உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட தங்க நகைத் திட்டங்கள்
இந்தத் திட்டங்கள் எதை வழங்குகின்றன என்பன இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தங்க நகைகள் வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. இந்திய குடும்பங்கள் 22,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்துள்ளன. மேலும், ஒவ்வொரு வருடமும் நகைகளை உற்பத்தி செய்வதற்காக 600 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தங்கத்தின் தூய்மையை கணிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. தூய தங்கத்தையும் மற்றும் மஞ்சளாகத் தோன்றும் ஒரு உலோகத்தையும் நீங்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிவீர்கள்? மிகவும் விலைமதிப்பற்ற இந்த பொருளின் தூய்மையை எவ்வாறு உறுதிசெய்வது?
ஹால்மார்க்கிங் என்ன?
உங்கள் சருமம் சில உலோகங்களை பயன்படுத்தும் போது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதனால், தங்கமானது அதிக உணர்வுள்ள சருமத்தைக் கூட பாதிக்காத ஒரு அற்புதமான உலோகமாக இருக்கிறது. இருப்பினும், நகைகளை செய்யும் போது ஈயம் அல்லது வெள்ளி போன்ற பிற உலோகங்கள் பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன மற்றும் இந்த உலோகங்கள் தங்கத்தைப் போல பாதிப்பை ஏற்படுத்தாதவைகளாக இருப்பதில்லை. இவை காலப் போக்கில் நகைகளின் பளபளப்பையும் மங்கச் செய்யும். மேலும், வழக்கமாக அணியப்படும் நகைகள் வியர்வை, சோப்பில் உள்ள கெமிக்கல்கள் போன்றவை படுவதனால் அழுக்காகிவிடுகின்றன.