Published: 04 செப் 2017
இந்தியாவில் தங்கம் மீது விதிக்கப்படும் மூலதன ஆதாய வரி குறித்துப் புரிந்து கொள்ளுதல்
மூலதனச் சொத்துக்களை விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபமே மூலதன ஆதாயம் ஆகும். உரிமையாளர் சொத்தை வைத்திருக்கும் கால அளவைப் பொறுத்து, இந்த மூலதன ஆதாயத் தொகைக்கு ஒரு வரி விதிக்கப்படுகிறது. மூலதன சொத்து பரிமாற்றப்பட்ட ஆண்டுக்கு வரி விதிக்கப்படுகிறது, இந்தியாவில் இது ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரை ஆகும்.
தங்கம் அல்லது தங்க நகைகள் என்பது ஒரு மூலதன சொத்து ஆகும், மேலும் அவற்றை விற்கும்பொழுது (வருமான வரிச் சட்டத்தின் விதிகளின் படி) மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால் எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. ஒரு உரிமையாளர் தங்கத்தை விற்று, அந்த விற்பனையின் மூலம் லாபம் சம்பாதிக்கும் பொழுது மட்டுமே, மூலதன ஆதாயங்கள் வரி விதிக்கப்படும்.
குறுகிய கால மூலதன தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறதுதங்கத்தை மூன்று வருடங்களுக்கும் குறைவாக வைத்திருந்து, பின்னர் இலாபத்திற்கு விற்றால், ஒரு தனிநபர் குறுகிய கால மூலதன ஆதாயங்களை ஈட்டுகிறார். அத்தகைய ஆதாயமானது, தனி நபர்களின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் சேர்க்கப்படும், மேலும் பொருந்தக்கூடிய வரி விகிதங்கள் செலுத்தப்பட வேண்டும். ஒரு குறுகிய கால மூலதன இழப்பு ஏற்பட்டால், இந்தத் தொகையை வேறு ஏதாவது குறுகிய கால மூலதன ஆதாயத்தில் ஈடுசெய்ய முடியும்.
நீண்ட கால மூலதன தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறதுதங்கத்தை மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேலாக வைத்திருந்து விற்று, இலாபம் சம்பாதித்தால் ஒரு சலுகை வரி விகிதம் பொருந்தும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரி என்பது குறியீட்டு நன்மையுடன் 20% ஆகும், அதாவது தங்கத்தின் விலையானது விலை பணவீக்க குறியீட்டில் (சிஐஐ) கணக்கிடப்படும் என்பது இதன் பொருளாகும். இது இந்திய அரசால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் குறியீடாகும், மேலும் அந்த ஆண்டின் பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. எனவே, சிஐஐ கணக்கிட்ட பிறகு, வரியின் அளவானது அதன்படி குறையும். உண்மையில், பணவீக்கம் மிகவும் அதிகமாக இருந்தால், நீங்கள் மூலதன ஆதாயங்களுக்கான வரி எதையும் செலுத்த வேண்டியிருக்காது. மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு, தங்க விற்பனையில் ஒரு மூலதன இழப்பு ஏற்படுகையில், அதை நீண்ட கால மூலதன ஆதாயங்களில் மட்டுமே ஈடுசெய்ய முடியும்.