Published: 17 ஆக 2017
ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினர் தங்கம் வாங்கும் வழிகள்
1980-2000 க்கு இடையில் பிறந்த ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினர் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் பல்வேறு மாற்றங்களை உணர்ந்துள்ளனர். அவர்களது நுகர்வோர் கலாச்சாரம், எதிர்பார்ப்புகள், தேவைகள் ஆகியவை முந்தைய தலைமுறைகளிலிருந்து மாறுபடுபவை. பல்வேறு நிறுவனங்கள் அவர்களது வணிக தந்திரங்களை காலத்தோடு ஒட்டுவதற்காக மாற்ற வேண்டியுள்ளது. இந்தத் தலைமுறையினரின் கருத்துக்களும் இரசனைகளும் அவர்களது பெற்றோரிடமிருந்து வேறுபடும் என்பதிலும் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை,
அவர்கள் தங்கம் வாங்கும் முறையிலும் இது பிரதிபலிக்கிறது.
உருவாகும் இரசனைகள்பணம் என்று வரும்போது, ஆயிரமாவது ஆண்டில் பிறந்தவர்கள் மரபுரீதியான செலவு மற்றும் முதலீட்டிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. இன்று பல்வேறு சொகுசான நவநாகரிக பொருட்கள் உள்ளன. இவை இளந்தலைமுறையினரின் கண்ணைக் கவர்கின்றன. உயர்தரமான நகைகளிலிருந்து வடிவமைப்பு துணிமணிகள் வரை, விளையாட்டு கார்கள், கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட்ஃபோன்கள் என்று அவர்களது கவனத்தைக் கவரும் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஒரு விருப்பமான தேர்விற்கு ரூ.50,000 அளிக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் 34 வயதைக் கடந்த நுகர்வோரில் 42%பேர் தங்க நகை வாங்குவேன் என்றுதான் கூறுவார்கள். 18–33 வயதிற்கு இடைப்பட்ட வயதில் உள்ளவர்களில் 33% மட்டுமே தங்கம் வாங்குவதாகக் கூறுவர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நுகர்வோரில் இளம் தலைமுறையினருக்கு தங்கத்தைத் தவிர கவரக்கூடிய அம்சங்கள் நிறைய உள்ளன என்பதுதான்.
பண்டிகை நாட்களிலும் கூட குறைந்த விலைமத ரீதியான பண்டிகைகள் மற்றும் அக்ஷய திரிதியை மற்றும் தாந்தேராஸ் போன்ற சில விசேஷ நாட்கள் தங்கம் வாங்குவதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. சிக்கனமான புதிய தலைமுறை தங்கம் வாங்குவதற்கு ஏற்ற தருணமாக குறைந்த விலை புள்ளிகளை கருதுகின்றன. தங்கம் வாங்குவதற்கு எற்ற சிறப்பு தருணங்களுக்காகக் காத்திருப்பதைவிட, எப்போது விலை குறைகிறதோ அப்போது வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
துணை பிராண்டுகளை உருவாக்குவது (Creation of sub-brands)தேவையான பாணியில் மாற்றங்கள் உருவாவதால், ஒரு குறிப்பிட்ட நுகர்வோர் குழுமத்தின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு பெரிய நகை பிராண்டுகள் கூட துணை பிராண்டுகளை கொண்டுவரத் துவங்கிவிட்டன. எடுத்துக்காட்டாக, பணிக்கு செல்லும் இளம் பெண்களைக் கவர, பல்வேறு நகை பிராண்டுகள் தற்போது துணை பிராண்டுகளை கொண்டுவந்துள்ளன. இவை எடை குறைவானவை , வடிவமைப்புகளில் எளிமையானவை.
தொடர்புடையது. தங்கத்தில் முதலீடு செய்வதற்காக பணி புரியும் பெண்ணிற்கான வழிகாட்டி
Sources:
Source1, Source2
மாற்று சந்தைகள்
ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினர் எப்போதுமே ஏதாவது புதியதாக வித்தியாசமாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். சந்தை அவர்களது தேவைகளை சந்திக்க முயற்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது சந்தையை இளம் வாடிகையாளர்களுக்காக திறந்து வைத்துள்ளது (குறிப்பாக 25லிருந்து 35 வயதிற்கு உட்பட்ட இளம் பெண்களுக்காக). இவர்கள் பல்வேறு வடிவங்களையும் பாணிகளையும் சோதித்து வாங்கலாம். இதைப்போலவே, பாரம்பரிய நகைக்கடைகளும் புதிய சந்தைக்கு ஏற்றார்போல் ஆன்லைன் மேடைகளை அமைத்து வருகின்றன.
நீண்ட நாள் நிலைத்தன்மைதேவையான பாணிகளில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்ட போதும், நீண்ட கால ஓட்டத்தில் ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினருக்கு தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வலுவான முதலீட்டு இலக்காக தங்கம் இருந்துள்ளது. தங்கத்தின் உரிமைதாரருக்கான கருத்தானது இந்திய மனங்களில் வலுவாக வேர் விட்டுள்ளது.
மேலும், உலக தங்கக் கவுன்சிலின் ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தனி நபர் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 35% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மத்திய தர வர்க்கத்தினரின் வருமான வரம்பு (2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிகமாக இருக்கும்) வரவிருக்கும் ஆண்டுகளின் தங்கத்தின் தேவையை ஆதரிக்கும் என்பதே பொருள்.
தொடர்புடையது: தங்கம் வாங்குவது – நவீன மாதிரிகளை அணைப்பதற்கான நேரம்
கீழ்க்கோடு (The bottom line)ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினர் பொருட்களை வேறு விதமாக கையாள்கின்றனர். இது வரையறுக்கக்கூடிய ஓர் அம்சம். இதே விஷயம் தங்கத்திற்கும் பொருந்தும். தங்கத்தை வாங்குவதிலும் முதலீடு செய்வதிலும் புதிய வேறுபட்ட வழிகளைக் காண அவர்கள் முயற்சிக்கின்றனர். விற்பனையாளர்கள், தங்களின் பங்குக்கு, தங்களது தந்திரங்களை இயல்பாக மாற்றி ஆயிரமாவது ஆண்டின் தலைமுறையினரின் தேவைக்கேற்றபடி அளிக்க முயிற்சிக்கின்றனர். ஆனால் வேறுவிதமான வழியில் அல்ல.