Published: 30 அக் 2018

மகாராஷ்டிராவில் தங்கத்தை அணிவது

History of traditional Maharashtrian gold jewellery and how they are worn now

பல்வேறு நூற்றாண்டுகளாகவே தங்க நகையானது மகாராஷ்டிராவின் கலாச்சாரத்தில் ஓர் அங்கம். மகாராஷ்டிர பெண்கள் அணியும் ஆடைகளின் ஓர் அங்கமாக தங்க நகை வடிவங்கள் உள்ளன. இவை மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்கள் அணிந்த நகைகளின் செல்வாக்கின் தாக்கம் பெற்றவை.

பைத்தானி புடவை, சந்திகோர் பிந்தி, இலட்சுமி ஹார் என்று எதுவாக இருந்தாலும் மகாராஷ்டிர பெண்ணின் தோற்றத்திற்கு அழகு சேர்க்கும் ஒவ்வொரு அம்சமும் அந்த மாநிலத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றுபவை.

மகாராஷ்டிராவின் சில பாரம்பரிய தங்க நகை வடிவங்கள் குறித்த பார்வை இங்கே.

மோகன் மாலா

2-8 அடுக்குகள் கொண்ட தங்க மணிகள் அடங்கிய நீண்ட அட்டிகையான மோகன் மாலாவானது அன்றாட நகையாகவும் மணப்பெண்ணின் நகையாகவும் அணியப்படுகிறது.

கோல்ஹாபுரி சாஜ்

திருமணத்தின் அடையாளமான கோல்ஹாபுரி சாஜ், திருமணமான மகாராஷ்டிர பெண்களால் அணியப்படுகிறது. இது மணமகனின் குடும்பத்திலிருந்து அளிக்கப்படும் பரிசு. இதன் வடிவம் கோல்ஹாப்பூரின் அடித்தளத்திலிருந்து வந்ததால் இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இந்த கழுத்துநகையில் 21 பதக்கங்கள் உள்ளன. மத்தியில் உள்ள முக்கிய பதக்கத்திற்கு சாஜ் காட் என்று பெயர். கோல்ஹாபுரி சாஜ்ஜில் சாஜ் காட்டும் மற்ற தங்க பதக்கங்களும் உள்ளன. இலைகள் போல வடிவத்தில் இந்த 21 பதக்கங்களும் உள்ளன. இந்த 21 பதக்கங்களில், 10 பதக்கங்கள் பகவான் விஷ்ணு அவதாரத்தை குறிக்கின்றன. 8 புனிதத் தன்மையை குறிக்கின்றன (அஷ்டமங்கல்), 1 ஒரு தாயத்து ( அதாவது துஷ்ட சக்தியிலிருந்து நம்மை பாதுகாப்பவை) மற்றும் மீதமுள்ள 2ம் சிவப்பு மாணிக்கமும் மரகதமும்.

இலட்சுமி ஹார்

புத்லி ஹார் என்று அழைக்கப்படும் இந்த காசு அட்டிகை அல்லது கோவில் அட்டிகையில் தங்க நாணயங்கள் பட்டில் பிண்ணப்பட்ட நூலினால் கட்டப்பட்டுள்ளன. எல்லா நாணயங்களிலும் செல்வத்தின் கடவுளான இலட்சுமிதேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். 17ஆம் நூற்றாண்டிலிருந்தே மகாராஷ்டிர பெண்களின் நகைகளின் முக்கிய அங்கமாக இந்த நகைகள் உள்ளன.

டோடு

டோடு எனப்படும் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த தங்க வளையல் ஒவ்வொன்றும் 250-300 கிராம் எடை கொண்டது. கையாலேயே செய்யப்படும் இந்த வளையலில் தங்க வளையங்கள் உள்ளன. இதனை மெரூகூட்ட மட்டும் ஒரு மாதமாகும். கொத்து கொத்தான பச்சைநிற கண்ணாடி வளையல்களுடன் மகாராஷ்டிர பெண்கள் இத்தகைய வளையல்கள் அணிவதை நீங்கள் காணமுடியும் .பொதுவாக இந்த டோடு எனப்படும் நகையும் மணமகனின் குடும்பத்திலிருந்து பெறப்படுவதாகும்.

வாக்கி

மேல்புற கைக்கான நகை அல்லது பாஜ்ஜீ பாண்டு என்றழைக்கப்படும் வாக்கி பாரம்பரியமாக இரண்டு மேல் கைகளிலும் அணியப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர பெண்களால் ஒரு கையில் மட்டும் அணியப்படுகிறது. இது தங்கத்தால் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு அழகிய உருவம் பதித்தது.

அம்பாடா வேணி ஃபூல்

என்றழைக்கப்படும் 22 காரட் தங்க ஊசி மகாராஷ்டிர மணமகளின் கொண்டையில் அணியப்படுகிறது. இதில் பல்வேறு விதமான உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் பிரபலமானது கம்பு மணிகளுடன் உள்ள சூரியகாந்தி பூவின் வடிவம்தான்.

துஷி

ஒவ்வொரு மகாராஷ்டிர மணமகளையும் தனித்துவமாக காட்டும் நகை துஷி. இது சோக்கர் பாணி அட்டிகை. இதில் பல்வேறு வடிவத்தினால் ஆன தங்கமணிகள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் அடுக்கடுக்காக கம்பிகள் உதவியுடன் பிண்ணப்பட்டிருக்கும். இந்த கழுத்து நகையை சரி செய்ய உதவும் ஒரு வித டோரியுடன் இது அமைக்கப்படுகிறது. மணமகளின் புதிய இல்லத்தில் அபரிமிதமான உணவுடன் அவள் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாள் என்று இந்த மணிகள் குறிப்பாக உணர்த்தும்.

உலகெங்கும் தனது தனித்துவமான நுண்ணிய வேலைப்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட இந்த வடிவங்கள், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மகாராஷ்டிர தங்க நகைகள். அந்த மாநிலத்தின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மற்றும பண்டிகைகளில் இதன் முக்கியத்துவம் அதிகம்.