Published: 18 மே 2018
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தங்கத்தின் பங்கு
கடந்த பல ஆண்டுகளாக, தங்கம் உங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
தங்கத்துடனான உங்களுடைய முதல் பரிச்சயம், நீங்கள் பிறந்தவுடன் உங்கள் தாத்தா பாட்டி ஆகியோர் உங்களுக்கு பரிசாக அளித்த ஒரு தங்கச் சங்கிலி. இது உங்கள் எதிர்காலத்திற்கான முதல் முதலீடாகும். இன்னமும் உங்களுடைய அலமாரியில் ஒரு சிறிய பையில் இருக்கும் அது, மிக மதிப்புமிக்க உங்களது உடைமையாகும்.
நீங்கள் ஐந்து வயதாக இருந்தபோது, உங்கள் தாயாரின் பளிச்சிடும் தங்க ஜிமிக்கிகளில் இருந்து உங்களது பார்வையை உங்களால் விலக்க முடியவில்லை. ஒருவேளை அது தான் தங்கம் உங்களுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
தீபாவளி அன்று, உங்கள் பெற்றோர் தங்க நாணயங்களை வாங்கி, தன்தேரஸ் அன்று தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானது என்ற கதையை உங்களுக்கு கூறினார்கள். நாணயங்கள் மிகவும் பிரகாசமாக ஜொலித்தன, உங்கள் பெற்றோர்கள் தங்களது பொக்கிஷத்தை வைத்துக்கொள்ள மிகவும் பாதுகாப்பான இடம் எது என்பது பற்றி நீண்ட நேரத்திற்கு கலந்துரையாடினர்.
நீங்கள் 15 வயதை எட்டியபோது, நீங்கள் வயதுக்கு வந்ததைக் கொண்டாடுவதற்காக உங்களுடைய தாயார் தங்க காதணிகளின் முதல் ஜோடியை உங்களுக்காக வாங்கினார். தங்கம் உங்களது சருமத்தை மென்மையானதாகவும் ஊறுபடாததாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் அணிந்திருந்த அனைத்திற்கும் அது பொருந்தியது. உங்கள் இளமைக்கேயுரிய உற்சாகத்தை கொண்டாட துடிப்பான மற்றும் அழகான தங்க வளையங்கள்!
முதல் முறையாக நீங்கள் தொழில்முறை உடையில் வெளியே சென்ற நாளான- உங்களுடைய முதல் பணியின் முதல் நாளை நீங்கள் ஒருபோதும் மறக்கமாட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும், ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி பிரகாசிக்க ஆவலுடனும் இருந்தீர்கள். உங்கள் தாயார் தங்க மோதிரங்களை உங்களுக்காக வாங்கினார், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தீர்கள். வழக்கத்திற்கு மாறான ஆனால் தனிச்சிறப்புமிக்க பாணி!
நீங்கள் முதன் முதலில் வாங்கிய பெரிய நகை உங்களுடைய தங்க ப்ரேஸ்லெட். நீங்கள் பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கோ, ஒரு நண்பரை சந்திப்பதற்கோ அல்லது சக பணியாளர்களுடன் மதிய உணவிற்கு செல்லும்பொழுதோ அதை நீங்கள் தினமும் அணிந்திருந்தீர்கள். அது உங்களின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது.
உங்களுடைய முதல் சம்பளம் கிடைத்தவுடன், தங்கத்தின் மகத்தான பொருளாதார மதிப்பிலிருந்து பயனடையும் நவீன ஈ.டி.எஃப்.எஸ்-கள் மற்றும் தங்க நிதிகளால் உருவான வழிமுறைகளின் மூலம் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினீர்கள்.
உங்களுடைய திருமணம் ஒரு தங்க மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் உங்கள் மாப்பிள்ளையும் மேற்கொள்ளவிருந்த புதிய பயணத்தை தொடங்கும் பெருமையில் பிரகாசத்துடன் காட்சியளித்தீர்கள். உங்கள் துணைவரின் முடிவற்ற காதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒரு சின்னமான, உங்கள் தங்க திருமண மோதிரம் இன்னும் உங்கள் விரலில் ஜொலிக்கிறது.
உங்கள் விலையுயர்ந்த மூதாதையர் தங்க நகைகளில் நயமான காட்சியளித்து இடை கழியில் நடந்தீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் மரபுகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதைக் காட்டியது.
தங்களுடைய விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்கள் மற்றும் நிபந்தனையற்ற அன்பின் அடையாளமாக உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கத்தாலான சில அருமையான பரிசுகளை உங்களுக்குக் அளித்தார்கள்.
நீங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றபோது, அவளுடைய புன்னகையைப் போன்றே பிரகாசித்த தங்க வளையல்களின் அழகான ஜோடியை அவளுக்கு பரிசாக அளித்ததன் மூலம் உங்கள் தாயார் ஆரம்பித்த பாரம்பரியத்தை நீங்கள் தொடர்ந்தீர்கள்.
அனைத்து முக்கியமான சமூக நிகழ்வுகளுக்கும், உங்கள் தோற்றத்தை உயர்த்திக் காட்டுவதற்காக தங்கத்தை நீங்கள் தொடர்ந்து நாடுகிறீர்கள். உங்கள் பணியிடத்திலும் எல்லோரும் உங்கள் தங்க நகைகளின் எளிமையான ஆனால் நேர்த்தியான சேகரிப்பைக் கண்டு பிரமிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அதன் சிறந்த உணர்ச்சிமிக்க, சமூக, கலைநயமுடைய மற்றும் பொருளாதார மதிப்பை அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு தலைமுறையினருக்கு இடையே தங்கம் எப்போதுமே ஒரு பிணைப்பு சக்தியாகும்.