Published: 06 ஜூலை 2017
பொற்கோவிலின் பிரம்மிக்கத்தக்க வைக்கும் 7 அம்சங்கள்
அமிர்தசரசில் அமைந்துள்ள பொற்கோவில் பதினாறாம் நூற்றாண்டில் நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ் சாகேப் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். நீங்களும் ஒரு முறை வருகைதரும் திட்டமிடும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. ஆகவே, தங்கும் விடுதிக்காக பதிவு செய்து பயணப் பெட்டியோடு சென்று பொற்கோவில் என்று அழைக்கப் படும் இந்த அழகு மிகு அற்புதத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்தும் முன்னரே பிரம்மிப்பில் உங்களை வாய் பிளக்கச் செய்யும் தகவல்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தக் கோவில் கட்டப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 1830 ஆம் ஆண்டு மஹராஜா ரஞ்சித் சிங்தான் இதற்குத் தங்கத்தில் உறையிட்டார். இதற்கு அந்தச் சமயத்தில் ரூபாய் 65 இலட்சம் மதிப்புள்ள 162 கிலோ தங்கம் தேவைப்பட்டது.
Source: Outlook India
-
பின்பு 90 ஆம் ஆண்டுகளில் இது 500 கிலோ கிராம் தங்கம் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டது. இன்றைய தேதிக்கு அதன் மதிப்பு ரூபாய் 140 கோடியையும் தாண்டும்.
Source:Fateh.sikhnet.com
-
இந்த புதுப்பித்தல் 1995 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டுவரை நான்கு வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
Source: Fateh.sikhnet.com | Google Books | Outlook India
-
முழுவதுமாக 24 கேரட்டால் உருவாக்கப்பட்டது, இது இந்திய இல்லங்களில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 22 கேரட் தங்கத்தைவிட அதிக தூய்மையானது.
Source: Outlook India
-
பொற்கோவிலை உறையிட்ட மஹராஜா ரஞ்சித் சிங் தங்கத்தாலான 7 லிருந்து 9 அடுக்குகளைத்தான் நிறைவு செய்தார்; நான்கு வருடம் நீண்ட புதுப்பித்தலின் போதுதான் 24 அடுக்குகள் அமைக்கப்பட்டன.
Source: Outlook India
-
இதன் புகழ் 25 ஆவது நூற்றாண்டு வரை நீடித்து நிலைத்து நிற்கும்.
Source: Outlook India
-
ഇതിൻറെ യശസ് ഇരുപത്തഞ്ചാം നൂറ്റാണ്ടുവരെയെങ്കിലും നിലനിൽക്കും.
Source: Fateh.sikhnet.com | Outlook India
இதன் பராமரிப்புச்செலவு அனைத்தும் நன்கொடைகள் மூலமே நடைபெறுகிறது. இந்தக் கோவிலைச் சுத்தப்படுத்தி பராமரிப்பது, பொதுச் சமையலறையில் சமைத்து பரிமாறுவது போன்ற வேலைகள் ஊதியம் எதுவுமின்றி தன்னார்வத்தொண்டர்களால் செய்யப்படுகிறது. ஹர்மிந்தர் சாகிப் அல்லது பொற்கோவில் ஒவ்வொரு மாதமும் 30 இலட்சம் வருகையாளர்களை ஈர்த்து பகல் நேரங்களில் பிரகாசமாக ஒளிர்வதைப்போன்றே இரவு நேரங்களிலும் ஒளிர்ந்து காணப்படுவதில் எந்த ஒரு ஆச்சரியமுமில்லை.