Published: 22 அக் 2018
ரோமானியப் பேரரசில் தங்கத்தின் முக்கியத்துவம்
கி.மு. 3000 ஆண்டு வாக்கில் முதன்முதலாக தங்கத்துடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே, தங்கம் பண்டைய நாகரிகத்தில் பெருமளவிலான முக்கியத்துவத்தைப் பெற்றது.
தங்க நாணயங்களை முதன்முதலாக கரன்சி என்ற பிரபல வடிவத்தில் உருவாக்கியவர்கள் என்ற பெருமை ரோமானியர்களைச் சேரும். ரோமானிய சகாப்தத்தில் நகைகள் செய்வதற்கு தங்கம் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது. தங்க நகைகள் வளம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருந்தது.
காலப்போக்கில், தங்கம் மேல் வர்க்கத்தினரால் மட்டுமே வாங்கக்கூடிய பானைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்த தொடங்கப்பட்டது. வீடுகளில் தங்கம் எவ்வளவு அதிகமாக காணப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக செல்வச்செழிப்பு இருக்கும் என்று நம்பப்பட்டது.
மேலும் ரோமானியர்கள் இறந்த உடலுடன் அவர்களின் தங்க நகைகளையும் சேர்த்து புதைக்கும் மரபு பின்பற்றப்பட்டது, இதனால் அவை அவர்களுடைய மரணத்திற்கு பின்னர் மறுமைக்கு உடன் செல்லும் என்று நம்பப்பட்டது.
ரோமானியர்கள் அவர்களுடைய தங்கத்தை எங்கிருந்து பெறுகிறார்கள்?
ரோம் நகரில் செழிப்பான இயற்கை தங்க வளங்கள் ஒருபோதும் இருந்ததில்லை மேலும் அதை பெறுவதிலும் மந்தமாக இருந்தது. தங்கத்தின் முதல் கண்டுபிடிப்பு ஆல்ப்ஸ் மலையின் மேற்கு மற்றும் தெற்கு அடிவாரங்களில் போ நதியில் நிகழ்ந்தது. தங்கத்துடன் தொடர்புடைய இரண்டாம் ப்யூனிக் போர் (கி.மு. 218-201) ரோம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்தது.
ரோமானியர்கள் ஸ்பெயினை வென்ற பிறகு, அவர்கள் அடுவார் ஆற்றுப் பள்ளத்தாக்கு, மலாகா மாவட்டம், க்ரனடா சமவெளிகள், மற்றும் சியரா நெவடா மலைச் சரிவுகளில் தங்க சுரங்கங்களை தோண்டினர். இந்த நிலப்பரப்புகளில் தங்கத்தின் தடயங்கள் இன்றளவும் காணப்படுகின்றன. மற்றொரு மிகப்பெரிய ஆதாரம் ஜுலியஸ் சீஸரின் பிரிட்டன் வெற்றியைத் தொடர்ந்து வந்தது.
சாம்ராஜ்யம் விரிவடைந்ததால், தங்கத்திற்கான ஆவலும் அதிகரித்தது. அவர்களுடைய வெற்றிகள் வெர்ஸலி, ரைன் நதி, அத்துடன் மத்திய ஆப்ரிக்கா மற்றும் எகிப்து பகுதிகளின் அட்லாண்டிக் கடற்கரை ஆகிய இடங்களில், உண்மையில் உலகம் முழுவதிலும் இருக்கும் சுரங்கங்களிலிருந்து தங்கத்தைப் பெற்றுத் தந்தது. கி.பி. 49 இல் பேரரசர் க்ளாடியஸின் மனைவி, அக்ரிபினா, தங்க இழைகளாலான மேலாடையை அணிந்திருந்தார். ஒரு கட்டத்தில் ரோமானியர்களிடம் அளவுக்கதிகமான தங்கம் இருந்ததால், அவர்கள் காட்சிப்படுத்துவதற்காக தூயத் தங்கத்தாலான மிகப்பெரிய சிலைகளை உருவாக்கத் தொடங்கினர்.
ரோமானிய தங்க நகைகள்
ரோம் சாம்ராஜ்ஜியத்தில், தங்கமானது செல்வம், வளம், மற்றும் ஒரு தனி நபரின் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.
தங்கம் தெய்வங்களின் உலோகமாகக் கருதப்பட்டதாலும் மற்றும் சூரியனிடமிருந்து இறங்கி வந்ததாகவும் நம்பப்பட்டதால், அது ஆபரணங்கள் தயாரிப்பதற்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. புல்லா என்றழைக்கப்பட்ட தாயத்துக்கள் தீய சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு கவசமாகக் கருதப்பட்டு பிறந்தது முதல் இளம் ஆண் பிள்ளைகளுக்கு அணிவிக்கப்பட்டது. லிங்கச் சின்னங்களுடன் கூடிய தங்க மோதிரங்களை இளைஞர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடியவை என்று நம்பியதால் விரும்பி அணிந்தனர். தங்க மோதிரங்கள் பெரும்பாலும் பொதுவான, சில சமயங்களில் ஆண்களால் அணியப்படும் ஒரே நகையாகவும் இருந்தது.
ரோமானியப் பெண்கள் நெக்லஸ்கள், வளையல்கள், காப்புகள் மற்றும் வங்கிகளையும் அணிய விரும்பினர். அவர்களுடைய கைகளில் இருக்கும் நகைகளின் எண்ணிக்கை எப்போதும் ஏழுக்கும் அதிகமாக இருக்கும். தங்கத்தால் பிணைக்கப்பட்ட சுருண்ட பாம்பு வடிவங்களில் செய்யப்பட்ட வளையல்கள் அவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த வடிவமைப்பு அழியாத்தன்மையை குறித்தது.
ரோமானிய நாணய வகைகள்
ரோமானியர்களின் உலகில் அடிப்படை தங்க நாணய அலகு ‘ஆரியஸ்’ என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இடையிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டக் காலம் வரை பயன்படுத்தப்பட்டன.
இந்த சகாப்தத்தில், பரவலாக விநியோகிக்கப்பட்ட நாணயங்களை தயாரிப்பதற்கு தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டது. தற்போதைய பேரரசரின் முகம் அந்த நாணயங்களில் பொறிக்கப்பட்டது. மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒன்று அகஸ்டசின் உருவம் பொறித்த நாணயங்களாகும்.
ரோமானியர்கள், குறிப்பாக, ஸ்பெயினில் நீரியக்க சுரங்கப்பணியை கண்டுபிடித்த பிறகு தங்கத்தை வெட்டும் பணி மிகவும் விலை உயர்ந்ததாக மாறியது. ஆழ்ந்த சுரங்கங்களை விட, இந்த முறையில் அதிகத் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஆறுகள் மீண்டும் சேதப்படுத்தப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் பொறுப்பாகிறது. ரோமானியர்கள் தங்கத்தை அகழ்ந்து, நாணயங்களை அச்சடித்து, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் பரவலாக விநியோகித்தனர்.
தங்கம் பண்டைய ரோமை உலகின் மிக சக்தி வாய்ந்த சாம்ராஜ்ஜியமாக உருவாக்கியதிலும், பொருளாதாரத்திலும் பெருமளவு பங்களிப்பைச் செய்தது. ரோமானியர்களின் தங்கத்தின் மீதான காதல் இதர பல நாகரிகங்களையும் வெகுவாக ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்களும் பின்தொடர்ந்து இந்த விலை மதிப்பற்ற உலோகத்தின் மீது உலகத்திற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது.