Published: 05 செப் 2017

எதிர்பாராத தங்கம்: நிலவில்

நிலவு என்பது பூமியின் ஒரே துணைக்கோள் ஆகும். இது பூமியிலிருந்து 384,400 கிமீ தூரத்தில் உள்ளது. இது நமது கிரகத்தின் அளவில் சுமார் 27% அளவுக்கு உள்ளது. மேலும் பூமியின் அரிதான மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி உட்பட), தண்ணீர் மற்றும் ஹீலியம் ஆகியவற்றை அகழ்வதற்கான ஒரு இலக்காகக் கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டு பிப்ரவரியில், சந்திரனின் மேற்பரப்பின் கலவையை ஆராயும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும், சந்திரனைப் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான ரோபோக்களை உருவாக்க அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக நாசா அறிவித்தது. சந்திரனின் தென் துருவத்தில் உள்ள ரெகோலித் (நிலவின் மண்) என்பதன் மேல்பகுதியில் உள்ள 10 சென்டிமீட்டர் பரப்பளவில், பூமியின் வளமான சுரங்கங்களைக் காட்டிலும் 100 மடங்கு அதிகத் தங்கம் இருப்பதாக சேட்டிலைட் இமேஜிங் காட்டுகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலவில் இருந்து எதையாவது அகழ்வது என்ற யோசனையைக் கேட்டால், பெரும்பாலான புவியியலாளர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள். விண்வெளிப் பயணத்திற்கான செலவு மிகவும் அதிகம் என்பதுடன் தொழில்நுட்ப ரீதியாக சவாலானதும் ஆகும். உண்மையில், சந்திரனில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைப்பதற்கு சுமார் $ 250,000 செலவாகும். இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களானது தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவியிருக்கின்றன, மேலும் சந்திரனில் அகழ்வது என்பதை ஒரு அடையக்கூடிய இலக்காக ஆக்கும் வகையில் செலவுகளையும் அபாயங்களையும் குறைத்திருக்கின்றன. உண்மையில், 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிலவில் ஒரு சிறிய ரோபோ விண்கலத்தை தரை இறக்க முடியும் என்று நம்புவதாக கோடீஸ்வரர் மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான மூன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் நவீன் ஜெயின் என்பவர் கூறுகிறார். பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும், தங்கம், பிளாட்டினம் குழு உலோகங்கள் மற்றும் தண்ணீர் உட்பட மதிப்புமிக்க வளங்களுக்காக சந்திரனில் அகழ்வு மேற்கொள்ள முடியும் என்று மூன் எக்ஸ்பிரஸ் நம்புகிறது.

ஆனால் சந்திரனில் அகழ்வு மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் விஞ்ஞானம் சார்ந்தவை அல்ல. சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளின்படி, எந்தவொரு நபர் அல்லது நாட்டிற்கும், பூமிக்கு அப்பால் உள்ள எந்தவொரு இடத்திலும் உரிமை கிடையாது அல்லது உரிமை கோர முடியாது. சந்திரனில் உள்ள வளங்களைப் பிரித்தெடுப்பது சாத்தியமானால், தங்கத்திற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பதில் மோதல் ஏற்படலாம் என்பது இதன் பொருளாகும்.

ஆதாரம்:
Source1, Source2