Published: 27 செப் 2017
சிறியதே அற்புதமானது - தங்க நானோ துகள்கள்
நானோமீட்டர்கள் பற்றி நீங்கள் நினைக்கும் போது, உண்மையிலேயே மிக மிக சிறியது என்றே நினைக்க வேண்டும். ஒரு மீட்டர் அளவில் ஒரு பில்லியனில் ஒரு பங்கு என்பதே நானோமீட்டர் என்ற ஓர் அலகு ஆகும். ஒரு மில்லிமீட்டரை ஒரு மில்லியன் துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய ஒரு அளவில், தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் மாயாஜாலம் போல் தோன்றுகின்றன. அத்தகைய ஒரு அளவில் தங்கம் என்பது ஒரு உலோகமாக அதிசயங்களைச் செய்ய முடியும்.
வரலாற்று ரீதியாக, பல நூற்றாண்டுகளாக, தங்கம் என்பது குறிப்பிடத்தக்க அளவில் எந்தவித தீங்கு விளைவிக்கும் விளைவுகளும் இல்லாமல், பல் சிகிச்சை உட்பட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இயற்கையாகவே, சில சூழ்நிலையில் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதால் பிளாட்டினம் (அல்லது வெள்ளி) (வெள்ளி என்பது வினைபுரியும் திறன் கொண்டது) பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ பயன்பாடுகளுக்கு தங்க நானோ துகள்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.
தங்க நானோ துகள்களை உருவாக்குவதன் மூலம், தங்கத் துகள்கள் பயன்படுத்த முடியாத சிறிய அளவிலான பகுதிகளில் தங்கத்தை பயன்படுத்துவதற்கு உதவுகிறது, இது புதிய திறன்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. புற்றுநோய் கட்டிகள் போன்ற உடலின் நோயுற்ற பகுதிகளில் விஞ்ஞானிகள் தங்க நானோ துகள்கள் மூலக்கூறுகளை இணைக்கின்றனர், பின்னர் அதனுடன் சிகிச்சை மருந்து மூலக்கூறுகளை இணைக்கின்றனர்.
விஞ்ஞானிகள் பிற பயன்பாடுகளையும் ஆராய்கின்றனர். ஒரு மில்லிமீட்டரில் மில்லியன் பங்கு என்ற அந்த சிறிய அளவிலும்கூட, தங்க நானோ துகள்களால் செயல்பட முடியும். மருந்து அளிக்கும் செயல்பாட்டுக்கான பயன்பாட்டைப் பொறுத்து, 5 நானோ மீட்டர்கள் (nm) என்பது ஒரு தரநிலை ஆகும். அளவை சரிசெய்வதன் மூலம், விஞ்ஞானிகள் உறிஞ்சுதல் ஸ்பெக்ட்ரம்-ஐ மாற்ற முடியும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை ஒளியை உறிஞ்சி அதை வெப்பமாக்குகிறது, இதை புற்றுநோய் செல்களைக் கொல்ல பயன்படுத்தலாம்.
தங்கத்தின் சிறந்த உயிரியல் தகுதி காரணமாக, மருத்துவ சாதனங்கள் என்பது பயன்பாட்டின் மற்றொரு பகுதியாகும். தற்போது, மருத்துவ சாதனங்களில் தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான பல நேரடி பயன்பாடுகள் உள்ளன. இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர்கள் கம்பிகள், மற்றும் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும்பொழுது தமனிகளை விரிக்கவும் மற்றும் உதவிசெய்யவும் தங்கம்-பூசிய ஸ்டென்ட்கள் ஆகியவை உதாரணங்களாகும். எக்ஸ்-கதிர்களால் தங்கத்தை ஊடுருவ முடியாது, இதனால் ஸ்டென்ட்களை சிறந்த நிலையில் வைக்க உதவுகிறது.
தங்கத்திற்கு பாக்டீரியல் தொற்றுக்கு மிகுந்த எதிர்ப்புத்திறன் உள்ளது. இதனால் உள் காது (கோக்லீயர் உள்வைப்புகள்) போன்ற தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயகரமான உள்வைப்புகளுக்கான தேர்வுக்கான சிறந்த பொருள் ஆகும். எடுத்துக்காட்டுக்கு, தங்கம்-பூசப்பட்ட மிரிங்கோடமி (காது சவ்வில் திரவத்தை வெளியேற்றுவதற்கு அல்லது அழுத்தத்தைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை) குழாய்கள் என்பது காது குழிவினை வடிகட்டுவதற்கும், தற்காலிகமாக காற்றேற்றுவதற்கும் உள்வைப்புகளாக பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவப் பயன்பாடுகளில், பயன்படுத்தப்படும் தங்கத்தின் மதிப்பானது தங்கத்தின் உண்மையான எடையை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாகும். இது விலைமதிப்பற்ற உலோகம் என்பதற்கும் மேல் உள்ளது.