Published: 10 செப் 2018
உலகின் மிகப்பெரிய தங்க அருங்காட்சியகம் – ம்யூசியோ டெல் ஓரோ.
தொடக்க கால தென் அமெரிக்க உள்நாட்டு கலாச்சாரத்தை சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தூய தங்க கைவினைப் பொருட்களுக்கு இடமளித்துள்ள கொலம்பியா மாகாணத்தின் பொகாடாவில் உள்ள ம்யூசியோ டெல் ஓரோ அருங்காட்சியகம் நீங்கள் கட்டாயம் ஒருமுறை பார்க்க வேண்டிய இடமாகும். வரலாற்றில் உலகப் பிரசித்தி பெற்ற இந்த இடத்தின் தங்கக் கதைகளைப் பற்றிய ஒரு வழிகாட்டி சுற்றுலா இங்கே.
அற்புதமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு கருவூல அறைகள், விலங்கு சிற்பங்கள் முதல் சடங்குகளின் அத்தியாவசிய வடிவங்கள் வரை அணிவகுத்து நிற்கும் பல்வேறு காட்சிப்பொருட்களின் அழகை கண்டு பாராட்டி மகிழ காலத்தினூடே பயணம் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இரண்டாம் தளத்தில் நிரந்தர கண்காட்சிகளின் காட்சிப்படுத்தல் தொடங்குகிறது. முதல் அறை ‘முந்தைய ஹிஸ்பானிக் கொலம்பியாவின் மக்கள் மற்றும் தங்கம்’ என்று அறியப்படுகிறது. இந்த அறை கலிமா, முய்ஸ்கா, சான் அகஸ்டின், டைரோனா, டைராடென்ட்ரோ, டோலிமா, க்விம்பாயா, உராபா, மற்றும் ஜெனு பழங்குடி பொற்கொல்லர்களின் உண்மையான வேலைப்பாடுகளை காட்சிப்படுத்துகிறது. மேலும் ‘கொலம்பஸுக்கு பிறகான’ சகாப்தத்திற்காக ஒரு பிரத்யேக பிரிவு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த தளங்கள் மாந்திரீக விழாக்களின் ரகசியங்களை திறந்து காட்டுகிறது மேலும் ‘படையல் அறை’, ‘படையல் படகு’, மற்றும் ‘ஏரி’ என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகள் மூன்று சடங்குகளின் சம்பிரதாயங்களை மூன்று படிநிலைகளில் பிரதிபலிக்கிறது. இறுதி அறை ‘ஆழ்ந்த ஞானத்திற்கான அறை’ யாக அறியப்படுகிறது. அங்கே நீங்கள் சில தங்கப பொருட்களின் வரலாற்றை வசீகரமான கானொளிகள் வழியாக அறியலாம்.
அருங்காட்சியகத்தின் மிக உயர் மதிப்பு கொண்ட சொத்துக்களில் முயூஸிகா ராஃப்டும் ஒன்றாகும். இந்தக் கலைப்பொருள் ஒரு முந்தைய கொலம்பிய தங்க வேலைப்பாட்டிற்கான நிரூபணமாகும் மேலும் இது எல்-டொராடு என்னும் தங்கத்தால் செய்யப்பட்ட நகரத்தைப் பற்றிய புராணக் கதையின் முன்னோடியாக பிரசித்தி பெற்று அறியப்படுகிறது. இங்கு காட்சிப்படுத்தப்படும் தங்க படகு பண்டைய பழங்குடியினரால் தொடக்க விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்தக் கதையின் பின்னணியில் குவாடாவிடா ஏரியில் புதிய தலைமையை நியமிக்க விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்த சடங்குக்காக தலைமைப்பதவிக்கான வாரிசுதாரர் அவரது உடலை தங்கத் துகள்களால் மூடி தங்கம் மற்றும் மரகதம் ஆகியவற்றை கடவுளுக்கு படையலாக எடுத்துக் கொண்டு ஏரியில் குதிப்பார். மேலும் அருங்காட்சியகத்தில் மற்றுமொரு கண்காட்சி தங்க இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட முக்கிய தலைவர்களை காட்சிப்படுத்துகிறது.
இந்த அருங்காட்சியகம் அந்த சகாப்தத்தின் கலைஞர்களின் அசாதரண உலோக வேலைப்பாட்டு திறன்களுக்கான சான்றாக முந்தைய கொலம்பிய சேகரிப்புகளான 1,586 தங்கப் பொருட்களை பெருமையாக காட்சிப்படுத்துகிறது. இந்த அருங்காட்சியகம் இந்தப் பொருட்களின் பயன்பாடு, நோக்கம் மற்றும் அந்த சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 1934 இல் கொலம்பியாவின் தொல்பொருள்
மரபை பாதுகாக்கவும் காப்பாற்றவும் பாங்க் ஆஃப் ரிபப்ளிக் (கொலம்பியா) மேற்கொண்ட முயற்சி இன்று நாட்டின் அதிக அளவில் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத் தலமாக வளர்ச்சியடைந்துள்ளது! கடந்த எட்டு தசாப்தங்களாக, இந்த தங்க அருங்காட்சியகம் பலமுறை சீரமைப்பு செய்யப்பட்டு இன்று அங்கு தற்காலிக கண்காட்சி அறைகள், ஒரு அரங்கம், ஒரு உணவு விடுதி, கஃபே மற்றும் நினைவுப் பொருட்களின் கடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ம்யூசியோ டெல் ஒரோவில், மின்னுவதெல்லாம் உண்மையில் பொன்னே என்று சொல்வது பாதுகாப்பானது!