Published: 12 செப் 2017
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் மற்றும் கேடிஎம் தங்கம் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல்
இந்தியாவில் வாங்கப்படும் பெரும்பாலான தங்க நகைகள் அணிவதற்காக வாங்கப்படுகிறது, மேலும் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் ஆகியவை முதலீட்டுக்காக வாங்கப்படுகின்றன. தங்கம் வாங்குபவர்களுக்கான முக்கிய பிரச்சினை என்பது, அது 22 காரட் தங்கமாக அல்லது 24 காரட் தங்கமா என தரத்தை நிர்ணயிப்பதே ஆகும்.
கடந்த காலங்களில், இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தின் தரம் குறித்த கவலையின் காரணமாக, தங்களின் வெளிநாட்டுப் பயணங்களின்போது தங்கம் வாங்கும் நிலைக்கு பலரை தள்ளியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஹால்மார்க் செய்யப்படுவது வந்த பிறகு, இது தேவையில்லாத ஒன்றாகும் (மிகவும் உயர்ந்த மதிப்புமிக்க நகைக்கடைக்காரர்கள், விற்கப்படும் தங்கத்தின் தூய்மையை பராமரிப்பதில் அதிக நியமங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது சில நேரங்களில் உண்மையாகும்). ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, கேடிஎம் நகைகள் என்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது, இப்போது அதன் சுகாதார அபாயங்கள் காரணமாக அவை இப்பொழுது பின்பற்றப்படுவது இல்லை. கேடிஎம் மற்றும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் இடையிலான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்வோம்.
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம்: தூய்மைக்கான ஒரு உத்தரவாதம்ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் என்பது தங்க ஆபரணங்களின் தரத்தை வாங்குபவர்களுக்கு உறுதி செய்யும் வழிகளில் ஒன்றாகும். இது பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பால் உரிமம் அளிக்கப்பட்ட மதிப்பீட்டு மையம் ஒன்றினால் சான்றளிக்கப்பட்ட தங்கம் ஆகும். ஹால்மார்க்கிங் என்பது இந்தியாவில் நுகர்வோர் பொருட்களின் தரத்தை நிர்வகிப்பதற்கு பொறுப்பான பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட நியமங்களைப் பூர்த்தி செய்யும் நகைக்கு அளிக்கப்படும் சான்றிதழாகும். குறிப்பாக, தங்க நகைகளை உலோகங்களோடு கலக்கும் போது அது குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கிறதா என்பதை இது உறுதிசெய்கிறது.
ஒரு ஹால்மார்க் முத்திரை என்பது நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு :- பிஐஎஸ் லோகோ
- சில்லறை விற்பனையாளரின் லோகோ
- காரட் மற்றும் சுத்தம் ஆகிய அளவுகளில் தூய்மை (916, 875, போன்றவை)
- மதிப்பிடும் மையத்தின் லோகோ
தங்க நகைகளின் தூய்மை என்பது ஒரு ஹால்மார்க் முத்திரையின் லேசர் பொறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதுமான மதிப்பிடும் மையங்கள் இல்லை மற்றும் இந்தியாவின் அனைத்து காரட் நகைகளுக்கும் ஹால்மார்க்கிங் கட்டாயமில்லை என்பது ஹால்மார்க் செய்யப்படும் நகைகளில் உள்ள பாதகமான அம்சமாகும்.
கேடிஎம் தங்கம்கேடிஎம் தங்கம் என்பது பிரபலமடைந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு அபாயகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் சுழற்சியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. இது இனிமேலும் ஏன் பயன்படுத்தப்படாது என்பதை நாம் விளக்குவோம்.
தங்க நகைகளானது வெவ்வேறு பகுதிகளை ஒன்றினைத்து சால்டரிங் செய்வதன் மூலம் அதன் விரிவான வடிவமைப்புகளை பெறுகின்றன. சால்டரிங் செய்வதற்கு, தங்கத்தை விட குறைவான உருகும் திறன் கொண்ட பொருள் பயன்படுத்தப்படுகிறது. சால்டரிங் பொருள் என்பது பாரம்பரியமாக தங்கம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் கலவையாக இருந்தது; 60 சதவீதம் தங்கக் கலவை மற்றும் 40 சதவீதம் தாமிரம் என அதன் விகிதம் இருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கத்தில் அசுத்தங்கள் சேர்கின்றன. உதாரணமாக, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு 22-காரட் தங்க வளையலை, மறுவிற்பனையின்பொழுது உருக்கும்பொழுது, அதன் குறைவான தூய்மை காரணமாக அதன் மதிப்பு குறைகிறது. செயலாக்கம் செய்த பிறகு தங்கத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்கு, தாமிரத்திற்கு மாற்றாக காட்மியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தங்கம் மற்றும் தாமிரம் சால்டர் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறை போல் அல்லாமல், தங்கம் மற்றும் காட்மியம் ஆகியவற்றை 92 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்ற விகிதத்தில் கலந்து, 92 சதவீத தூய்மையை உறுதிப்படுத்த முடியும். காட்மியம்-சால்டர் செய்யப்பட்ட நகைகளே கேடிஎம் நகைகள் என்று பரவலாக அறியப்பட்டன. இருப்பினும், அவற்றை அணிபவர்களுக்கு கடுமையான சுகாதார அபாயங்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது, எனவே இந்தத் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டு, அதற்கு பதிலாக பிற மேம்பட்ட உலோகக் கலவைகளால் மாற்றப்பட்டது.