Published: 20 பிப் 2018
விளையாட்டில் தங்கம்
தங்கத்துக்கான போட்டி - இந்த வாக்கியத்தை பல்வேறு வடிவங்களில் விளையாட்டுகளில் எந்த அளவு கேட்டிருக்கிறோம்? ஒட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அதைப் பற்றி எல்லா நேரமும் பேசுகிறரா்கள். தினசரிகளில் இதை தலையங்கமாகப் பார்க்கமுடிகிறது. விளையாட்டில் தங்கம் என்பது வெற்றி என்பதன் பொருளாகவே மாறிவிட்டது.
ஒலிம்பிக் பதக்க முறையில் பெரும்பாலான விளையாட்டுகளுக்கான பரிசாக, வெற்றியாளருக்கு தங்கம், இரண்டாம் இடம் பெறுபவருக்கு வெள்ளி மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு வெண்கலம் வழங்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் இல்லாத மற்ற போட்டிகளில், உதாரணமாக விம்பிள்டன் ஃபார்முலா ஒன் பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் போன்றவற்றில் வெற்றியாளருக்குத் தங்கக் கோப்பையைப் பரிசளிக்கிறார்கள். இவையெல்லாம் சுத்தமான தங்கமன்று, ஒலிம்பிக் பதக்கங்களும் சுத்தமான தங்கமன்று, ஆனால் அவை தங்கத்தைப் போன்று தோன்றுவதற்கு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளன, எனவே முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.
ஆனால் அது எப்போதும் அப்படியல்ல. தங்கம் எல்லா காலங்களிலும் சாதனையின் அளவீடாக இருந்ததில்லை, ஒலிம்பிக்கில் கூட. பண்டைய விளையாட்டுகளில், வெற்றியாளருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும், அவருக்கு ஆலிவ் மாலை சூட்டப்படும். 1896-ல், முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டில், வெற்றியாளருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்றவருக்கு செப்புப் பதக்கமும் அளிக்கப்பட்டது மேலும் மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஒன்றும் அளிக்கப்படவில்லை. தங்கம் பயன்படுத்துவதற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.
முதல் மூன்று இடங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வழங்கும் முறை, யுனைட்டட் ஸ்டேட்ஸின், செய்ண்ட் லூயில், மிஸொரியில் 1904 ஆம் ஆண்டு நடந்த கோடை ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக வழக்கத்துக்கு வந்தது. அப்போதிருந்து, இந்த நடைமுறை தொடர்கிறது மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஒலிம்பிக் விளையாட்டின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்குவதை பின்பற்றுகிறது. 1912 ஒலிம்பிக் விளையாட்டில்தான் கடைசியாகப் பதக்கங்கள் முழுவதுமாக தங்கத்தில் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு தங்கப்பதக்கமும் குறைந்தபட்சம் 92.5% வெள்ளியையும், ஆறு கிராம் தங்கத்தையும் கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரையறை செய்துள்ளது. 2102 லண்டன் ஒலிம்பிக்ஸிலிருந்து செப்பு மீண்டும் உட்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. வீரர்களின் கழுத்தில் பதக்கத்தைத் தொங்கவிடும் ரிப்பன்களில் உள்ள பிளாஸ்டிக்கில் பாதி மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களில் இருந்து வருகிறது.