Published: 12 செப் 2017
சர்டோஸி – தங்க இழை
இந்தியர்கள் திருவிழாக்கள் மற்றும் விழாக்களை பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்; பெரும்பாலும் ஒவ்வொரு விழா சமயத்திலும் புதிய ஆடைகள் மற்றும் தங்க நகைகள் உட்பட ஆபரணங்கள் வாங்கப்படுகின்றன. ஆடைகள் பெரும்பாலும் ஓரங்களில் தங்க நூல் எம்பிராய்டரி கொண்ட ஜரிகையுடன் (தங்க-ஜரிகை) வடிவமைக்கப்படுகின்றன.
சர்டோஸி என்பது ஒரு புகழ்பெற்ற தங்க எம்பிராய்டரி ஆகும்; இது பாரசீகத்தில் தோன்றியது, பாரசீக வார்த்தையான "சர்" என்பதற்கு தங்கம் என்றும், "டோஸி" என்பதற்கு எம்பிராய்டரி என்றும் அர்த்தமாகும் – இந்த வளமான கலைநயமானது முகலாய காலத்தில் இந்தியாவிற்குள் வந்தது. இந்த எம்பிராய்டரியானது ரிக் வேத காலத்தில் உள்ள இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்திய மஹாராஜாக்களின் அரச உடைகளிலும், முகலாயர்களின் கூடார சுவர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.
பிற்பகுதியில், நவாப்களுக்கு இருந்த அதிக தேவை காரணமாக, நவாப்களின் நகரான லக்னோ, இந்த வகையான எம்பிராய்டரிக்கான மையமாக மாறியது. 2013ஆம் ஆண்டில், "லக்னோ சர்டோஸி" என்பது புவியியல் சார்ந்த குறியீட்டு பதிவகம் (ஜியோகிராஃபிகல் இண்டிகேஷன் – ஜிஐ) மூலமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிராண்ட் ஆக ஆனது. தற்போது, லக்னோ சர்டோஸியில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு சிறு நிறுவனங்களானது இந்தியா முழுவதும், மற்றும் பாகிஸ்தானிலும், ஈரானிலும் புகழ்பெற்று விளங்குகின்றன.
நேர்த்தியாக ஊசி மூலம் செய்யப்படும் வேலைப்பாடானது, தங்கத்தின் ஒரு கலவையில் இருந்து தயார் செய்யப்படுகிற தங்க நூலைப் பயன்படுத்துகிறது. உலோகக் கட்டிகள் உருக்கப்பட்டு, துளையிடப்பட்ட இரும்பு கம்பிகளின் ஊடாக அழுத்தப்படுவதன் ஒரு நேர்த்தியான கம்பி உருவாகிறது, அதை சுத்தியலால் அடித்து மேலும் தட்டையாக்கலாம். இந்தக் கம்பிகளைப் பின்னர் பட்டு இழையை சுற்றி முறுக்கி, தடிமனான, சுருள் போன்ற சர்டோஸி நூலை உருவாக்கலாம். வட்டு மற்றும் மணிகள் போன்ற மற்ற தங்க அலங்காரங்களானது பெரும்பாலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த இதனுடன் சேர்க்கப்படும்.
பாரம்பரிய வழிமுறைகளுக்குப் பதிலாக நவீன இயந்திரங்கள் மற்றும் உத்திகள் வந்துவிட்ட போதிலும், லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர், இந்த வகையான பாரம்பரிய எம்பிராய்டரி உருவாக்கத் தேவையான திறன்களை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்கின்றனர்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமுள்ள அதிக அளவிலான தேவைகளின் காரணமாக, சர்டோஸி வேலைப்பாடுகளானது ஆடைகள், கோட்டுகள், பணப்பைகள், பெல்ட்கள், ஸ்டோல்கள், காலணிகள் போன்ற பலவிதமான ஆடைகள் மற்றும் ஆபரணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளில், பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் அழகான சர்டோஸி வடிவமைப்புகளை அணிந்திருப்பதைக் காணலாம்.