Published: 15 மே 2018
ஒரு மனிதனின் வாழ்க்கையில் தங்கத்தின் பங்கு
உங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக தங்கம் இருப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
நீங்கள் ஓர் இரவு விருந்தளிக்கும்போது தனது சிறந்த நகைகளை உங்கள் மனைவி அணிகிறார்.
உங்களது இரவு அலமாரியில் உங்கள் திருமணநாளின் புகைப்படம் தங்க சட்டத்தால் செய்யப்பட்டு மாட்டப்பட்டுள்ளது.
நீங்கள் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கு செல்லும்போதும் உங்கள் தந்தையின் தங்க கடிகாரம் உங்கள் மணிக்கட்டில் இருக்கிறது. சுதந்திர தினத்தன்று நீங்களும் உங்கள் மனைவியும் வாங்கிய இந்திய தங்க நாணயம், உங்கள் தேசபக்தியின் அடையாளமாகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நீங்கள் அளித்த முதல் முதலீடாகவும் உங்கள் பெட்டியில் இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் தங்கத்தின் அர்த்தம் பலவிதங்களில் அதிகரித்துள்ளது.
உங்களது பூனூல் திருமணத்திற்கு, உங்கள் தாத்தா பாட்டியினர் உங்களுக்கு தங்க மணிக்கட்டு வளையத்தை அளித்தனர். அது பளபளப்பாக இருந்தது. அழகாக இருந்ததால் நீங்கள் எங்கும் அதனை அணிந்து சென்றீர்கள். உங்களது அனைத்து புகைப்பட ஆல்பங்களிலும் அது பிரதிபலித்தது.
ஜோதிடத்தின் மீது உங்கள் அன்னைக்கு உள்ள நம்பிக்கை என்றுமே குறைந்தில்லை. அதைப்போலவே உங்களுக்கு உங்கள் அன்னை மீது உள்ள நம்பிக்கையும் என்றும் மாறாதது. உங்கள் அம்மா உங்களுக்கு அளித்த தங்க சங்கிலியைத்தான் நீங்கள் இன்றும் அணிந்துகொள்கிறீர்கள். அது உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று அவர் நம்புகிறார். அவரை அது சந்தோஷமாக வைத்திருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் அம்மா உங்களுக்கு அளித்த தங்க சங்கிலிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகை. அது உங்கள் அன்னைக்கான உங்கள் அன்பின் குறியீடு மட்டுமல்ல, அது மிகவும் பிரபலமான நவநாகரிக அறிக்கையும்தான்.
உங்களது பட்டமளிப்பு விழாவில் நீங்கள் கொண்டாடுவதற்காக ஒரு விருந்து இருந்தது. அந்த மேசை முழுவதும் நிறைய பரிசுப் பொருட்கள் இருந்தாலும், அதில் உங்கள் பெயர் தங்கத்தில் பொறிக்கப்பட்ட அந்த பேனாதான் விசேஷமானது. ஒரு பொன்னான துவக்கத்திற்கான பொன்னான பரிசு.
நீங்கள் உங்கள் முதல் சம்பளத்தை வாங்கிய போது, முதன்முறையாக ஒரு தங்க இடிஎஃப்பில் அதனை முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள். உங்கள் பெற்றோர் நம்பிய, தங்கத்தின் மீதான மரபு சார் மதிப்பிறகும் உங்கள் நண்பர்கள் நம்பிய நவீன முதலீட்டுக்கும் இடையே இருந்த இணைப்பு அது.
உங்களது சிறந்த நண்பரின் கரங்களை உங்கள் திருமணத்தன்று நீங்கள் பிடிக்க வேண்டுமென்றால், நீங்கள் அளிக்கும் தங்க மோதிரம்தான் நீங்கள் எந்த அளவிற்கு அவரை நேசித்தீர்கள் என்று உங்களுக்குக் காண்பிக்கும்.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருமண பரிசு எதுவென்றால் உங்கள் நண்பர் உங்களுக்கு அளித்த அழகான தஞ்சை ஓவியம்தான். கலைதான் உங்களது முதல் காதல் என்று அவருக்கு தெரிந்திருக்கும்.
நீங்களும் உங்கள் மனைவியும் முதல் குழந்தையை எதிர்பார்த்துகொண்டிருக்கிறீர்கள். எழு மாதங்களில் ஓர் அழகிய குழந்தை உங்களின் பொறுப்பில் இருக்கும். அவரது எதிர்காலத்தை பாதுகாக்க, நீங்கள் ஒரு தங்க நிதியத்தை வாங்கியுள்ளீர்கள். அவர்களது கல்வியில் இவ்வாறு முதலீடு செய்வது மிகவும் விரைவு அல்ல. நீண்ட காலத்தில் தங்கம் இலாபகரமானதாகவே இருக்கும்.
உங்கள் பெற்றோரின் 25ஆவது திருமண ஆண்டு விழா இன்னும் சில வாரங்களில் உள்ளபோது, நீங்கள் சிறந்த பரிசை எதிர்பார்க்கிறீர்கள். தங்கத்தை விட சிறந்த பரிசு வேறென்ன இருக்கப்போகிறது. தங்கம்தான் அன்பு, மரியாதை, பாரம்பரியம், மற்றும் சிறந்த அனைத்தின் குறியீடும்.