தன்மை மற்றும் உள்நாட்டு நிர்வாகச் சிக்கல்கள் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு இயக்கங்களை பாதித்தது. தங்கத்தின் தேவையைக் குறைக்க அரசாங்கம் மேற்கொண்டு பல கொள்கை இடைத் தலையீடுகளை அறிமுகப்படுத்தியது.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கிடையே பல முறை ஏற்றப்பட்ட வரிகள் இறக்குமதி வரியை 2% இருந்து 10% அதிகரிக்கச் செய்தது.
தங்க நாணயங்களை இறக்குமதி செய்வதற்கும் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
80:20 விதியின் அறிமுகம் தங்க இறக்குமதியாளர்கள் மீது 20% ஏற்றுமதி கடப்பாட்டை அமலாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய சரக்குகளை கொண்டு வருவதற்கு முன் குறைந்தபட்சம் 20% தங்க இறக்குமதிகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அடுத்த இறக்குமதி கடந்த ஏற்றுமதி ஆணையை நிறைவு செய்தததைப் பொறுத்து மட்டுமே அனுமதிக்கப்படும்.
வெளிப்படைத்தன்மை காலகட்டம் (2014 - 2018)
இந்த கால கட்டத்தில் அரசாங்கம் நாட்டின் எல்லா பொருளாதார அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தது.
2014 ஆம் ஆண்டில் 80:20 சட்டம் ரத்து செய்யப்பட்டது, தங்க நாணயங்களின் இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு 1999 ஆம் ஆண்டின் தங்க வைப்புத் திட்டம் (Gold deposit scheme) தங்க நாணயமயமாக்கத் திட்டமாக (Gold Monetisation Scheme) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் தங்க சவரன் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, இது முதலீட்டாளர்களுக்கு காகிதப் பத்திரங்களின் மீது வட்டியை வழங்கியது.
இந்தியாவின் முதன் முதல் தேசியத் தங்க நாணயம் – இந்திய தங்க நாணயம் (ஐஜிசி) 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக: இந்தியத் தங்க நாணயம்: தேசிய பெருமையின் சின்னம்
2016 ஆம் ஆண்டு 2 இலட்சத்திற்கும் அதிகமாக தங்கக் கொள்முதல் செய்யும் போது பான் கார்டை வெளிப்படுத்துவதை கட்டாயமாக்கி அரசாங்கம் உத்தரவிட்டது.
ஆண்டு விற்பனை அளவு ரூ. 12 கோடிக்கும் அதிகமாக இருந்தால் தங்க நகைக்கடைக்காரர்கள் மீது 1% சுங்க வரி விதிக்கப்பட்டது. மேலும் தர முத்திரையிடப்பட்ட 99.5% தூய்மை கொண்ட தங்க நாணயங்களின் மீதான 1% சுங்க வரி ரத்து செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட்டில் தங்கத்தை ஒரு சொத்துப் பிரிவாக மேம்படுத்த ஒரு விரிவாக்கப்பட்ட தங்கக் கொள்கை உருவாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. மேலும் அரசாங்கம் நாட்டில் நுகர்வோருக்கு நட்பான மற்றும் திறமையான வர்த்தக அமைப்பைக் கொண்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட தங்க பங்கு பரிமாற்றக முறையை நிறுவும் என அறிவித்தது. தங்க நாணயமயமாக்கல் திட்டம் சீரமைக்கப்பட்டு மக்கள் தடைகளற்ற தங்க வைப்புக் கணக்குகளை தொடங்க உதவும்.
இந்த மேம்பாடுகள் நமது அரசாங்கம் இந்தியாவில் தங்கம் வாங்குபவர்களுக்கு நன்மை தரக்கூடிய தங்க கொள்கைகளுக்கு மாறுவதை நோக்கி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.