Published: 01 செப் 2017
தங்க விரும்பிகளின் சொர்க்கமாக கேரளாவை மாற்றியுள்ளது எது
இந்தியாவில் தங்கத்திற்கான காதல் இரகசியம் இல்லை என்றாலும், கேரள மக்கள் இந்த விலை உயர்ந்த உலோகத்தின் மீது ஈடுஇணை இல்லாத ஒட்டுதல் கொண்டுள்ளனர். கேரள மக்களின் வாழ்வில் தங்கம் எவ்வளவு பெரிய பங்காற்றுகிறது என்பது குறித்த சில தகவல்கள்.
தங்கமும் வழிபாடும்உண்மையிலேயே கேரளா தங்கத்தின் சொந்த நாடு. இங்கிருக்கும் கடவுள் கூட தங்கத்தை விரும்புவார். கேரளாவின் பிரபலமான பத்மநாபசாமி கோவில் 1.2 டிரில்லியன் மதிப்புள்ள உலோகங்களை (தங்கம் உட்பட) கொண்டுள்ளது. திருவிதாங்கர் சமஸ்தானத்தின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்க செல்வத்தை இந்தக் கோவிலில் சேர்த்து வைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதில் பல்வேறு விதமான தங்க நகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவையாவன. 18 அடி நீளம் கொண்ட தங்க சங்கிலி, 500 கிலோ எடை கொண்ட தங்கக்கற்றை சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட 3.5 அடி உயர மகாவிஷ்ணுவின் விக்கிரகம் ஆகியவை. ஏ (A) விலிருந்து எஃப்(f) வரை உள்ள ஆறு பெட்டகங்கள் இந்தக் கோவிலில் உள்ளன. இதில் பி பெட்டகம் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. 2014ஆம் ஆண்டின் அறிக்கைகள் படி ஜி மற்றும் எச் (G & H) என்று இரண்டு வகையான பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றிலேயே மிகவும் செல்வம் கொண்ட வழிபாட்டுத்தலமாக இந்த கோவிலை இது மாற்றியுள்ளது.
கோவில்களுக்குப் பிறகு, கேரளாவின் தங்க பட்டியலில் இரண்டாவது இடம் பண்டிகைகளுக்கு உண்டு. ஓணம் மற்றும் விஷூ பண்டிகைகளின்போது கேரளாவில் தங்க விற்பனை சூடு பிடிக்கும். கேரள மக்களின் புத்தாண்டான விஷூ, தங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் போது தங்க வெள்ளரி உட்பட தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
பண்டிகைகளின்போது கேரள மக்கள் தங்கம் வாங்கும் அளவுடன் ஒப்பிடும்போது, கேரளாவின் மூன்று தங்க நகைக் கம்பெனிகளும் வைத்துள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு ஆச்சர்யத்திற்கு உரியது அல்ல. இந்த மூன்று நிறுவனங்களும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 250 டன்கள் தங்கம் வைத்திருந்தார்கள். பெல்ஜியம், சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தங்க பெட்டகங்களை விட இது மிகவும் அதிகம்.
தங்கமும் நகையும்கேரளாவில் உள்ள ஒரு கிராமம் குறித்த கதை மிகவும் அதிசயமானது. கேரளாவில் கோழிக்கோடு நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கிராமம் கொடுவலி . இதில் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 100 நகைக்கடைகள் உள்ளன. அடுத்தமுறை நீங்கள் தென்னிந்தியாவிற்கு சுற்றுலா செல்லும்போது, கேரளாவிற்கு செல்ல தவறாதீர்கள். இது உண்மையிலேயே தங்க விரும்பிகளின் சொர்க்கம்.
தங்கமும் திருமணங்களும்தங்க ஆபரணங்கள் என்று வரும்போது கேரள மணமகளை அலங்கரிப்பது போன்ற தங்க ஆபரணங்கள் எங்குமே கிடையாது. உயர் மத்திய தர வர்க்க கேரள மணமகள் அணியும் சராசரி தங்க நகையின் எடை 320 கிராம்கள் இருக்கும். இதன் மதிப்பு 9 இலட்சம் ரூபாய். கேரளாவின் மணமகள் உண்மையிலேயே இந்தியாவின் தங்க மங்கைதான்.
சராசரியாக, மணமகள்கள் பல்வேறு நீளத்திலும் பாணியிலும் தங்க நெக்லேஸ்களை அணிவார்கள். இதனால் அடுக்கடுக்கான தோற்றம் கிடைக்கும். (Typically, brides wear gold necklaces of varying lengths and styles, giving a layered look. ) இதில் மிகவும் சிறிய நகைக்கு சோக்கர்(choker) என்று பெயர். இது கழுத்தை சுற்றிலும் அணியப்படுகிறது. உடலைச் சுற்றி அணியப்படும் உடல் சங்கிலியும் உண்டு. இது பொதுவாக இடுப்பை அலங்கரிக்கும். பின்னர் நன்கு ஆடக்கூடிய காதணிகளை (ஜிமிக்கியைப் போன்றவை jhumkaas) அணிவார்கள். பல்வேறு விதமான வளையல்களையும் அணிவார்கள். மணமகள் அதிகத் தங்கம் ஏன் அணிய வேண்டும் என்பது அந்த மணமகளின் நிதி அந்தஸ்தை பிரதிபலிக்கும் விஷயமாக இருக்கும்.
தொடர்புடையது: மரியாதை, அந்தஸ்து மற்றும் கௌரவம் – தங்கம் வாங்குவதற்கான சமூக நன்மைகள்
தங்கத்தின் தேவைIஉண்மையில், கிராமப்புற கேரளாவில் தங்கத்தின் மீதான மாதாந்திர செலவு ரூ.210ஆக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலேயே இது மிகவும் அதிகம். இது தங்கம் அதிகமாக நுகரும் மற்ற மாநிலங்களை விட அதிகம் (கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், மற்றும் பஞ்சாப் ).