Published: 29 அக் 2018
மத்திய கிழக்கில் தங்கத்தின் பங்கு
பல்வேறு நூற்றாண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகளில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் இந்நாடுகளில் ஆழமான பொருளாதார, கலாச்சார, சமூக, மற்றும் அழகியல் ரீதியான ஒற்றுமை இந்நாடுகளுக்கு உண்டு என்று சொல்லத்தேவையில்லை.
தங்கத்துடன் மத்திய கிழக்கின் முதல் உடன்படிக்கை
மத்திய கிழக்கு சமூகத்தில் தங்கத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கிய ஆதாரம் விவிலிய குறிப்புக்களாகும். அந்த காலத்தில் மாபெரும் நிதி அளவீடு தங்கமாகத்தான் இருந்தது. அரை ஷெக்கல், ஷெக்கல் மற்றும் டேலண்ட் ஆகியவை மூன்று முக்கிய எடைப்பொருட்களாகும். தங்க டேலண்ட் எனப்படுவது மிகப்பெரிய நிதி அளவீடாக இருந்தது. 35 கிகி எடையளவு கொண்ட தங்கத்தை அது குறித்தது. தங்கத்தின் உலோகக் கலவையான ஷெக்கல் என்பது பச்சை தங்கம் அல்லது எலக்டிரம் என்று அழைக்கப்படும். இந்த எடையளவு 11.3 கிராம் எடை கொண்டது. 3000 ஷெக்கல்கள் இணைந்த ஒரு டேலண்ட்டை உருவாக்கும்.
விசித்திர உண்மை: தங்கத்தின் ஒரு டேலண்ட்டின் இன்றைய மதிப்பு ஏறத்தாழ $432,132!
இது வெறும் துவக்கம் மட்டும்தான். நகை வடிவமைப்பிலும் முன்னுரிமை பெற்ற உலோகமாக விரைவிலேயே தங்கம் வளர்ந்தது.
கண்டங்கள் தாண்டிய பிரதேசத்தில் முதல் பொன் வேலைப்பாடு கி.மு. 2400லிருந்து துவங்குகிறது. மெசபடோமியாவின் (தற்போதைய இராக்) இராஜாங்க கல்லறையில் மர வீணைகளிலும் யாழிலும் தங்கம் பதிக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்து கோவில்கள், சமாதிகள், சிலைகள், ஆயுதங்கள், கண்ணாடி பாத்திரங்கள் மற்றும் மசூதிகளில் அலங்கரிப்பதற்காக தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 6000 ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் பண்டைய நாகரிகங்களில் தங்கம் நகையாகப் பயன்படுத்தப்பட்டது.
காலம் செல்லச்செல்ல பல்வேறு கண்டுபிடிப்புகளை தங்கத்தின் விரிவான பயன்பாடு கொண்டு வந்தது. அந்தக் காலங்களிலிருந்து பெற்ற சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
தங்கத்தின் தூய்மையைக் கண்டறிய உதவும் பழைய முறைகளில் ஒன்று அனல் மதிப்பீடு (இணைவு முறை மூலம் அசுத்தத்திலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது). இந்த முறை பாபிலோனியர்களால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்குப் பின், தங்கத்தின் வலிமையையும் நீடித்த தன்மையையும் கூட்ட அதனுடன் மற்ற உலோகங்களை கலவை செய்ய ◌வேண்டும் என்றும் அதனுடன் நிறமிகளை சேர்க்கலாம் என்றும் எகிப்தியர்கள் கண்டறிந்தார்கள்.
அதே நேரத்தில்தான் எகிப்தியர்கள் மெழுகு தொலைத்த வார்ப்பு என்ற வார்ப்பு முறையை ஆய்வு செய்தார்கள். இதன்படி ஒரு மெழுகு சிலையிலிருந்து அதே மாதிரியான தங்க சிலையை வார்த்தெடுத்தல். நுண்ணிய, துல்லியமான சிலைகளை வடிவமைக்க இன்றும் இந்த முறையே பயன்படுத்தப்படுகிறது.
பண்டைய மத்திய கிழக்கில் தங்கம் ஆற்றிய முக்கிய பங்கினை விளக்க சில முறைகள் உள்ளன. உலகளாவிய தங்க சமூகத்தில் இன்று தன் பங்கினை மத்திய கிழக்கு எவ்வாறு எடுத்துச் சென்றுள்ளது என்பது குறித்த ஒரு சிறிய பார்வை இதோ:
தங்கத்திற்கான நவீனகால மையம்
தங்கத்திற்கான உலகின் மாபெரும் ஆதாரம் மத்திய கிழக்குதான். தங்கத்தின் இரண்டாவது பெரிய சந்தையும் மத்திய கிழக் குதான். சர்வதேச தங்க சந்தையில் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக துபாய் விளங்குகிறது. இதற்கு தங்க நகரம் என்று பெயர்.
இது எப்படி ஏற்பட்டது?
1990களில் வணிகர்கள் வரியற்ற மற்றும் வர்த்தகத்திற்கு இணக்கமான துபாய் சூழலினால் கவரப்பட்டார்கள். துறைமுகத்திற்கும் சிற்றோடைக்கும் அருகில் கடைகளைத் துவங்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில், மேலும் அதிக வணிகர்கள் அங்கு கடைகளை ஆரம்பித்து தங்கம் விற்க ஆரம்பித்தனர். எந்த தங்க சந்தையின் வெற்றிக்கும் தேவையான முக்கிய உட்பொருட்களை துபாய் அளிக்கிறது – பாதுகாப்பு, பத்திரத் தன்மை, வணிகம் செய்வதில் இலகுத்தன்மை, தங்கத்தை வினியோகிக்கும் மற்றும் விற்கும் ஆதாரங்களுக்கான அருகாமை என அனைத்தையும் துபாய் வழங்குகிறது. இன்று துபாயின் புகழ்பெற்ற தங்க சதுக்கத்தில் 400க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் ஒட்டுமொத்த விலை தங்க நகைக்கடைகள் உள்ளன. உலகிலேயே பெரிய சில்லறை தங்க சந்தைகளில் துபாய் ஒன்று. உலகெங்கும் உள்ள தங்க காதலர்கள், தங்க நகைகளில் சிறந்த விற்பனை வேண்டுமென்றால் துபாய்க்கு வருகின்றனர்.
தங்க நகையோ அல்லது பணமோ, மத்திய கிழக் கு நாடுகள் தங்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்போது தங்கம் நிலைத்தன்மையை அளிக்கிறது. மத்திய கிழக்கில் வாங்கப்படும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு, குறிப்பாக வங்கி முறை அதிகம் ஊடுருவாத கிராமப்பற பகுதிகளில் சேமிப்பிற்காகப் பயன்படுகிறது. மத்திய கிழக்கில் உள்ள பெண்களுக்கு தங்கம் நிதி பாதுகாப்பையும் அளிக்கிறது. துரதிருஷ்டவசமான நேரத்தில் அவர்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.