Published: 17 ஆக 2017
உலகின் படைப்பில் தங்கத்தின் பங்கு
நெடுங்காலமாகவே மனித நாகரிகத்தின் அங்கமாக தங்கம் இருந்துள்ளது. தங்கத்தின் மீதான நமது ஈர்ப்பு எவ்வளவு வலுவானது என்றால், பல்வேறு புராணங்களிலும் மதங்களிலும் கூட தங்கம் அதன் பாதையை வகுத்துள்ளது. கிறித்தவ மதத்தின் படி சொர்க்கம் தங்கக் கதவுகளைப் பெற்றுள்ளது. இந்திய இதிகாசங்களும் புராணங்களும் கூட தங்கத்தைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடுகின்றன. அதிலும் குறிப்பாக, இராமாயணத்தில் தங்கத்தைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் படைப்பில் தங்கம் பெரும் பங்காற்றியுள்ளது என்று கூறுவது மிகவும் அதிசயத்தக்க உண்மை.
இந்து மதத்தில் தங்கம்
இந்துக்கள் மூம்மூர்த்திகளை வழிபடுபவர்கள்:
பிரம்மன், விஷ்ணு, மற்றும் சிவன்
படைப்பவர், காப்பவர் மற்றும் அழிப்பவர்
ஆனால் பிரபஞ்சத்துடன் மூன்று கடவுள்களையும் இணைப்பது ஒரு நூல்: தங்கம்.
புனித நூல்களில் தங்கம்இந்த மதத்தில் பல்வேறு புனித நூல்கள் உள்ளன. வேதங்கள் , உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை) இன்னும் பிற:. மனுவின் சட்ட நூல்கள், சத்பத ப்ராமணம், க்ரிஹ சூத்ரம் ஆகிய நூல்களும் உள்ளன.
நான்கு வேத நூல்கள் உள்ளன. ரிக்வேதம், சாமவேதம், யஜூர் வேதம், அதர்வ வேதம் ஆகியவை. பிரம்மா நமது உலகைப் படைத்தார் என்று ரிக் வேதம் கூறுகிறது. நமது புனித நூல்கள் என்ன சொல்கிறது என்றால்:
- ஹிரண்யகார்பா என்ற கருப்பையில் தங்க முட்டை இருந்தது என்று ஒரு பாடல் கூறுகிறது.
- சிவ மகாபுராணத்தில், விஷ்ணுவிற்கும் பிரம்மனுக்கும் இடையில் யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்டது. அப்போது படைப்பிற்கான பொறுப்பை சிவன் பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் அளித்தார். பின்னர், பிரம்மனுக்கு சிவன் தங்க முட்டையை அளித்தார். அது இரண்டாகப் பிளந்தபோது ஒன்று சொர்க்கமாகவும் மற்றொன்று பூமியாகவும் மாறியது.
- மத்சயபுராணத்தில் உள்ள சில பாடல்கள் பிரம்மாவை ஹிரண்யகார்பா என்று அழைக்கின்றன. உலகம் தோன்ற ஆரம்பித்த போது, ஒரு உயர்வானவர் பிறந்தார். அவர் சுயம்பு என்று அழைக்கப்பட்டார். அவர் தண்ணீரைப் படைத்து அதில் தங்க முட்டையை இட்டார். நாட்கள் செல்ல செல்ல, அந்த முட்டை குஞ்சு பொறித்தது. அதிலிருந்து பிறந்தவர் வேறு யாருமல்ல, பிரம்மாதான்.
கடவுள்களும் அம்மன்களும் தங்கத்தின் சாயலில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய புராணங்களில் பல்வேறு இடங்களில் தங்க இரதங்கள் இடம்பெறுகின்றன. தங்க உடைகள் அணிந்த விக்கிரகங்கள் இன்றும் கோவில்களில் உள்ளன. இவற்றுக்கு உள்ள தங்க ஒளிவட்டங்கள் கடவுளின் சக்தியையும் ஞானத்தையும் பற்றி பக்தர்கள் மத்தியில் பறைசாற்றுகின்றன.
உண்மையில், எல்லா முக்கிய மதங்களிலும் தங்கத்திற்கென்று சுவாரஸ்யமான தொடர்புகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.